பள்ளிக் கூடம் போகச் சொல்லி பாடம் சொன்னவர் – இவர்
பிள்ளைக் கூட்டம் தேடிச் சென்று பாடல் தந்தவர்
தாத்தா வுக்கும் பாப்பா வுக்கும் சேதி சொன்னவர் – இவர்
தத்தி தத்தி பாடு கின்ற மெட்டு தந்தவர்
கண்ணில் கண்ட பொருளை எல்லாம் பாட்டின் வடிவிலே – தந்து
மண்ணின் உள்ள மாந்தர் உள்ளம் மகிழச் செய்தவர்
எதுகை மோனை இயைபு என்று தொடையில் வகைகளை – பாட்டில்
பதங்கள் பார்த்து பொருளைச் சேர்த்து பாடி வைத்தவர்
பள்ளி செல்லும் பாப்பா தம்பி கொஞ்சம் நில்லுங்கள் – நம்ம
வள்ளி யப்பா பாடல் கண்டு பாடி மகிழுங்கள்.
Friday, November 19, 2021
குழந்தைக் கவிஞர் அழ வள்ளியப்பா
Tags
# கவிதைகள்

About தமிழ்க்கடல்
rettanainarayanakavi.blogspot.com என்ற இவ்வலைதளம் இரட்டணை நாராயணகவி எனும் புனைப்பெயர் கொண்ட முனைவர் க அரிகிருஷ்ணனின் படைப்புகளைத் தாக்கிய தளமாகும்.
கவிதைகள்
Tags:
கவிதைகள்