Thursday, April 25, 2024

குடும்ப முன்னேற்றத்திற்குப் பெரிதும் காரணமாக இருப்பவர்கள் ஆண்களே! பெண்களே!

April 25, 2024
குடும்ப முன்னேற்றத்திற்குப் பெரிதும் காரணமாக இருப்பவர்கள் ஆண்களே! பெண்களே!

கடலூர் மாவட்டம் பண்ணுருட்டி வட்டம் பூண்டி குச்சிப்பாளையத்தில் அமைந்தள்ள அருள்மிகு ஸ்ரீ சிந்தாலம்மன் ஆலையச் சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு நடத்தப்படும்

குடும்ப முன்னேற்றத்திற்குப் பெரிதும் காரணமாக இருப்பவர்கள் ஆண்களே பெண்களே என்ற சிறப்புப் பட்டிமன்றத்தின் நடுவராக வீற்றிருக்கும் பண்ணுருட்டி செந்தமிழ்ச் சங்கம் மற்றும் அனைத்துலகப் பொங்குதமிழ்ச் சங்கம் ஆகியவற்றின் தலைவர் மதிப்புறு முனைவர் பாவலர் சுந்தரபழனியப்பன் ஐயா அவர்களுக்கும்

 

என் கருத்துக்கு வலுசேர்த்துக் கொண்டிருக்கும் எங்க  அணியினருக்கும்

எங்கள் கருத்துக்கு எதிராக வாதாட வந்திருக்கும் எதிர் அணியினருக்கும்

இந்தப் பட்டிமன்ற நிகழ்வைக் கேட்டு, ரசித்து, உற்சாகமூட்டக் காத்துக் கொண்டிருக்கும் என் அன்பு உறவுகளுக்கும்

என் மாலை வணக்கத்தை முதற்கண் தெரிவித்துக் கொள்கிறேன்.

நடுவர் அவர்களே

தலைப்பை நன்றாக கவனியுங்கள்.

குடும்ப முன்னேற்றத்திற்குப் பெரிதும் காரணமாக இருப்பவர்கள் யார்?

பெரிதும் என்பது மிகுதியாக என்ற அர்த்தத்தைக் கொண்டது. அதாவது குடும்ப வளர்ச்சிக்கு 90 சதவீதம் காரணமாக இருப்பவர்கள் யார் என்பதை முடிவு செய்வதற்காகத்தான் இந்தப் பட்டிமன்றம்.

ஆண்களுக்கும் பெண்களுக்குமான வித்தியாசங்கள்

ஒரு விஷயத்தை ஆண்கள் பார்க்கும் பார்வைக்கும் பெண்கள் பார்க்கும் பார்வைக்கும் வித்தியாசம் உண்டு.

ஒன்னுமில்ல. நானும் என் மனைவியும் பைக்குல போய்கிட்டிருந்தோம். அப்போ,

ஓர் ஆணும் பெண்ணும்  பைக்குல போய்கிட்டிருந்தாங்க. என் மனைவி சொன்னாங்க. ஏங்க அங்க பாருங்களேன் அப்படின்னாங்க

நான் பார்த்துட்டு ஆமாம் ஏதோ புதுசா கல்யாணம் ஆனவங்க போராங்க போலிருக்கு அப்படின்னேன்

அப்போ என் மனைவி சொன்னாங்க அதுக்காக இப்படியா ஒராசிகிட்டு போரது

ஆண் எல்லவற்றையும் நல்ல விதமாகப் பார்க்கக் கூடியவன்.

பெண் மாத்தி யோசிக்கக் கூடியவளாக இருக்கிறாள்.

 

குடும்ப முன்னேற்றம் என்பது

1.      ஒற்றுமையை அடிப்படையாகக் கொண்டது.

2.      விட்டுக் கொடுத்தலை அடிப்படையாகக் கொண்டது.

3.      பொருளாதாரத்தை அடிப்படையாகக் கொண்டது.

 

குடும்ப ஒற்றுமை

எந்த ஒரு ஆணும் உங்க அம்மா அப்பாவோட பேசக் கூடாது. உங்க அண்ணன் தம்பி அக்காள் தங்கைகளோடு பேசக் கூடாது என்று சொல்லமாட்டான்.

அவன் பேசாமல் இருந்தாலும் இருப்பானே தவிர தன்னுடைய மனைவியை பேசக் கூடாது என்று ஒருபோதும் கூறுவதில்லை.

ஆனால் பெண்கள் அப்படியா?

திருமணம் முடிந்து மாமியார் வீட்டுக்கு வந்த உடனேயே சி.பி.ஐ மாதிரி எல்லோரைப் பற்றியும் ஆராய்ந்து அவர்களிடம் இருக்கும் குற்றங்களை மட்டும் எடுத்துச் சொல்லும் இயல்பு கொண்டவர்களாக  இருக்கிறார்கள்.

திருமணமான மூன்று மாதத்தில் தனிக்குடுத்தினம்.

கணவன் மனைவு என்பவன் எப்படி இருக்க வேண்டும் தெரியுங்களா?

கணவன் என்பவன் மனைவியின் இரண்டாவது தந்தையாக இருக்க வேண்டும்.

மனைவி என்பவர் கணவனின் இரண்டாவது தாயாக இருக்க வேண்டும்.

அப்போதுதான் அந்தக் குடும்பத்தில் ஒற்றுமை நிலவும்.

 விட்டுக் கொடுத்தல்

கணவனுக்காக மனைவியும் மனைவிக்காக கணவனும் விட்டுக் கொடுத்துப் போனால்தான் குடும்பம் என்பது வளர்ச்சிப் பாதைக்குச் செல்லும்.

அது ஆண்கள் இடத்துலதான் அதிகமா இருக்கு.

நடுவர் அவர்களே

மனுசனுக்கும் புருசனுக்கும் என்ன வித்தியாசம் தெரியுங்களா?

தப்பு பண்ணிட்டு மன்னிப்பு கேட்பவன் மனுசன்

தப்பே பண்ணாம மன்னிப்பு கேட்கிறான் பாருங்க அவன்தான் புருசன்

நடுவர் அவர்களே

செய்தித்தாளில் ஒரு செய்தி படித்தேன். ஒரு பெண் கோர்ட்டுக்குப் போயிருக்கு.

அந்தப் பெண்ணை விசாரித்த நீதிபதிக்கு ஒரே ஷாக்.

என்ன கேஷ் அப்படின்னு பார்த்தால்

நான் சொன்ன கடையில பிரியாணி வாங்கித் தரவில்லை. அதனால் எங்களுக்குள் கருத்து வேறுபாடு எனக்கு டைவேர்ஸ் வாங்கிக் கொடுங்க அப்படின்னு அந்தப் பெண் கேட்டுருக்காள்.

இன்னிக்கு அப்படி இருக்குங்க காலம்.

நடுவர் அவர்களே

அம்மா வீட்டுக்குப் போன மனைவியும்

சர்வீசுக்குப் போன பைக்கும் 4 நாள் நம்ம கண்ரோல்லேயே இருக்காது.

விட்டுக் கொடுப்பவர் ஆண்களே

பொருளாதாரம்

உத்தியோகம் புருச லட்சனம் ன்னு சொல்லுவாங்க. ஆனால் அது இன்னிக்கு மாறிப்போச்சி.

அதுக்காக பொண்ணு பார்க்க வரும்போதே என்னை எங்க அப்பா அம்மா கஷ்டப்பட்டுப் படிக்க வச்சாங்க அதனால என் சம்பலத்தை முழுசா என் அப்பா அம்மாவுக்குத்தான் கொடுப்பேன் அதுக்குச் சம்மதம்னா நான் கல்யாணம் பன்னிகிறேன்னு சொன்ன என்னங்க அர்த்தம்.

அப்போ கல்யாணம்  பன்னிகிட்டு அவன் என்னங்க பன்னுவான்.

நடுவர் அவர்களே

 

எங்க வீட்டு பக்கத்துல ஒரு அம்மா இருக்காங்க. அவங்க வீட்டுக்காரர் 10000 ரூபாய் கொடுத்து மளிகை சாமான் வாங்கிக்கச் சொன்னார்.

இந்த அம்மாவும் வாங்கிகிட்டு வந்தது.

சாயங்காலம் அவர் வந்து என்னம்மா மளிகை எல்லாம் வாங்கிட்டியா. எவ்வளவு ஆச்சி. அப்படின்னு கேட்டாரு.

ஆமா அப்படியே நீங்க கொடுத்திங்களே 10000 ரூபாய். அது பத்தாம என்னோட 250 ரூபாய போட்டு வாங்கிகிட்டு வந்தேன். அப்படீன்னாங்க.

ஐயோ அவவ்வளவு விலை ஏறிபோச்சி அப்படீன்னு அவரு வேலைய பாக்க போயிட்டாரு.

இருந்தாலும் சந்தேகமா இந்த அம்மா எழுதி வச்சிருந்தத எடுத்து பார்த்தவருக்கு ஒரே அதிர்ச்சி.

அந்தம்மா

 

அரிசி 25 கி

ரைஸ் 25 கி

சக்கரை 500

சுகர் 500

பொ. கடலை 2 கிலோ

பொட்டுக்கடலை 2 கிலோ

து. பருப்பு 2 கிலோ

துவரம் பருப்பு 2 கிலோ

 

அப்படீன்னு எல்லாம் ரெண்டு ரெண்டா கணக்கு எழுதி வச்சிருக்கு. இதுல ஒன்ற தன்னோட வீட்டுக்கும்  இன்னொன்ன அம்மா வீட்டுக்கு அனுப்பிட்டு இருக்கு.

 

இப்படி இருந்து குடும்பம் எப்படி ஐயா வளர்ச்சி அடையும்.

 

 

இதுமட்டுமில்லிங்க.

பெண் பார்ப்பதை எல்லாம் வங்க வேண்டும் என நினைப்பாள்.

ஆண் தேவை என்றாலும் இப்போது வேண்டாம் என நினைப்பான்.

இதனால்தான் சொல்கிறேன் குடும்ப வளர்ச்சிக்கு பெரிதும் உதவுவது ஆண்களே ஆண்களே ஆண்களே எனக் கூறி வாய்ப்புக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.


ரோஜாப்பூ மாலையிலே…
ஒரு முல்லைப்பூ சேர்கிறதே…
ரோஜாப்பூ மாலையிலே…
ஒரு முல்லைப்பூ சேர்கிறதே…

இந்த மைனாக்கள் கூட்டத்திலே…
ஒரு சின்ன புறா கூடுதே…
எங்கள் நெஞ்சமெல்லாம் வாழ்த்துதே…

"சலசல சலசல" இரட்டைக் கிளவி
"தகதக தகதக" இரட்டைக் கிளவி
உண்டல்லோ? தமிழில் உண்டல்லோ?
பிரித்து வைத்தல் நியாயம் இல்லை
பிரித்துப் பார்த்தால் பொருளும் இல்லை
இரண்டல்லோ? இரண்டும் ஒன்றல்லோ?

Monday, February 26, 2024

மக்கள் மனதில் நிலைத்த இன்பம் தருவது பழையப் பாடல்களா? புதிய பாடல்களா?

February 26, 2024
மக்கள் மனதில் நிலைத்த இன்பம் தருவது  பழையப் பாடல்களா? புதிய பாடல்களா?
அனைத்துலகப் பொங்குதமிழ்ச் சங்கம் நடத்தும் தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு நடைபெறும் இந்த நல்லதொரு பட்டிமன்ற நிகழ்வுக்கு நடுவராக இருந்து நல்லதொரு தீர்ப்பைக் கூற இருக்கும் அனைத்துலகப் பொங்குதமிழ்ச் சங்கம் மற்றும் பண்ணுருட்டி செந்தமிழ்ச் சங்கங்களின் தலைவர் மதிப்புறு முனைவர் பாவலர் சுந்தரபழனியப்பன் ஐயா அவர்களுக்கும்,

பட்டிமன்ற விவாதத்தில் என் கருத்துக்கு வலுசேர்த்த எங்கள் அணியினருக்கும்,
 
மறுத்து வாதாடுகின்ற எங்கள் எதிர் அணி சகோதரிகளுக்கும்,

பட்டிமன்ற நிகழ்வைக் கேட்டு, எங்களைக் கைத்தட்டி உற்சாகமூட்டக் காத்துக் கொண்டிருக்கும் என் அன்பு உறவுகளுக்கும், இதனை இணையத்தின் வாயிலாகவும் தொலைக்காட்சியின் வாயிலாகவு்ம கண்டு கேட்டு இரசித்துக் கொண்டிருக்கும் அன்பு உள்ளங்களுக்கும் முதற்கண் என் வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நடுவர் அவர்களே!
 
இன்பத்தைத் தரும் பாடல்கள்
 
1. காரணம்
 
ஒருபாடல் ஒருவரின் இன்பத்திலும் துன்பத்திலும் பங்கு கொள்ளும்போதுதான் 
 
மனதிற்குப் பிடித்த பாடலாக அமைகிறது.
 
அதுவே பலமுறை கேட்கும் போது மனதை விட்டு நீங்காமலும் மனதிற்கு இன்பம் தருவதாகவும் அமைகிறது.
 
துன்பமான நேரத்தில் கேட்கப்படும் சோகப் பாடல்களும் இன்பம் தருகின்றன.
 
இதுபோன்ற சூழ்நிலைகள் எல்லா மனிதர்களுக்கும் ஏற்பட்டிருக்கும். அதனால் அப்படிப்பட்ட பாடல்கள் மக்கள் மனதைக் கவர்ந்தவையாக இருக்கின்றன
 
இப்படிப்பட்ட பாடல்களாக பழைய பாடல்கள் உள்ளன. உதாரணமாக

கண்ணே கலைமானே…
கன்னி மயிலெனக் கண்டேன் உனை நானே…
கண்ணே கலைமானே…
கன்னி மயிலெனக் கண்டேன் உனை நானே…

அந்திப்பகல் உனை நான் பார்க்கிறேன்…
ஆண்டவனை இதைத்தான் கேட்கிறேன்…
ராரிராரோ… ஓராரிரோ…
ராரிராரோ… ஓராரிரோ…

என்ற சோகப் பாடல்களாக இருந்தாலும் சரி

போவோமா ஊர்கோலம் ....
பூலோகம் எங்கெங்கும்...
ஓடும் பொன்னி ஆறும்...பாடும் கானம் நூறும்
காலம் யாவும் பேரின்பம்...காணும் நேரம் ஆனந்தம்

பெண் : போவோமா ஊர்கோலம் ....
பூலோகம் எங்கெங்கும்...

என்ற உற்சாகப் பாடல்களாக இருந்தாலும் சரி மனதுக்கு இன்பம் தருவனவாக அமைகின்றன

இப்படி இன்பமான நெரத்திலும் துன்பமான நெரத்திலும் கேட்டு இன்பத்தை உண்டாக்கிய பாடல்கள் எப்போது கேட்டாலும் மீண்டும் மீண்டும் இன்பத்தையேதான் தருகின்றன.
 
திரும்பத் திரும்பக் கேட்கத் துண்டுகின்றன.

2. மற்றொரு காரணம்

பழையப் பாடல்கள் மக்கள் மனதைக் கவர்வதற்கு மற்றொரு காரணமும் உண்டு.
 
பழைய பாடல்கள் கதை மாந்தரின் குணங்களையும் கதையையும் ஒருசேர வெளிப்படுத்தும் தன்மை கொண்டதாக இருக்கின்றன.
 
உதாரணமா

நான் பிறந்த காரணத்தை நானே அறியும் முன்னே
நீயும் வந்து ஏன் பிறந்தாய் செல்வ மகனே

கைகால்கள் விளங்காத கணவன் குடிசையிலும்
காதல் மனம் விளங்க வந்தாள் அன்னையடா
காதலிலும் பெருமை இல்லை கண்களுக்கும் இன்பமில்லை
கடமையில் ஈன்றெடுத்தாள் உன்னையடா
ஏன் பிறந்தாய் மகனே ஏன் பிறந்தாயோ

மண் வளர்த்த பெருமையெல்லாம்
மனதினில் வளர்த்தவளாய்
கண் மலர்ந்த பெண் மயிலை நானடைந்தேன்
நீ வளர்ந்து மரமாகி நிழல் தரும் காலம் வரை
தாய் மனதை காத்திருப்பேன் தங்க மகனே

ஏன் பிறந்தாய் மகனே ஏன் பிறந்தாயோ
ஏன் பிறந்தாய் மகனே ஏன் பிறந்தாயோ
 
என்ற பாடலை எடுத்துக் கொண்டால் எதுவும் செய்ய இயலாத மாற்றுத்திறனாளி. அவனைத் திருமணம் பெண் அவர்களுக்குப் பிறந்த குழந்தை. இச்சூழலை விளக்குவதாக அமைகிறது. 

மற்றொரு பாடலான

மாமன் ஒதடு பட்டு நாதம் தரும் குழலு
நானா மாறக் கூடாதா
நாளும் தவமிருந்து நானும் கேட்ட வரம்
கூடும் காலம் வாராதா
மாமன் காதில் கேளாதா
நிலா காயும் நேரம் நெஞ்சுக்குள்ள பாரம்
மேலும் மேலும் ஏறும் இந்த நேரந்தான்…

ஒன்ன எண்ணி பொட்டு வச்சேன்
ஓலப்பாய போட்டு வச்சேன்
இஷ்டப்பட்ட ஆச மச்சான்
என்ன ஏங்க ஏங்க வச்சான்

ஊரு சனம் தூங்கிருச்சு
ஊதக் காத்தும் அடிச்சிருச்சு
பாவி மனம் தூங்கலையே
அதுவும் ஏனோ புரியல்லையே

என்ற பாடலும் கதையை கதைமாந்தரைக் கண்முன் கொண்டுவருகிறது

அந்த வகையில் பழைய பாடல்களே எப்போது கேட்டாலும் இன்பத்தைத் தருவனவாக உள்ளன.



இதுபோல இன்றைய பாடல்களில் காணுதற்கு இல்லை.

ஐயா பாடல்களை மூன்ற வகையா பிரிக்கலாம்.

1. உங்க காலத்துப் பாடல்

2. எங்க காலத்துப் பாடல்

3. அவங்க காலத்துப் பாடல்

உங்க காலத்துப் பாடல்ல வார்த்தைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கும். உதாரணமாக

ஆத்தூரு கிச்சடி சம்பா
பாத்து வாங்கி வெத வெதச்சி
நாத்தப் பறிச்சி நட்டுப் போடு சின்னக் கண்ணு
தண்ணிய ஏத்தம் புடிச்சி
எறச்சி போடு செல்லக் கண்ணு
நாத்தப் பறிச்சி நட்டுப் போடு சின்னக் கண்ணு
தண்ணிய ஏத்தம் புடிச்சி
எறச்சி போடு செல்லக் கண்ணு

கதிர நல்லா விளைய வச்சி
மதுர ஜில்லா ஆள வச்சி
அறுத்துப் போடு களத்து மேட்டுல சின்னக் கண்ணு - நல்லா 
அடிச்சி தூத்தி அளந்து போடு செல்லக் கண்ணு

பொதியை ஏத்தி வண்டியிலே
பொள்ளாச்சி சந்தையிலே
விருதுநகர் வியாபாரிக்கு சின்னக் கண்ணு -நீயும் 
வித்து போட்டு பணத்த எண்ணு செல்லக் கண்ணு
சேத்த பணத்த சிக்கனமா
செலவு பண்ண பக்குவமா
அம்மா கையிலே கொடுத்து போடு சின்னக் கண்ணு
உங்க அம்மா கையிலே கொடுத்து போடு சின்னக் கண்ணு
அவங்க ஆற நூறு ஆக்குவாங்க செல்லக் கண்ணு

என்ற பாடலைக் கொள்ளளாம்

2. எங்க காலத்துப் பாடல்ல வார்த்தையும் இசையும் சம அளவில் இருக்கும். இதற்கு உதாரணமாக

அரண்மனை அன்னக்கிளி தரையில
நடப்பது நடக்குமா அடுக்குமா

பனியிலும் வெட்டவெளி வெய்யிலிலும்
உள்ள சுகம் அரண்மனை கொடுக்குமா

குளுகுளு அறையில கொஞ்சிக்
கொஞ்சி தவழ்ந்தது குடிசைய விரும்புமா

சிலுசிலுசிலுவென இங்கிருக்கும்
காத்து அங்க அடிக்குமா கிடைக்குமா

பளிங்கு போல உன்
வீடு வழியில பள்ளம் மேடு

வரப்பு மேடும்
வயலோடும் பறந்து போவேன் பாரு

அதிசயமான பெண்தானே

புதுசுகம் தேடி வந்தேனே


போவோமா ஊர்கோலம் ....
பூலோகம் எங்கெங்கும்...
 
என்ற பாடலைக் கொள்ளலாம். 

இந்த இரண்டின் தன்மையைக் கொண்ட இந்த காலத்துப் பாடல்களும் மக்கள் மனதில் நிற்கத்தான் செய்கின்றன

3. அவங்க காலத்துப் பாடல்ல இசை மட்டுமே இருக்கு வார்த்தைகளைக் காணவில்லை. 
 
ஆளுமா டோலுமா ஐசாலக்கடி மாலுமா
தெறிச்சு கலீஜுனு கிராக்கிவுட்டா சாலுமா
 
ஐயா பழைய பாடல்கள் எல்லாம் ஏன் மக்கள் மனதில் நிலைத்து நிற்கும் திருயுங்களா













ஊரு சனம் தூங்கிருச்சு
ஊதக் காத்தும் அடிச்சிருச்சு
பாவி மனம் தூங்கலையே
அதுவும் ஏனோ புரியல்லையே

குயிலு கருங்குயிலு மாமன் மனக்குயிலு
கோலம் போடும் பாட்டாலே
மயிலு இள மயிலு மாமன் கவி குயிலு
ராகம் பாடும் கேட்டாலே
சேதி சொல்லும் பாட்டாலே
ஒன்ன எண்ணி நானே உள்ளம் வாடிப் போனேன்
கன்னிப் பொண்ணுதானே எம் மாமனே… எம் மாமனே…

ஒத்தையிலே அத்த மக
ஒன்ன நெனச்சி ரசிச்ச மக
கண்ணு ரெண்டும் மூடலையே
காலம் நேரம் கூடலையே

ஊரு சனம் தூங்கிருச்சு
ஊதக் காத்தும் அடிச்சிருச்சு
பாவி மனம் தூங்கலையே
அதுவும் ஏனோ புரியல்லையே

மாமன் ஒதடு பட்டு நாதம் தரும் குழலு
நானா மாறக் கூடாதா
நாளும் தவமிருந்து நானும் கேட்ட வரம்
கூடும் காலம் வாராதா
மாமன் காதில் கேளாதா
நிலா காயும் நேரம் நெஞ்சுக்குள்ள பாரம்
மேலும் மேலும் ஏறும் இந்த நேரந்தான்… இந்த நேரந்தான்…
ஒன்ன எண்ணி பொட்டு வச்சேன்
ஓலப்பாய போட்டு வச்சேன்
இஷ்டப்பட்ட ஆச மச்சான்
என்ன ஏங்க ஏங்க வச்சான்

ஊரு சனம் தூங்கிருச்சு
ஊதக் காத்தும் அடிச்சிருச்சு
பாவி மனம் தூங்கலையே
அதுவும் ஏனோ புரியல்லையே

ஒருதலையாகக் காதல் கொண்ட ஒரு பெண்ணின் மனநிலையை விளக்கும் பாடலாக இது அமைந்திருக்கிறது.
இதுபோன்ற பாடல்கள் மக்கள் மனதைப் பெரிதும் கவர்ந்ததாக இருக்கிறது.



ராசாவே உன்னைக் காணாத நெஞ்சு
காத்தாடி போலாடுது
ராசாவே உன்னைக் காணாத நெஞ்சு
காத்தாடி போலாடுது
ஸ்ரீ ராமனோடு பூ மாலை போட
வைதேகி உள்ளம் வாடுது
ராசாவே உன்னைக் காணாத நெஞ்சு
காத்தாடி போலாடுது



கண்ணுக்கொரு வண்ணக்கிளி

காதுக்கொரு காணக் குயில்

நெஞ்சிக்கொரு வஞ்சிக் கொடி நான் தானய்யா



கண்ணுக்கொரு வண்ணக்கிளி

காதுக்கொரு காணக் குயில்

நெஞ்சிக்கொரு வஞ்சிக் கொடி நான் தானய்யா



தத்தித் தவழும் தங்கச் சிமிழ் நான்

பொங்கிப் பெருகும் சங்கத் தமிழ் நான்

முத்தம் தர நித்தம் வரும் நட்சத்திரம்



யாரோடு இங்கே எனக்கென்ன பேச்சு

நீ தானே கண்ணா நான் வாங்கும் மூச்சு

வாழ்ந்தாக வேண்டும் வா வா கண்ணா

ராசாவே உன்னைக் காணாத நெஞ்சு



காத்தாடி போலாடுது

ஸ்ரீ ராமனோடு பூ மாலை போட

வைதேகி உள்ளம் வாடுது

ராசாவே உன்னைக் காணாத நெஞ்சு

காத்தாடி போலாடுது



👩உங்களுக்காக தமிழில் ஐசக்👩

மங்கை ஒரு கங்கை என

மன்னன் ஒரு கண்ணன் எனக்

காதில் ஒரு காதல் கதை சொன்னால் என்ன

மங்கை ஒரு கங்கை என

மன்னன் ஒரு கண்ணன் எனக்

காதில் ஒரு காதல் கதை சொன்னால் என்ன



அத்தை மகனோ மாமன் மகனோ

சொந்தம் எதுவோ பந்தம் எதுவோ

சந்தித்ததும் சிந்தித்ததும் தித்தித்திட



அம்மாடி நீ தான் இல்லாத நானும்

வெண்மேகம் வந்து தீண்டாத வானம்

தாங்காத ஏக்கம் போதும் போதும்

ராசாவே உன்னைக் காணாத நெஞ்சு



காத்தாடி போலாடுது

ஸ்ரீ ராமனோடு பூ மாலை போட

வைதேகி உள்ளம் வாடுது

ராசாவே உன்னைக் காணாத நெஞ்சு

காத்தாடி போலாடுது

காத்தாடி போலாடுது







சின்னஞ்சிறு கிளியே

சித்திர பூ விழியே

சின்னஞ்சிறு கிளியே

சித்திர பூ விழியே

அன்னை மனம் ஏங்கும்

தந்தை மனம் தூங்கும்

நாடகம் ஏனடா?

நியாயத்தை கேளடா

சின்னஞ்சிறு கிளியே


சுகமே நினைத்து
சுயவராம் தேடி

சூழல் மேல் தவிக்கும்
துயரங்கள் கோடி

மழை நீர் மேகம்
விழிகளில் மேவும்

இந்த நிலை மாறுமோ?

அன்பு வழி சேருமோ?

கண் கலங்கி பாடும் எனது

பாசம் உனக்கு வேஷமோ?

வாழ்ந்தது போதுமடா

வாழ்க்கை இனி ஏன்?

சின்னஞ்சிறு கிளியே

சித்திர பூ விழியே

சின்னஞ்சிறு கிளியே

சித்திர பூ விழியே

உன்னை எண்ணி நாளும்

உள்ளம் தடுமாறும்

வேதனை பாரடா

வேடிக்கை தானடா

சின்னஞ்சிறு கிளியே

மயிலே உன்னை நான்

மயக்கவும் இல்லை

மனதால் என்றும்

வெறுக்கவும் இல்லை

என்னை நீ தேடி

இணைந்தது பாவம்

எல்லாம் நீயே

எழுதிய கோலம்

இந்த நிலை காணும் பொழுது

நானும் அழுது வாழ்கிறேன்

காலத்தின் தீர்ப்புகளை

யார் அறிவாரோ?

சின்னஞ்சிறு கிளியே

சித்திர பூவிழியே

உன்னை எண்ணி நாளும்

உள்ளம் தடுமாறும்

நாடகம் ஏனடா?

நியாயத்தை கேளடா

சின்னஞ்சிறு கிளியே

சித்திர பூவிழியே





நல்லவர்க்கெல்லாம்

நல்லவர்க்கெல்லாம் சாட்சிகள் ரெண்டு

ஒன்று மனசாட்சி

ஒன்று தெய்வத்தின் சாட்சியம்மா

நம்பிக்கை வைத்து கல்லையும் பார்த்தால்

தெய்வத்தின் காட்சியம்மா

அதுதான் உள்ளத்தின் காட்சியம்மா

அதுதான் உண்மைக்கு சாட்சியம்மா



ஆண் : நல்லவர்க்கெல்லாம் சாட்சிகள் ரெண்டு

ஒன்று மனசாட்சி

ஒன்று தெய்வத்தின் சாட்சியம்மா

தெய்வத்தின் சாட்சியம்மா



ஆண் : நதி வெள்ளம் காய்ந்துவிட்டால்

நதி செய்த குற்றம் இல்லை

விதி செய்த குற்றம் அன்றி வேறு யாரம்மா

நதி வெள்ளம் காய்ந்துவிட்டால்

நதி செய்த குற்றம் இல்லை

விதி செய்த குற்றம் அன்றி வேறு யாரம்மா

பறவைகளே பதில் சொல்லுங்கள்

மனிதர்கள் மயங்கும் போது நீங்கள் பேசுங்கள்

மனதிற்கு மனதை கொஞ்சம் தூது செல்லுங்கள்



ஆண் : நல்லவர்க்கெல்லாம்

நல்லவர்க்கெல்லாம் சாட்சிகள் ரெண்டு

ஒன்று மனசாட்சி

ஒன்று தெய்வத்தின் சாட்சியம்மா

தெய்வத்தின் சாட்சியம்மா



ஆண் : ஆண்டவன் அறிய நெஞ்சில்

ஒரு துளி வஞ்சம் இல்லை

அவனன்றி எனக்கு வேறு ஆறுதல் இல்லை

ஆண்டவன் அறிய நெஞ்சில்

ஒரு துளி வஞ்சம் இல்லை

அவனன்றி எனக்கு வேறு ஆறுதல் இல்லை

மனிதனம்மா மயங்குகிறேன்

தவறுக்கு துணிந்த மனிதன் அழுவதில்லையே

தவறியும் வானம் மண்ணில் விழுவதில்லையே



ஆண் : நல்லவர்க்கெல்லாம்

நல்லவர்க்கெல்லாம் சாட்சிகள் ரெண்டு

ஒன்று மனசாட்சி

ஒன்று தெய்வத்தின் சாட்சியம்மா

தெய்வத்தின் சாட்சியம்மா

நம்பிக்கை வைத்து கல்லையும் பார்த்தால்

தெய்வத்தின் காட்சியம்மா

அதுதான் உள்ளத்தின் காட்சியம்மா

அதுதான் உண்மைக்கு சாட்சியம்மா









அழகு மலராட அபிநயங்கள் கூட

சிலம்பொலியும் புலம்புவதை கேள்

என் சிலம்பொலியும் புலம்புவதை கேள்



அழகு மலராட அபிநயங்கள் கூட

சிலம்பொலியும் புலம்புவதை கேள்



விரல் கொண்டு மீட்டாமல்

வாழ்கின்ற வீணை

குளிர் வாடை கொஞ்சமல்

கொதிக்கின்ற சோலை



பகலிரவு பல கனவு

இரு விழியில் வரும்பொழுது



அழகு மலராட அபிநயங்கள் கூட

சிலம்பொலியும் புலம்புவதை கேள்



ஆகாயம் இல்லாமலே

ஒரு நிலவு தரை மீது தல்லாடுது

ஆதாரம் இல்லாமலே

ஒரு கொடியும் ஆடாமல் தலை சாயுது



தாளத்தில் சேராத தனி பாடல் ஒன்று

சங்கீதம் காணாமல் தவிக்கின்றது

விடியாத இரவேதும் கிடையாது என்று

ஊர் சொன்ன வார்தைகள் பொய்யானது



வசந்தம் இனி வருமா

வாழ்வினிமை பெருமா

ஒரு பொழுது மயக்கம்

ஒரு பொழுது கலக்கம்

பதில் ஏதும் இல்லாத கேள்வி







அழகு மலராட அபிநயங்கள் கூட

சிலம்பொலியும் புலம்புவதை கேள்



விரல் கொண்டு மீட்டாமல்

வாழ்கின்ற வீணை

குளிர் வாடை கொஞ்சமல்

கொதிக்கின்ற சோலை



பகலிரவு பல கனவு

இரு விழியில் வரும்பொழுது



அழகு மலராட அபிநயங்கள் கூட

சிலம்பொலியும் புலம்புவதை கேள்



ஊதாத புல்லாங்குழல் எனதழகு

சூடாத பூவின் மடல்

தேய்கின்ற மஞ்சள் நிலா

ஒரு துணையை

தேடாத வெள்ளை புற



பூங்காற்று மெதுவாக பட்டாலும் போதும்

பொன்மேனி நெருப்பாக கொதிகின்றது

நீரூற்று பாயாத நிலம்போல நாலும்

என் மேனி தரிசாக கிடக்கின்றது



தனிமையிலும் தனிமை

கொடுமையிலும் கொடுமை

இனிமை இல்லை வாழ்வில்

எதற்கு இந்த இளமை



தனிமையிலும் தனிமை

கொடுமையிலும் கொடுமை

இனிமை இல்லை வாழ்வில்

எதற்கு இந்த இளமை



வேறென்ன நான் செய்த பாவம்



அழகு மலராட அபிநயங்கள் கூட

சிலம்பொலியும் புலம்புவதை கேள்



விரல் கொண்டு மீட்டாமல்

வாழ்கின்ற வீணை

குளிர் வாடை கொஞ்சமல்

கொதிக்கின்ற சோலை



பகலிரவு பல கனவு

இரு விழியில் வரும்பொழுது



அழகு மலராட அபிநயங்கள் கூட

சிலம்பொலியும் புலம்புவதை கேள்




ஒரு மனிதன் எந்த மன நிலையில் இருக்கிறானோ? அந்த மனநிலைக்கு ஏற்ற பாடலை அவன் கேட்கும்போது அவனுக்கு அது இன்பம் தருவதாக இருக்கிறது. உதாரணமா,

ஒருவன் சோக மனநிலையில் இருக்கிறான் என்றால்

ஒருவன் சம மனநிலையில்






Friday, February 9, 2024

செந்தூர் முருகன் செந்தமிழ் மாலை

February 09, 2024
செந்தூர் முருகன் செந்தமிழ் மாலை
காப்பு
அலைவருடும் செம்பாதம் கொண்டவனாம் செந்தூர்
கலாப மயிலோன் புகழ்பாட - வல்விலங்கு
காத்து வளர்த்த மகள்தந்தை பொன்மகள்
நாதனென் நூலுக்குக் காப்பு

பிரம்மரின் இளைய மைந்தர் காசிபர் பெற்றெ டுத்தார்
நரன்கரி சிங்கம் ஆடு தலையுடை பிள்ளை நால்வர்
திரிசடை கடவுள் நோக்கி தவத்தினால் வரங்கள் பெற்று
விரும்பிய வாழ்வு தன்னைப் பெற்றநீர் வாழ்க என்றார் 01

தந்தையின் சொல்லை ஏற்று திகம்பரன் மனத்துள் எண்ணி
முந்திடும் ஆசை நீக்கி முனிவனாய் மாறும் நேரம்
சிந்தையை மயக்கும் வண்ணம் சுக்கிரன் ஆசை ஊட்ட
மந்திரம் செய்தாற் போல சூரனும் ஆட லானான். 02

பலயுகம் அண்டத் தோடு தேவரை அடக்கி ஆள
விலையிலா உயிரைக் காக்க வேண்டிய வரங்கள் பெற்று
நிலையினை உயர்த்து என்ற குருவது சொல்லை ஏற்று
கலைமகள் துணையை நோக்கி கடுந்தவம் செய்ய லுற்றான் 03

சூரனின் தவத்தைக் கண்டு ஐஞ்சிரன் நேரில் வந்து
சூரனே வரங்கள் கேட்பாய் மகிழ்வுடன் தருவோம் என்றார்.
காரிகை வயிற்றில் தோன்றா பிள்ளையால் மரணம் வேண்டும்
தேருடன் யுகங்கள் ஆளும் வரங்களைக் கேட்டுப் பெற்றான் 04

பெண்ணினால் அன்றி யாவும் தோன்றிட மாட்டா தென்றே
எண்ணிய சூரன் தன்னை மாய்ப்பவர் இல்லை என்றே
திண்மையும் இழந்த தோடு கொடுமைகள் பலவும் செய்து
விண்ணிலே உள்ள தேவர் யாவரும் சிறையில் வைத்தான் 05

திண்மை - நிதானம்

கொடுமைகள் தாங்கா தேவர் கூத்தனை நோக்கி சொல்ல
விடுதலைக் கொடுப்பேன் என்ற உறுதியை அவர்க்க ளித்து 


அண்டச ராசரம் ஆண்டு வந்ததோடு


வரங்களைப் பெற்றப் பின்னர் ஆணவம் தலைக்கு ஏற


Monday, December 4, 2023

தூத்துக்குடியில் நடைபெற்ற (01.12.2023) அன்று "பன்னோக்குப் பார்வையில் கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை" நூல் வெளியீட்டு விழாவில்...

December 04, 2023







Tuesday, November 14, 2023

குழந்தைகள் தினக் கொண்டாட்டம்

November 14, 2023
குழந்தைகள் தினக் கொண்டாட்டம்

அனைத்துலகப் பொங்குதமிழ்ச் சங்கத்தின் 82வது நிகழ்வாக குழந்தைகள் தின நிகழ்வு இனிதான முறையில் கொண்டாடப்பட்டு வருகிறது.

இதற்கு நல்லாசி கூறி வழி நடத்தும் அனைத்துலகப் பொங்குதமிழ்ச் சங்கத்தின் கௌரவத் தலைவர் திருக்கயிலாயப் பரம்பரை மெய்கண்ட சந்தானம் திருப்பேரூர் ஆதினம் இருபத்தைந்தாம் குருமகா சந்நிதானங்கள் கயிலைப் புனிதர் திருப்பெருந்திரு. சாந்தலிங்க மருதாசல அடிகளார் அவர்களின் பொற்பாதங்களை தொழுது,

இவ்விழாவிற்குத் தலைமைப் பொறுப்பேற்றிருக்கும் அனைத்துலகப் பொங்குதமிழ்ச் சங்கம் மற்றும் பண்ணுருட்டிச் செந்தமிழ்ச் சங்கங்களின் தலைவர் மதிப்புறு முனைவர் பாவலர் சுந்தரபழனியப்பன் ஐயா அவர்களை முதற்கண் வணங்குகிறேன்.

இந்நிகழ்வில் முன்னைலை வகித்துவரும் மாநில, மண்டல, மாவட்ட நிர்வாகிகளையும் வணங்கி மகிழ்கிறேன்.

இந்தக் குழந்தைகள் தின விழாக் கொண்டாட்டத்தை இனிமையான முறையில் துவங்கி வைக்க இருக்கின்ற பண்ணுருட்டியைச் சார்ந்த மாணவ கண்மணிகள் ச. பிரசன்ன சிவா மற்றும் ஸ்ரீகாந்த் சிவா ஆசியோருக்கும் என் வணக்கங்கள் உரித்தாகுக.

இந்நிகழ்விற்கு வாழ்த்துரை நல்க இசைவு தெரிவித்து நம்முடன் இணைந்துள்ள, எழுச்சிப் பாவலர், வழக்குரைஞர் சே. குணசேகரன், பொதுச்செயலாளர், உலகப் பாவலர் தமிழன்னைத் தமிழ்ப் பேரவை, பெங்களுரு அவர்களையும் வணங்கி மகிழ்கிறேன்.

குழந்தைகள் தினக் கொண்டாட்டம்

இப்பெயரைக் கேட்டாலே அனைவரின் நெஞ்சிலும் பேரானந்தம் துள்ளம். குழந்தைகளாய் இருந்த நாம் குழந்தைகளைக் கொண்டாடுவது சிறப்புடையதுதானே. 

உலகம் முழுவதும் ஏதேனும் ஒரு நாளைச் சிறப்பு நாளாகக் கொண்டாடி வருகிறது. அவ்வகையில், நவம்பர் 14ஆம் நாளான இன்று குழந்தைகள் கொண்டாடி வருகிறோம்.

பொதுவாக நவம்பர் மாதம் என்றாலே அனைவருக்கும் நினைவிற்கு வருவது இரண்டு நிகழ்வுகள். ஒன்று தீபாவளி மற்றொன்று குழந்தைகள் தினம். தீபாவளி கூட சில ஆண்டு அக்டோபர் மாதத்தில் கொண்டாடப்படுவதுண்டு. ஆனால் எப்போதும் மாறாமல் வருவது குழந்தைகள் தினம்தான்.

ஏமாற்றத் தெரியாத

பொய் களவு தெரியாத

சாதி மதம் பாராத

அழகு, பொறாமை கொள்ளாத

உன்னத ஜீவன்கள் குழந்தைகள்

இக் குழந்தைகள் தினத்தை சர்வதேச அளவில் 1954 ஆம் ஆண்டு முதல் நவம்பர் 20 ஆம் தேதி அன்று கொண்டாடப்பட்டு வந்தாலும் இந்தியாவில் மட்டும் நவம்பர் 14 குழந்தைகள் தினமாகக் கொண்டாடி வருகிறோம்.

இதற்குக் காரணம்,  முன்னாள் பிரதமரும் இந்திய சுதந்திரப் போராட்ட வீரரும் இந்தியாவின் ஒளி விளக்காகத் திகழ்ந்த மாந்தருள் மாணிக்கமுமான ஜவஹர்லால் நேரு அவர்களின் பிறந்த தினமான நவம்பர் 14 - யே குழந்தைகள் தினமாகக் கொண்டாடுகிறோம்.

ஏனென்றால் அவர் குழந்தைகள் மீது அலாதி பிரியம் கொண்டவர் என்பதால்...

இக்குழந்தைகள் தினம் நாட்டிற்கு நாடு வேறுபடும்.

"வருடம் தவறாமல்

குழந்தைகள் தினத்தைக்

கொண்டாடுகிறவர்களே…

தினங்கள் கொண்டாடுவதை

விட்டு விட்டு

குழந்தைகளை எப்போது

கொண்டாடப் போகின்றீர்கள்?" என்ற கவிக்கோ அப்துல் ரகுமானின் கவிதை வரிகளுக்கேற்ப, நாம் தினங்களை விட்டுவிட்டு குழந்தைகளைக் கொண்டாட வேண்டும்.

குழந்தைகளைப் பேணுவோம்

அன்னை தந்தை ஈன்றெடுத்த

அன்புச் செல்வம் குழந்தைகள்

மண்ணில் வந்து வாழுகின்ற

வானு றையும் தெய்வங்கள்

 

குரங்கு போல பெற்றவரைப்

பற்றிக் கொண்டு வாழுவர்

குறும்பு கோவம் கொண்டுநம்மை

குதூஉ கலத்தில் ஆழ்த்துவர்

 

வளர்ந்து வரும் பருவத்தில்

அறிவை நாமும் ஊட்டணும்

இளமைப் பருவம் வழிநடத்தி

இனிய கனவை வளர்க்கணும்

 

வறுமை எதுவும் தெரியாமல்

வளமை யோடு இருக்கணும்

பெருமை கொள்ளும் அளவிற்கு

பண்பு அவரைச் சூழணும்

 

பெற்ற வர்கள் குழந்தைகளை

பேணி நாளும் காப்பதால்

தரணி போற்றும் நல்லவராய்

தங்கள் பிள்ளை மாறுவர்.

 

வறுமைகள் எனச்சொல்லி பெற்றெடுத்த மகவினை

வற்புறுத்தி வேலைக்கு அனுப்புகிறார் பெற்றவர்.

குறைவான ஊதியம் நிறைவான பணியென

குழந்தைகளை அமர்த்தியே துன்பங்கள் செய்கிறார்.

 

ஏழ்மையில் வாடிடும் எண்ணற்ற குழந்தைகள்

பிச்சையினை ஏற்றுத்தன் வாழ்க்கையை நடத்துது.

பாழ்படும் உடல்சுகம் கண்டவர் சிசுக்கொலை

செய்கிறார்பெற் றெடுத்தவர் குப்பையில் வீசினார்.

 

பால்மணம் மாறிய பருவத்துக் குழந்தையை

பாலியல் கொடுமைக்கு ஆளாக்கி மகிழ்கிறார்.

பள்ளிக்குச் சென்றிடாத எண்ணற்ற குழந்தைகள்

தவறான பாதையில் செல்வதையும் காணலாம்.

 

எண்ணிய கல்வியைக் கற்றுத்தன் வாழ்விலே

ஏற்றங்கள் பெற்று உயர்ந்திட நினைக்கையில்

மண்ணிலே காலூன்றி துளிர்க்கின்ற செடியினை

முனைகிள்ளி வளர்ச்சியைக் குறைப்பதாய் அமையுது.

 

சத்தில்லாக் குழந்தைகள் இந்தியாவில் மட்டுமே

மிகுதியாக இருப்பதாய் ஆய்வுநிலை பகருது.

இத்தனைக் கொடுமைகள் குழந்தைக்கு இருக்கையில்

தினங்களைக் கொண்டாடி மகிழ்வது சரிதானோ?

 

கள்ளம் கபடம் இல்லா

வெள்ளை மனசு கொண்ட

பிள்ளை புன்சி ரிப்பில்

உள்ளம் மூழ்கு வோமே

என்று சொல்லி, வாய்ப்பு தந்த அனைவருக்கும் நன்றி கூறி விடைபெறுகிறேன். நன்றி வணக்கம்.


Saturday, November 4, 2023

தீபாவளி (கொண்டாட்ட வரலாறு)

November 04, 2023
தீபாவளி (கொண்டாட்ட வரலாறு)

அனைத்துலகப் பொங்குதமிழ்ச் சங்கம் அன்பு இனைய வனொலி மற்றும் தேனருவி வானொலி இணைந்து வழங்கும் தீபாவளி சிறப்புக் கவியரங்கம்

தமிழ் வாழ்த்து

அன்னைத் தந்தமொழி அமுதூட்ட வந்தமொழி

பின்னை மொழிக்கெல்லாம் தாயாக நின்றமொழி

தென்னன் மகளாக வளர்த்திட்ட பிள்ளைமொழி

தென்றல் சுகமாக காதினிலே பாயுமொழி

எம் தமிழ் மொழியை முதற்கண் வணங்கி.....

தலைமைக் கவி

அனைத்துலகப் பொங்குதமிழ்ச் சங்கம் – தமிழ்

அமைப்புகளில் முன்னணியில் தங்கும்

அத்தகைய சிறப்பு மிக்கத் தலைவர் கவி நடுவர் மதிப்புறுமுனைவர் பாவலர் சுந்தரபழனியப்பன் ஐயா அவர்களுக்கும் என் வணக்கம்.

இந்தத் தீபாவளிச் சிறப்புக் கவியரங்கைக் கேட்டுக்கொண்டிருக்கும் அன்பு இணைய வானொலி மற்றும் தேனருவி இணைய வானொலி நேயர்களுக்கும் என் வணக்கம். மற்றும் தீபாவளி வாழ்த்துக்கள்





வராகஅ வதாரம் தன்னில் பூமியை மீட்டெ டுக்க
பராக்கிர மகாட்டுப் பன்றி உருவமாய்த் திருமால் மாறி
அரக்கனை அழித்து தன்கூர் கொம்பினால் பூமி மீட்டார்
இருவரின் புதல்வ னாக நரகனும் அவத ரித்தான்,

அசுரவ தத்தின் போது பிறந்ததன் கார ணத்தால்
அசுரசு பாவம் வந்து இவனுடன் ஒட்ட லாட்சு
அச்சுதன் மகனென் றாலும் அரக்கரின் குணங்கள் பெற்று
பசுமுதல் தேவர் மக்கள் யாவரும் வதைக்க லானான்.

தரணியை மட்டு மன்றி வானையும் ஆள எண்ணி
இருந்திடும் நேரம் கண்டு அசுரனின் அமைச்சன் சொன்னான்
பரமனின் அருளால் வானோர் இறந்திடா வரத்தைப் பெற்றார்
வரத்தினை நீயும் பெற்று அவருடன் போர்செய் என்றான்.

பிரம்மனை மனதுள் எண்ணி கடுந்தவம் செய்து வந்தான்
பிரம்மனும் தவத்தை மெச்சி அவனது முன்னர்த் தோன்றி
வரத்தினை கேட்பாய் என்றார் இருவிழிப் பருகக் கண்டு
பிரம்மனே தனக்குச் சாகா வரத்தினைக் கொடுப்பாய் என்றான்.

பிறந்தவர் ஒருநாள் இங்கே இறந்திடல் வேண்டும் தானே
மற்றொரு வரத்தைக் கேட்டு பெற்றிடு என்றார் தாயால்
இறந்திட வேண்டும் என்ற வரத்தினைப் பெற்று வந்தான். 
பிறப்பினைத் தந்த அன்னை கொன்றிடு வாளோ என்றே.

வரத்தினைப் பெற்ற பின்னே கொடுமைகள் எல்லைத் தாண்ட
பரமனை நோக்கிப் பல்லோர்புகாரினை அளிக்க லானார்
நரகனை அழிப்ப தற்குப் புறப்பட சத்ய பாமா
பரமனே துணையாய் நானும் உன்னுடன் வருவேன் என்றாள்.

நரகனின் படைகள் எல்லாம் அச்சுதன் தும்சம் செய்து
நரகனை அழிப்ப தற்கு அம்பினை எய்ய பெற்ற
வரத்தினால் நரகா சூரன் துன்பமும் அடைந்தா னில்லை
பரமனும் நிலைய றிந்து மயங்கினாற் போல்வி ழுந்தார்.

நரகனால் தானே இந்த நிலையினை அடைந்தார் கண்ணன்
விரைந்திடும் அம்பை எய்து உன்னைநான்  மாய்ப்பேன் என்று
விரைந்திடும் அம்பைக் கொண்டு அசுரனை மாய்த்தாள் சத்யா
புரிந்தனன் இறக்கும் நேரம் கொன்றது அன்னை என்றே.

தன்மகன் என்ற போதும் மக்களை வதைத்த தாலே
கொன்றது சரிதான் என்று தேறினாள் சத்ய பாமா
தன்மகன் கொல்லப் பட்ட தினத்திலே தீபம் ஏற்றி
அனைவரும் மகிழ்ச்சி யாக இருந்திட வேண்டு மென்றாள்.

Monday, October 30, 2023

எங்கள் தமிழ்மொழி

October 30, 2023
எங்கள் தமிழ்மொழி
அன்னைத் தந்தமொழி அமுதூட்ட வந்தமொழி
பின்னை மொழிக்கெல்லாம் தாயாக நின்றமொழி
தென்னன் மகளாக வளர்த்திட்ட பிள்ளைமொழி
தென்றல் சுகமாக காதினிலே பாயுமொழி

சங்க இலக்கியமாய் வாழ்வைச் சொல்லும்மொழி
சிங்க வேந்தருக்கும் அறிவை ஊட்டும்மொழி
பொங்கும் காப்பியத்தில் மரபு உரைக்கும்மொழி
திங்கள் ஒளியாக பக்தி பரப்பும்மொழி

பள்ளு குறமென்றும் பிள்ளைத் தமிழென்றும்
கிள்ளை மொழியாக சிறந்தோர் சிறப்புரைக்கும்
விளக்கும் இலக்கணங்கள் பலவும் கொண்டமொழி
உள்ளம் கவர்ந்திழுக்கும் எங்கள் தமிழ்மொழி



Monday, October 23, 2023

வேதவதி தாரகை மாலை

October 23, 2023
வேதவதி தாரகை மாலை
முன்னொரு காலம் தன்னில் 
          திருமகள் அம்சத் தோடு
          வேதவ திநாமம் கொண்டோள் 
          விட்ணுவை துணையாய்க் கொள்ள
தனிமையில் காட்டில் வாழ்ந்து 
          கடுந்தவம் புரிந்து வந்தாள்
          ஆகாய மார்க்க மாக 
          சென்றிடும் இராவ னன்தான்
கன்னியைக் கண்ணில் கண்டு 
          கன்னிமேல் மையல் கொண்டு
          அடைந்திடும் எண்ணத் தோடு 
          அருகினில் சென்று பற்ற
கன்னியும் அதிர்ந்து நோக்கி 
          அறிவிலா மூடா நீயும்
          விரும்பிடாப் பெண்ணைத் தொட்டால் 
          வெடித்திடும் தலைதான் என்றாள் 01

முற்காலத்தில் குஜத்வஜன் என்ற முனிவர், இலக்குமியே தனக்கு மகளாக பிறக்க வேண்டும் என்று திருமாலை நோக்கி தவமிருந்தார். அதன் காரணமாக இலட்சுமி வேதவதியாகப் பிறந்தார். இவ்வேதவதி தன் தன்தையின் ஆசைப்படி திருமாலை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தோடு காட்டில் தனிமையாகத் தவம் செய்து கொண்டிருந்தாள். ஒருநாள் இராவணன் தனது புஷ்பக விமானம் ஆகாய வழியாக வந்துகொண்டிருந்தபோது, வேதவதியைக் கண்ணில் கண்டு அவனிடம் மயங்கி, அவளை அடையும் நோக்கில் கையைப் பற்றி இழுக்க, தவம் களைந்த நிலையில் இராவணனைக் கண்டு அதிர்ந்து, அறிவிலாத மூடனே. நான் திருமாலை மணப்பதற்காக அவரை நினைத்து தவம் செய்கொண்டிருக்கிறேன். நான் உன் ஆசைக்கு இனங்கமாட்டேன். நீ என்னைத் தொட்டதனால் நான் திருமாலுக்குத் தகுதியற்றவளாகிவிட்டேன். இனி நான் உயிர்வாழ மாட்டேன். நீ விருப்பம் இல்லாம் எந்தப் பெண்ணைத் தொட்டாலும் உன் தலை வெடித்துச் சிதறிவிடும் என்று சாபமிட்டு, தீயில் எரிந்து சாம்பளானாள்.

சாபமும் கொடுத்த தோடு மீண்டுமாய் அவத ரித்து
          உன்னைநான் அழிப்பேன் என்று சூளுரை செய்து மாண்டாள்.
சாபமும் நினைவில் வைத்து அரசவை திரும்பி வந்தான்
          காலமும் கடந்து செல்ல கற்பினள் வயிற்றில் வந்து
சாபமும் கொடுத்த நங்கை குழந்தையாய் அவத ரிக்க
         பெற்றதை மறந்து விட்டு பெற்றதை மனதுள் எண்ணி
சோபுர நாதன் இல்லாள் வீட்டினில் பிறந்தாள் என்று
         குழந்தையின் அழகைக் கண்டு இராவணன் மகிழ்ச்சி கொண்டான்.  02

வேதவதி சாபம் கொடுத்ததோடு மட்டுமல்லாமல் நான் மீண்டும் இம்மண்ணில் பிறந்து வந்து உன்னை அழிப்பேன் என்று சபதமும் செய்து இறந்துபோனாள். இச்சாபத்தை நினைவில் வைத்துக்கொண்டு இராவணன் அரசவைக்குத் திரும்பி வந்தான். காலங்கள் உருண்டோடின. கற்பில் சிறந்தவனான மண்டோதரியும் கருவுற்றாள். இராவணனுக்குச் சாபம் கொடுத்த வேதவதி மண்டோதரியின் வயிற்றில் மகளாகப் பிறந்தாள். தான் முன்பு பெற்ற சாபத்தை மறந்த இராவணன், குழந்தைப் பெற்றதை மனத்துள் நினைத்து மகிழ்ந்து, சிவனின் இடப்பாகத்தில் உள்ள பார்வதியே தனக்கு மகளாகப் பிறந்தாள் என்று எண்ணி, குழந்தையின் அழகைக் கண்டு மகிழ்ந்தான். 

குழந்தைகள் பிறந்து விட்டாள் சாதகம் கணித்தல் வேண்டும்
          மகிழ்ச்சியில் ஆழ்ந்த மன்னன் எதிர்வரும் காலம் காண
குழந்தையின் குறிப்பு கொண்டு சாதகம் கணிக்கச் செய்தான்
          சாதகம் ஆய்ந்து பார்த்த சோதிடர் விளம்ப லுற்றார்
குழந்தையின் பாதம் மண்ணில் பட்டது என்று சொன்னால்
          அழிந்திடும் உன்தன் ஆவி நாட்டுடன் குடும்பம் என்றார்
குழந்தையின் பிறந்த நோக்கைச் சேதிடர் சொல்லக் கேட்டு
          மகிழ்ச்சியைத் தொலைத்து விட்டு அதிர்ச்சியில் உறைந்தார் இல்லேர் 03

ஓர் இல்லத்தில் குழந்தை பிறந்தால், அதற்குச் சாதகம் கணித்தல் என்பது அவசியமான ஒன்றாகும். ஏனென்றால், இதற்கடுத்து அந்தக் குழந்தையின் பிறந்த பலனை வைத்துதான் அந்த குடும்பத்தில் எதிர்காலம் அமையும். இவ்வாறு குழந்தை பிறந்த மகிழ்ச்சியில் ஆழ்ந்திருந்த இராவணன், குழந்தையின் எதிர்காலம் எப்படி இருக்கும் என்று தெரிந்துகொள்ள, அக்குழந்தையின் பிறந்தக் குறிப்புகளை வைத்து சாதகம் கணிக்க ஏற்பாடு செய்தான்.  குழந்தையின் பிறந்தக் குறிப்பை ஆராய்த சோதிடர்கள், இக்குழந்தை வளர்ந்து அதன் கால்கள் இப்பூமியில் பட்டால், நாடு நகரம் மட்டுமன்றி இராவணனும் அவனைச் சார்ந்தவர்களும் அழிவார்கள் என்று கூறினர். இவ்வாறு இக்குழந்தை எதற்காகப் பிறந்ததோ அதன் நோக்கத்தை அவர்கள் தெரிவித்தனர். இதனைக் கேட்ட இராவணன் மற்றும் அவர்கள் குடும்பத்தினர் அதிர்ச்சியில் உறைந்தனர்.

அழித்திடும் பிள்ளை இங்கு வளர்த்திட வேண்டாம் என்று
          இராவணன் எண்ணி கொல்ல திட்டமும் தீட்டி நின்றான்
குழந்தையைக் கொன்றால் பாவம் சந்ததி இலாமல் போகும்
          என்றுதன் மனைவி சொன்ன சொல்லையும் கேளா மன்னன்
இழிகுண மாமன் கையில் கொடுத்ததைக் கொல்லச் செய்தான்
          இராவணன் வாய்ச்சொல் செய்வோன் அழகிய பேழை உள்ளே  
குழந்தையை வைத்து மூடி அமைச்சனை அழைத்து ஏவி 
          நாட்டினை விட்டு தூக்கி எறிந்திட வேண்டும் என்றான் 04

நாட்டையும் நம்மையும் அழிக்கும் பிள்ளையை வளர்க்க வேண்டாம் என்று இராவணன் முடிவு செய்து அதனைக் கொல்லவும் திட்டமிட்டான். அவன் மனைவி மண்டோதரி குழந்தையைக் கொல்வது பாவம். அதுமட்டுமன்றி நமக்குச் சந்ததியே இல்லாமல் போய்பிடும் என்று அழுது புலம்பினாள்.  இதனைக் கேளாத இராவணன் கொல்லவேண்டும் என்ற நோக்கில், தான் எது சொன்னாலும் அதனைச் செய்து முடிக்கும் மாரீசனிடம் இப்பொறுப்பை ஒப்படைத்தான். மாரீசன் அமைச்சன் ஒருவனை அழைத்து, அக்குழந்தையை ஓர் அழகிய பெட்டியில் வைத்து, இந்நாட்டைவிட்டு வேறு எங்கேயாவது போட்டுவிட்டு வரும்படி ஆனையிட்டான்.

அமைச்சனும் எடுத்துச் சென்று ஜனகனின் யாக பூமி
          உழுதிடும் தருனம் தன்னில் எடுத்ததாய் பேழை நீட்ட
அமைதியும் வியப்பும் சூழ ஆர்வமாய் திறந்த பார்க்க
          குறுகுறு பார்வை யோடு இருந்திடும் குழந்தை கண்டார்
அம்புசி லட்ச னங்கள் முழுவதும் நிறம்பப் பெற்று
          ஒளிர்ந்திடும் பொன்னின் மேனி புன்னகை முகமும் கண்டு
அமரரின் காய கல்பம் கிடைத்ததாய் இறைவன் வேண்டி
          ஜனகனும் சுனைனா பெற்று பரிவுடன் வளர்க்க ளானார்.  05

அமைச்சன் குழந்தை இருக்கும் பெட்டியை எடுத்துச் சென்று சனகபுரியில் யாக பூமையை பொன்னேர் பூட்டி உழுது கொண்டிருக்கும் நேரம் பார்த்து, அந்நிலத்தில் கிடைத்ததாய் பெட்டியை கொடுக்க, அமைதியோடும் வியப்போடு, ஆர்வத்தோடும் அப்பெட்டியை ஜனகனும் அவனது மனைவி சுனைனாவும் திறந்துபார்த்தனர். அதில் குறுகுறு பார்வை பார்த்தபடியே ஒரு குழந்தை இருந்தது கண்டு வியந்தனர். அக்குழந்தை இலட்சுமியின் சிறப்பு அம்சங்களை முழுவதுமாய்ப் பெற்று, பொன்னிறமாய் ஒளிவிடும் உடலும் சிரித்த முகமும் கண்டு, தேவாமிர்தமே தமக்குக் கிடைத்ததாக இறைவனை வேண்டிக்கொண்டு, பரிவுடன் வளர்த்து வந்தனர்.

பாலொடு அன்னம் நெய்யும் பருப்புடன் கலந்து தந்து
          தேனுறும் சுவைகள் ஊட்டி ஊனொடு உயிராய் எண்ணி
வேலொடு நின்று காத்து துன்பமும் நேரா வண்ணம்
          பொறுப்புடை பெற்றோர் போல குழந்தையை வளர்த்து வந்தார்.
நூலொடு நெய்த ஆடை பொலிவுற விளங்கற் போல 
          சனகனின் செல்லப் பிள்ளை சானகி பெயரைக் கொண்டு
மாலவன் இதய நங்கை மருவுரு கொண்டு வந்து
          பூமியின் மகளாய் தோன்றி சிறப்புடன் வளர்ந்து வந்தாள். 06

பால் நெய் பருப்பு கலந்த சோறும் தேன் போன்ற சுவையுடைய உணவுகளும் ஊட்டி உடம்பில் உள்ள உயிராக நினைத்து 


 
தேடியே கிடைத்த நல்ல பூச்செடி நட்டு வைத்து
          பரிவுடன் தொட்டுத் தொட்டு ஆசையாய் வளர்த்தல் போல
பீடுடை பெண்ணாம் சீதை பூமியின் பிள்ளை
 
 
காலொடு தண்டை ஆட  கழுத்தினில் ஆரம் சேர
          மரகதம் பவளம் முத்து என்பன அணிந்து 


Sunday, October 22, 2023

விவசாயி ஆற்றுப்படை

October 22, 2023
விவசாயி ஆற்றுப்படை
உலகுயிர் எல்லாம் உண்டிட வாழும்
நிலையினை அறிவீர் உயிரினம் கண்டு
நாளைய உணவு இதுவென ஒதுக்கி
வேளைகள் பிரித்து உண்பது இல்லை
கிடைத்ததை உண்பது எவ்வுயி ராயினும்
படைத்ததை உண்ணல் மானிடர் இயல்பே.
உண்ணும் பொருளை ஆக்கும் அறிவை
மண்ணில் மனிதர் மட்டும் பெற்றனர்.
காட்டிலும் மேட்டிலும் மரத்திலும் குகையிலும்
வேட்டை யாடியே உறங்கிக் கிடந்தவன்;
காயும் கனியும் பூவும் தழையும்
தேனும் கிழங்கும் சாரும் நீரும்
வேண்டும் பொழுது உண்டு வாழந்தவன்;
நாளைய உணவின் தேவை அறிந்து
இல்லம் அமைத்து இருக்கை அமைத்து
பள்ளம் மேடு பார்த்துப் பழகி
கூரிய கல்லால் ஆயுதம் செய்தும்
தோலால் தழையால் ஆடைகள் செய்தும்
குழுக்க ளாக ஒன்றாய் இணைந்தும்
காட்டைத் திருத்தி கழனிகள் செய்தும்
வேட்டை விலங்கை உழுதிட பழக்கியும்

நாவின் சுவைக்கு முதன்மை கொடுத்து
நானிலம் பகுத்து

Friday, October 20, 2023

நாமக்கல் ஆஞ்சநேயர் அலங்கார பஞ்சகம்

October 20, 2023
காப்பு

இருவிழி திறந்து கைகூப்பி நின்று
நரஅரி பார்க்கும் திறனது கண்டு
இராமனின் பக்தன் புகழ்ந்துநான் பாட
திரௌபதி அம்மன் மகிழ்வுடன் காப்பாள்

இராமனின் பக்தனான அனுமன் திறந்த இரண்டு விழிகளால் நரசிங்க முர்த்தியைக் கண்டு இருகரம் கூப்பி வணங்கும்  திறத்தினைக் கண்டு ஆஞ்சநேயன்மேல் நான்பாடும் அலங்கார பஞ்சகம் என்னும் நூலை திரௌபதி அம்மன் மகிழ்வுடன் காப்பாளாக.

வெண்பா

கற்பு சிறப்பினள் அஞ்சனை மைந்தா
பரிதி கனியென்று உண்ண - விரைந்தவா
ஆழி அணைகட்ட கோவர்த் தனகிரி
தாங்கினாய் என்னசொல்வேன் நான்  01

கற்பில் சிறந்த அஞ்சனையின் மைந்தனே. சூரியனைக் கனி  என்று பரித்து உண்ணச் சென்றாய் நீ. இலங்கைக்குச் செல்ல கடலிலே அணைக் கட்டுவதற்காகக் கோவர்த்தன மலையைப் பெயர்த்து எடுத்து வந்தவனே. உன் செயலை நான் என்னவென்று செல்வேன்.

கட்டளைக் கலித்துறை

நான்முகன் தந்தை அவதாரம் செய்து மனைவிதேடி
நான்கு திசையும் அலைந்து இறுதியில் வாயுமைந்தா
கோன்உனை கண்டு வரவேண்டும் என்று அனுப்பிவைக்க
மான்விழி நங்கை இருக்கும் இடம்தேடி சென்றனையே 02

நான்கு முகங்களை உடைய பிரம்மாவின் தந்தை இராமனாய் அவதாரம் செய்து தன்னுடைய மனைவியை காணாது, காட்டில் நான்கு திசைகளிலும் தேடி அலைந்து, இறுதியில் வாயுமைந்தனான உன்னிடத்தில் அரசனான இராமன் சீதையைக் கண்டுவரவேண்டும் என்று தன் மோதிரத்தைத் தந்து அனுப்ப, மான்விழி கொண்ட நங்கையாம் சீதை இருக்கும் இடம்தேடிச் சென்றாய்.

ஆசிரியப்பா

சென்று இடம்தேடி கண்டு வந்தவனே!
நினைத்தி ருந்தாள் கற்பினளை நீயே !
மீட்டு வந்தி ருப்பாய்; தலைவனுக்
கிழுக்கென சேதி சொல்ல வந்தாயே!
இளையோன் உயிர்காக்கும் சஞ்சீவி கொண்டுவந்து
மீண்டும் இடம்வைத்து திரும்பி வருகையில்
கிடைத்த திருமால் நிறம்கொண்ட பெரிய
சாளக் கிராமம் கொண்டு வந்தாய்!
பறந்துவரும் வேளையில் விடியல் கண்டு
சந்தியா வந்தனம் செய்யகீழே வைத்தாய்;
கடன்மு டித்து கையெடுக்க; வாரா
நிலைகண்டு வியந்து நின்றாய்; இராமன்
கடமை முடித்து என்னை எடுத்துச்
செல்லென்று வானொலி கேட்டு விட்டுச் 
சென்றாய்இராமன் துணையாய்ப் போரில் 
வென்று திரும்ப சாளக் கிராமம்
நரஅரியாய் வளர்ந்து நிற்கக் கண்டு
வியந்து கைகூப்பி வணங்கி நின்றாயே! 03

சீதை இருக்கும் இடம்தேடிச் சென்று கண்டுவந்து சொன்னவனே. நீ நினைத்திருந்தால் சீதையினை அப்போதே மீட்டுக் கொண்டுவந்திருப்பாய். அது உன் தலைவனான இராமனுக்கு இழுக்கென்று விட்டுவிட்டாய். இராமனின் தம்பி இலக்குவனின் உயிரைக் காக்க சஞ்சீவி மலையை எடுத்துவந்து உயிரைக் காத்தப் பின்னர், அம்மலையை மீண்டும் அதே இடத்தில் வைத்து விட்டு திரும்பும் வழியில் கிடைத்த திருமாலின் நிறம்கொண்ட பெரிய சாளக் கிராமம் ஒன்றைக் கையில் எடுத்து வந்தாய். வான்வழியே பறந்து வந்து கொண்டிருக்க பொழுது விடிந்ததைக் கண்டு, சந்தியா வந்தனம் செய்ய அதை ஓரிடத்தில் வைத்து, தன் பணியை முடித்து அதை எடுக்க நினைத்தாய். சாளாக் கிராமம் கையில் எடுக்க முடியாத நிலையில் விழித்துப் பார்க்க, இராமனக்குச் செய்யவேண்டிய பணிகளை முடித்துவிட்டு வரும்போது என்னை எடுத்துச் செல் என்று வானத்தில் இருந்து ஓர் ஒலி கேட்க, அதை அப்படியே விட்டுச் சென்று, இராமனுக்குத் துணையாய் இருந்து போரில் வெற்றிபெற்றுத் திரும்பி வந்து பார்க்க, அச்சாளாக்கிராமம் பெரிய நரசிங்க மூர்த்தியாய் வளர்ந்து நின்றிருந்தது கண்டு, வியந்து வணங்கி நின்றாய்.

ஆசிரியவிருத்தம்

நின்மார்பைத் திறந்து காட்டி பக்திக்கு உருவம் தந்தாய்
நின்வாலை நீட்டி பீமன் தமையனென்ற உண்மை சொன்னாய்
தனஞ்செயனின் கொடியாய் நின்று பாண்டவர்க்கு வெற்றி தந்தாய்
தன்உருவை மாற்றிக் கொள்ளும் திறத்தினாலே சீதை மீட்டாய் 04

உன்னுடைய மார்பினைத் திறந்து அதில் இராமன் சீதையின் உருவம் காட்டி, ஒரு பக்தன் எப்படி இருக்கவேண்டும் என்ற உண்மையைச் சொன்னாய். பீமன் செல்லும் வழியின் உன்னுடைய வாலை வழியில் நீட்டி, அவனது சகோதரன் நீ என்பதைச் சொன்னாய். பாரதப்போரில் அர்ச்சுனனின் தேரின் கொடியாக இருந்து, அவனுக்கு வரும் தாக்குதல்களைத் தாங்கி, பாண்டவர்களுக்கு வெற்றியை பெற்றுத் தந்தாய். உன்னுடைய உருவம் மாற்றிக்கொள்ளும் திறத்தினால் சீதையைக் கண்டுபிடித்து மீட்டெடுக்க வழிவகை செய்தாய்.

வண்ணம்

சீதைமனம் கவர்ந்தவனே சிரஞ்சீவி யானவனே;
பாதையினை புறம்தள்ளி வான்வழியே சென்றவனே;
கீதையினை முழுவதுமாய் கேட்டிருந்த புண்ணியனே
பேதமின்றி வணங்குகின்றோம் காத்திடுவாய் எங்களையே; 05

சாலை வழியாகச் செல்லாமல் வான்வழியாக இலங்கை சென்று, தன்னைக் காக்க யார் வருவார்கள் என்று மனக்கவலை கொண்டு சீதையின் உள்ளத்தைக் கவர்ந்து சிரஞ்சீவியாய் இருக்கும் வரத்தினைப் பெற்றவனே. மகாபாரதத்தில் அர்ச்சுனனுக்குச் சொன்ன கீதையினை நீயும் உடனிருந்து கேட்கும் புண்ணியத்தைச் செய்தவனே. பேதம் இன்றி அனைவரும் உன்னை வணங்குகின்றோம் உங்களைக் காத்திடுவாய் மாருதியே.

Tuesday, October 17, 2023

மாலை இலக்கியங்கள் நூல் வெளியிட்டு விழா

October 17, 2023
15.10.2023 ஞாயிற்றுக்கிழமை அன்று நாமக்கல் திருச்சி சாலையில் உள்ள நளா உணவக அரங்கில் இரட்டணை நாராயணகவியின் மாலை இலக்கியங்கள் என்னும் நூல் வெளியிடப்பட்டது.  

இந்நூலை நாமக்கல் கவிஞரின் இளய மகன் இராமலிங்கம் ராஜா வெளியிட அமுதசுரபி ஆசிரியர் திருப்பூர் கிருஷ்ணன் அவர்கள் பெற்றுக் கொண்டார்.

எழுத்தாளர் பாரி முடியரசன், நாமக்கல் கவிஞரின் பெயரன் நாமக்கல் இரா. அ. பழனியப்பன் மற்றும் குடும்பத்தினர், தேசிக விநாயகம் பிள்ளையின் பெயரன் குலசை அ. வேலுப்பிள்ளை,  பண்ணுருட்டி பாவலர் சுந்தரபழனியப்பன், வாணிதாசனின் பெயர்த்தி வளர்மதி முருகன் மற்றும் பலர் உடனிருந்து சிறப்பித்தனர். 

நாமக்கல் கவிஞர் 135 ஆவது பிறந்தநாள் விழா விருதுகள் வழங்கும் விழா நூல்கள் வெளியிட்டு விழா - 17.10.2023 பத்திரிகைச் செய்தி

October 17, 2023