Monday, October 14, 2019

மரம் வளர்ப்போம் மழைபெறுபோம் - வண்ணக ஒத்தாழிசைக் கலிப்பா

தரவு, தாழிசை, அராகம், அம்போதரங்கம், தனிச்சொல், சுரிதகம்

நேற்றுவரை நீயிருந்தாய் என்னோடு இன்றுன்னை
வோறொடு சாய்த்துவிட்டார் மண்ணோடு நீஇருந்த
காலத்தில் காய்கனிகள் தந்தெனக்குப் பசிதீர்த்தாய்
நிலவுபோல குளிர்காத்து நிழல்தந்தாய் நான்அயர்ந்த
நேர்த்தில் எனைக்கிடத்தி சோர்வுதீர்த்தாய் உடைதந்தாய்
மருந்துதந்தாய் இத்தனையும் கொடுத்தஉன்னை வெட்டிவிட்டார்.

உறவைவெட்டிச் சாய்த்தாலும் கவலைஒன்றும் எனக்கில்லை
உறுப்பைவெட்டிச் சாய்த்தாலும் வருத்தமொன்றும் எனக்கில்லை
மரத்தைவெட்டிச் சாய்கின்றார் மனம்நொந்து வறுந்துதடா.

சிரிப்பைவெட்டிச் சாய்த்தாலும் சிரமின்றி நானிருப்பேன்
பொருளைவெட்டிச் சாய்த்தாலும் வருத்தமின்றி நான்சிரிப்பேன்
மரத்தைவெட்டிச் சாய்க்கின்றார் உயிர்நொந்துப் போகுதடா.

அறிவைவெட்டிச் சாய்த்தாலும் அமைதியாக நின்றிடுவேன்
பிறவிவெட்டிச் சாய்த்தாலும் பெருமையோடு ஏற்றிடுவேன்
மரத்தைவெட்டிச் சாய்கின்றார் உடல்நொந்து வாடுதடா.

மரத்தினைச் செதுக்கிட நினைப்பவர்க்கு
          அவரது தோலினை உரித்திடணும்
மரத்தது கிளையினை வெட்டுவாரை
          அவரது கையினை வெட்டிடணும்
மரத்தது தழையினைக் கழிப்பவர்க்கு
          அவரது தசையினை அறுத்திடணும்
மரத்தையே முழுமையாய் அழிப்பவர்க்கு
          மரண தண்டனை கொடுத்திடணும்

மனிதனைக் கொல்வரை உயிர்க்கொலை என்கிறோம்
மனிதன்போல் விலங்கினைக் கொல்வதும் அதுவாகும்
பறவையைக் கொல்வதும் உயிர்க்கொலை ஆகுமே
மரத்தினைக் கொல்வது உயிர்க்கொலை இல்லையா?

புவியின் உடலை குளிரச் செய்திடும்
புவிமேல் நமது உயிரைக் காத்திடும்
புவியில் இதனால் மழையும் பெய்திடும்
புவியில் உயிர்கள் செழித்து வாழ்ந்திடும்

உண்டிட கீரைகள் தருதடா
உன்உடல் மருந்தும் அதுவடா
உன்உடல் மரத்தினால் வாழுது
மனிதனே நினைத்ததைப் போற்றிடு.