புரிந்துகொண்டு புன்னகைத்து அருள்வாய் போற்றி
தேவர்கள் உடனிருந்து காப்பாய் போற்றி
தெகிட்டாது அருள்வழங்கும் துணைவா போற்றி
தாவுகின்ற அனுமனனின் தலைவா போற்றி
தயிர்பானை உருட்டுகின்ற கள்வா போற்றி
பூவுரையும் திருமகளின் துணையே போற்றி
பூமியினை மீட்டுவந்த வராகா போற்றி 01
மராமரங்கள் ஒற்றையம்பில் துளைத்தாய் போற்றி
மல்லர்கள் வெற்றிகொண்ட திண்தோள் போற்றி
திருமகளை மார்பினிலே வைத்தாய் போற்றி
தீக்குணத்து இலங்கைவேந்தன் வென்றாய் போற்றி
நரசிங்க மாகவந்து நின்றாய் போற்றி
நந்தகோபன் மகனாக பிறந்தாய் போற்றி
உரல்இழுத்து மருதமரம் சாய்த்தாய் போற்றி
உன்பெயரைச் சொன்னவனைக் காத்தாய் போற்றி 02
பாலோடு வெண்ணையுண்டு வளர்ந்தாய் போற்றி
பாம்புக்குப் பகைகருடக் கொடியோன் போற்றி
பாலகனா யிருந்துபகை வென்றாய் போற்றி
பக்தர்க்கு அருள்புரியும் வைகுந்த போற்றி
ஆலிலையில் அமர்ந்தவனே அழகா போற்றி
ஆர்ப்பரிக்கும் கடல்நடுவே இருந்தாய் போற்றி
வாலுடையான் துணையாகக் கொண்டாய் போற்றி
வாமனனாய் மண்கேட்டு வந்தாய் போற்றி 03
வெண்ணையுண்ட வாயால்மண் உண்டாய் போற்றி
வண்டமரும் சோலையிலே இருந்தாய் போற்றி
மண்உண்டு வையம்காட்டி நின்றாய் போற்றி
முதுகுகாட்டி மலைதாங்கி கடைந்தாய் போற்றி
பெண்உருவம் கொண்டுதேவர் காத்தாய் போற்றி
பெருமழையை காத்தநின்ற மாலே போற்றி
பெண்ணுருவாய் அரவானை மனந்தாய் போற்றி
பார்த்தனுக்குத் துணையாக இருந்தாய் போற்றி 04
பாற்கடலுள் பள்ளிகொண்ட பரமா போற்றி
பணிந்தாரை வாழவைக்கும் இறைவா போற்றி
ஆறுகடல் மலையெல்லாம் நீயே போற்றி
அன்புகொண்ட உள்ளத்தில் வாழ்வாய் போற்றி
வேறாகி தூண்பிளந்த சிம்மா போற்றி
வாய்திறக்க அன்னையின்சொல் ஏற்றாய் போற்றி
மாற்றாரை வதம்செய்ய வந்தாய் போற்றி
மாடுமேய்க்கும் சிறுவனுனைத் தொழுவேன் போற்றி 05
ஈரடியால் உலகலந்த குறளா போற்றி
ஏழேழு பிறவியையும் ஆள்வாய் போற்றி
நாரதராய் அவதாரம் செய்தாய் போற்றி
நால்வேத பொருளாக இருப்பாய் போற்றி .
பாரதப்போர் நடத்திவைத்த பார்த்தா போற்றி
பாதாள பூமிதனை மீட்டாய் போற்றி
கார்மேக வண்ணனான கண்ணா போற்றி
கேசியென்னும் அரக்கவீரன் அழித்தாய் போற்றி 06
சிறைக்குள்ளே பிறந்தவனே சீமா போற்றி
சீதாவை கரம்பிடித்த ராமா போற்றி
உறவாக நீயெனக்கு வந்தாய் போற்றி
உரிமையுடன் வேண்டுகின்றேன் காப்பாய் போற்றி
உறங்குகின்ற கும்பகர்ணன் வென்றாய் போற்றி
ஊறுசெய்த அரசர்கள் வென்றாய் போற்றி
மறைக்கள்வன் சோமுகனை வென்றாய் போற்றி
மகாபலியின் யாகத்தில் நுழைந்தாய் போற்றி 07
திருமகளைத் தன்மார்பில் ஏற்றாய் போற்றி
தாமரையைக் கண்ணாகக் கொண்டாய் போற்றி
இருசுடர்கள் கண்ணாகக் கொண்டாய் போற்றி
இரட்டணையில் உறைகின்ற வரதா போற்றி
முரட்டுஏழு காளைகளை வென்றாய் போற்றி
மூன்றடியாய் மண்கேட்டு வந்தாய் போற்றி
அர்ச்சுனனின் தேரோட்டி ஆனாய் போற்றி
அன்னமாக வடிவெடுத்த அனந்தா போற்றி 08
வானரர்கள் அணைகட்ட நடந்தாய் போற்றி
வண்டுலவும் சோலைமலர் அணிந்தாய் போற்றி
கூனியது கூன்நிமிர்த்தி வைத்தாய் போற்றி
கயிற்றினாலே கட்டுண்ட கனியே போற்றி
வானுலவும் நாரதர்நா அமர்ந்தாய் போற்றி
வேங்கடத்து நின்றவனே வேதா போற்றி
மீனாக உயிரினங்கள் காத்தாய் போற்றி
மோகினியாய் அவதாரம் கொண்டாய் போற்றி 09
ஆதிசேடன் மேலமர்ந்த அனந்தா போற்றி
அலங்கார பிரியனாக இருந்தாய் போற்றி
பூதனையின் உயிர்பறிந்த புனிதா போற்றி
படியேறி வருபவர்க்கு அருள்வாய் போற்றி
நாத்தகவாள் கைக்கொண்ட நாதா போற்றி
நப்பின்னை காப்பதற்குத் துணிந்தாய் போற்றி
வேதத்தின் பொருளாக இருந்தாய் போற்றி
வாசுகியைக் கயிராக்கிக் கடைந்தாய் போற்றி 10
சக்கரத்தைக் காலாலே உதைத்தாய் போற்றி
சகடாசு ரன்தன்னை அழித்தாய் போற்றி
சுக்கிரரின் கண்குருடு செய்தாய் போற்றி
சோமுகன்கண் வேதத்தை மீட்டாய் போற்றி
சக்கரத்தை வலக்கையில் வைத்தாய் போற்றி
சிவதனுசை முறித்துவென்ற முதல்வா போற்றி
நகமென்னும் ஆயுதத்தால் கிழித்தாய் போற்றி
நோய்தீர்க்கும் துளசிமாலை அணிந்தாய் போற்றி 11
ஆயர்கள் குளவிளக்கே ஐயா போற்றி
அன்னமாகி உபதேசம் செய்தாய் போற்றி
காயாம்பூ மேனியினைக் கொண்டாய் போற்றி
குழந்தையாக குடைபிடித்து வந்தாய் போற்றி
தாய்மாமன் கம்சனையும் வென்றாய் போற்றி
தாரமாக யசோதாவை மணந்தாய் போற்றி
மாயவித்தை செய்வதிலே வல்லான் போற்றி
மதுவென்னும் அரக்கனைநீ வென்றாய் போற்றி 12
பாண்டவரின் தூதனாகச் சென்றாய் போற்றி
பாரிசாத மரம்கொண்டு வந்தாய் போற்றி
பாண்டவர்கள் செல்வத்தை மீட்டாய் போற்றி
பாஞ்சசன்யம் இடக்கையில் கொண்டாய் போற்றி
வேண்டுவரம் தருபவனே வேதா போற்றி
வேய்ங்குழலை இசைப்பவனும் நீயே போற்றி
தாண்டுகின்ற குதிரையிலே வருவாய் போற்றி
துரியனவன் குலமழிய செய்தாய் போற்றி 13
மாடுகளை மேய்க்கின்ற மாயா போற்றி
மதம்கொண்ட யானையினை அழித்தாய் போற்றி
காடுகளின் தலைவனாக இருப்பாய் போற்றி
குபேரனது பிள்ளைசாபம் தீர்த்தாய் போற்றி
காட்டினிலே குகன்கண்டு மகிழ்ந்தாய் போற்றி
கன்றுகளை அரவணைத்து காப்பாய் போற்றி
காடலைந்து துணைதேடி நடந்தாய் போற்றி
கோபியரின் ஆடைகளை மறைத்தாய் போற்றி 14
நிலவுமுகம் கொண்டவனை மணந்தாய் போற்றி
நெய்த்திருடி அகப்பட்ட விழிதாய் போற்றி
இலங்கையரை வென்றிட்ட ராமா போற்றி
இரத்தினங்கள் நீலமணி அணிந்தாய் போற்றி
பலம்கொண்டு மல்யுத்தம் செய்தாய் போற்றி
பாம்பினையும் கருடனையும் கொண்டாய் போற்றி
நலம்பயக்கும் திருநாமம் தந்தாய் போற்றி
நாரணணை முழுநேரம் துதிப்பேன் போற்றி 15
மராமரங்கள் ஏழினையும் துளைத்தாய் போற்றி
முதலையின்வாய்க் கசேந்திரனை மீட்டாய் போற்றி
பெரியாழ்வார் வளர்ப்புமகள் மணந்தாய் போற்றி
பசுக்கூட்டம் பின்னடந்து போவாய் போற்றி
இராவணணின் சிரம்கொய்து வென்றாய் போற்றி
இன்னல்கள் நீக்கிஎனைக் காப்பாய் போற்றி
அர்ச்சுனனின் தேரோட்டி ஆனாய் போற்றி
அயோத்தியினை ஆட்சிசெய்த அனந்தா போற்றி 16
பார்த்தனனை தோழனாக ஏற்றாய் போற்றி
பகாசுரனின் கொக்குவாயைப் பிளந்தாய் போற்றி
தாருகனை வதம்செய்து வென்றாய் போற்றி
தந்தையின்சொல் தட்டாத தனையா போற்றி
சூர்ப்பணகை தமையர்கள் வென்றாய் போற்றி
சமுத்திரத்தில் அணைக்கட்டி நடந்தாய் போற்றி
பேரின்ப வீட்டின்தி றவுகோல் போற்றி
பழவினையைத் தீர்த்தருளும் பரமா போற்றி 17
காடுமலை கடந்துசென்ற கண்ணா போற்றி
கோபியரின் உளம்கவர்ந்த கிருட்ணா போற்றி
தோடுடைய பெண்காக்க விரைந்தாய் போற்றி
திருக்குடந்தை நகர்உறையும் திருமால் போற்றி
வீட்டிலுள்ளோர் நலங்காத்து அருள்வாய் போற்றி
வசுதேவர் தேவகியின் மைந்தா போற்றி
பாடுபுகழ் பணிந்தவரைக் காப்பாய் போற்றி
புதுமலர்கள் கொண்டுவந்தேன் ஏற்பாய் போற்றி 18
ஆதிசேடன் படுக்கையாக கொண்டாய் போற்றி
ஆயர்பா டியாதவனாய்ப் பிறந்தாய் போற்றி
வேதியன்போல் யாகசாலை வந்தாய் போற்றி
வேணுவெனும் அசுரனையும் அழித்தாய் போற்றி
சேதிசொல்ல துரியன்பால் நடந்தாய் போற்றி
சங்கெடுத்துப் போர்முடித்து வைத்தாய் போற்றி
சாதகமாய் பாண்டவர்க்கு இருந்தாய் போற்றி
சனகனுக்கு மறுமகனாய் ஆனாய் போற்றி 19
திருவரங்கில் சயனிக்கும் அரங்கா போற்றி
திருமகளின் மணவாளா ரங்கா போற்றி
திருமுருகன் தாய்மாமன் ஆனாய் போற்றி
திருப்பிரிதி ஊர்உறையும் வரதா போற்றி
திருவடியில் பாதுகாப்பு தந்தாய் போற்றி
திரௌபதிக்கு ஆடைதந்து காத்தாய் போற்றி
திருவோண நன்னாளில் அருள்வாய் போற்றி
திருப்பதியில் நின்றிருந்து அருள்வாய் போற்றி 20
உலகமுண்ட பெருவயிறு உடையான் போற்றி
ஊனுடம்பு என்னுயிராய் ஆனாய் போற்றி
மல்லர்கள் வெற்றிகொண்ட தோளே போற்றி
மாடுமேய்த்து குடிகாத்த மாலே போற்றி
வலக்கரத்தில் சக்கரத்தை ஏற்றாய் போற்றி
வாகனமாய் கருடனைநீ கொண்டாய் போற்றி
விலங்கவிழ்த்துத் தாய்தந்தை மீட்டாய் போற்றி
விண்ணளந்து தேவரினம் காத்தாய் போற்றி 21
பொற்சதங்கை ஒலியெழுப்ப நடந்தாய் போற்றி
பெண்ணுருவாய் வந்தமிழ்தம் தந்தாய் போற்றி
பிறவியெனும் கடல்நீந்த வைப்பாய் போற்றி
பிள்ளைமுதல் இன்றுவரை காத்தாய் போற்றி
பிறப்பறுக்கும் ஒருபொருளும் நீயே போற்றி
கரம்தாங்கி துன்பங்கள் தீர்ப்பாய் போற்றி
பிறவாமை செய்தென்னை காப்பாய் போற்றி
பற்றாக உனைப்பற்ற வைப்பாய் போற்றி 22
ஐராவதத்தை இந்திரனுக் களித்தாய் போற்றி
ஐங்கரனை சிரிப்புமூட்டி வென்றாய் போற்றி
இரணியனின் மார்புதனை பிளந்தாய் போற்றி
இந்திரனின் சோதரனே காப்பாய் போற்றி
இருப்பிடமாய் நல்மனத்தை கொண்டாய் போற்றி
இந்துநுதல் திருமகளின் கணவா போற்றி
திருநாமம் சொன்னவனைக் காத்தாய் போற்றி
திருப்பதியில் நின்றவனாய் அருள்வாய் போற்றி 23
ரோகிணியின் மைந்தனாகப் பிறந்தாய் போற்றி
ரகுகுலத்தில் வந்துதித்த ராமா போற்றி
காக்கையது ஒருகண்ணை பறித்தாய் போற்றி
காளியனின் தலைநடனம் செய்தாய் போற்றி
ரோகிணியில் அவதரித்த கிருஷ்ணா போற்றி
காவிரியின் கரைமீது கிடந்தாய் போற்றி
நாககுடை கொண்டவனும் நீயே போற்றி
நீலநிறம் கொண்டவனே நாதா போற்றி 24
குடக்கூத்து ஆடிபேரன் மீட்டாய் போற்றி
கோபியர்கள் கொஞ்சுகின்ற ரமனா போற்றி
இடக்கரத்தில் சங்கெடுத்து நின்றாய் போற்றி
எதிர்த்துவந்த அரக்கர்கள் மாய்த்தாய் போற்றி
விடமுண்டோன் தலைக்காத்த மங்கை போற்றி
கோதண்டம் கைக்கொண்ட கோவே போற்றி
தடையேதும் இல்லாம் அருள்வாய் போற்றி
மன்மதனின் தந்தையான தலைவா போற்றி 25
கோடைவெயில் உடல்தணிக்கும் குளிரே போற்றி
கும்பிட்டோர் குறைதீர்த்து அருள்வாய் போற்றி
ஊடல்கள் தீர்த்துவைக்கும் உணர்வே பேற்றி
உடலுக்குள் உதிரமென இருப்பாய் போற்றி
கோடைமழை மேகமென வந்தாய் போற்றி
கர்ணனிடம் யாசகனாய் நின்றாய் போற்றி
பீடுடைய மார்கழியில் சிறந்தாய் போற்றி
பொங்குகின்ற பாற்கடலுள் கிடந்தாய் போற்றி 26
ஊனுடம்பை ஆட்டுவிக்கும் உயிரே போற்றி
உடல்நோயைத் தீர்க்கின்ற மருந்தே போற்றி
தேன்துளியின் தித்திப்புச் சுவையே போற்றி
துன்பநோயைத் தீர்த்துசுகம் தருவாய் போற்றி
கோனாகி ஆட்டிவைக்கம் அன்பே போற்றி
கும்மிருட்டில் பாதைகாட்டும் ஒளியே போற்றி
ஏனமுரு கொண்டுபூமி மீட்டாய் போற்றி
ஏற்றிவிடும் ஏணிப்ப டிஆனாய் போற்றி 27
மலையப்ப சுவாமியாக அருள்வாய் போற்றி
மண்தின்று யாவுமாகி நின்றாய் போற்றி
மலர்ப்பாதம் அடைக்கலமாய்த் தருவாய் போற்றி
மலர்மகளை நெஞ்சினிலே வைத்தாய் போற்றி
மலைமகளின் அண்ணனான கண்ணா போற்றி
மலர்சூடி தந்தஆண்டாள் ஏற்றாய் போற்றி
மலைதூக்கி மழைகாத்து நின்றாய் போற்றி
மணிமகுடம் சூடிஅர சேற்றாய் போற்றி 28
தலைபத்து அறுத்தெடுத்த தலைவா போற்றி
தன்வந்தி ரியாகவந்து அருள்வாய் போற்றி
கல்மாரி காத்தவனே கதிரே போற்றி
கோபியர்கள் தாலாட்டும் பிள்ளாய் போற்றி
வில்லொடித்து சீதைதனை மணந்தாய் போற்றி
வெற்றிசொல்ல சங்கெடுத்து ஒளித்தாய் போற்றி
செல்வமகள் துணைகொண்டு அருள்வாய் போற்றி
சேதிசொல்ல பகையிடத்து சென்றாய் போற்றி 29
ஏர்க்கலப்பை கைக்கொண்டு இருந்தாய் போற்றி
ஏட்டினிலே எழுத்தாகி பதிந்தாய் போற்றி
பார்ப்பதற்கு வசீகரமாய் நின்றாய் போற்றி
பாதாள பூமியினை மீட்டாய் போற்றி
நாரதராய் அவதாரம் செய்தாய் போற்றி
நாணயத்தின் இருபக்கம் ஆனாய் போற்றி
நீருக்குள் குளிராக உறைந்தாய் போற்றி
நீலநிற மேனிகொண்டு வந்தாய் போற்றி 30
நெருப்புக்குள் செந்நிறமும் நீயே போற்றி
நிலவுக்குள் ஒளியாகி இருந்தாய் போற்றி
திருகுமரன் மருமகனாய் ஏற்றாய் போற்றி
தாய்தந்தை பிரிந்துசென்ற ராமா போற்றி
பிரபஞ்சம் காக்கின்ற பரமா போற்றி
பரம்பொருளாய் யாவுமாகி நின்றாய் போற்றி
பரமசிவன் பார்வதியின் உறவே போற்றி
பறவையினை வாகனமாய்க் கொண்டாய் போற்றி 31
நீர்நிலைகள் சிறியதாக வளர்ந்தாய் போற்றி
நினைத்ததையே நடத்திவைக்கும் நித்யா போற்றி
ஊர்வணங்கும் ஓர்உருவாய் ஆனாய் போற்றி
உறவுக்குள் உறவாகி இருந்தாய் போற்றி
நீர்வாழும் உயிர்த்தோற்றம் கொண்டாய் போற்றி
நான்முகனின் வேண்டுதல்கள் ஏற்றாய் போற்றி
நாரணனே என்துணையாய் இருப்பாய் போற்றி
நஞ்சுண்ட சிவன்மகனின் மாமா போற்றி 32
பிரளயத்தில் உயிரினங்கள் காத்தாய் போற்றி
பூகண்கள் கொண்டவனே புனிதா போற்றி
பரிணாம வளர்ச்சிகாட்டி பிறந்தாய் போற்றி
பாற்கடலில் மேருமலை சுமந்தாய் போற்றி
தருமங்கள் நிலைநாட்ட உதித்தாய் போற்றி
தலைதேவன் மீன்உடலாய் உதித்தாய் போற்றி
பரிவோடு யாவரையும் காப்பாய் போற்றி
பாவங்கள் தீர்ப்பவனே பரமா போற்றி 33
கூர்மமாகி தரையேறி வந்தாய் போற்றி
கமண்டலத்து நீர்உலவி மிதந்தாய் போற்றி
நீர்நிலத்து உயிரினமே கடமம் போற்றி
நதிநீரைக் கடந்துசென்ற மகவே போற்றி
கூரியதந் தம்கொண்ட உயிரே போற்றி
கொடுக்கின்ற அவதாரம் ஆமை போற்றி
கூர்மையான பற்கள்கொண் டஏனம் போற்றி
கோசலையின் புதல்வனாகப் பிறந்தாய் போற்றி 34
ஆமைஉடல் கொண்டமிழ்தம் தந்தாய் போற்றி
அமுதகல சம்தாங்கி வந்தாய் போற்றி
ஆமையாகி தேவரின்னல் தீர்த்தாய் போற்றி
அழிக்காத அவதாரம் கூர்மம் போற்றி
பூமியிலே நான்குகாலில் நடந்தாய் போற்றி
பூவெடுத்து துதித்தயானை மீட்டாய் போற்றி
பூமகளின் மனம்கவர்ந்த புனிதா போற்றி
பூமியினை நுனிகொம்பில் சுமந்தாய் போற்றி 35
தன்வந்தி ரியாகிநோய்கள் தீர்த்தாய் போற்றி
திமிங்கலமாய் படகுகாத்த துணிவே போற்றி
துன்பம்கண் டுபோக்குகின்ற குணமே போற்றி
தொடைமீது வைத்துடல் கிழித்தாய் போற்றி
மனிதகுணம் மிருககுணம் பெற்றாய் போற்றி
முதலையின்வாய் யானைமீட்ட மூலா போற்றி
மனிதஉடல் சிங்கமுகம் கொண்டாய் போற்றி
மந்ரமலை சுமந்தவனே மாலே போற்றி 36
ஆண்பன்றி வடிவமாகி வந்தாய் போற்றி
அறியாமை இருள்போக்கிக் காத்தாய் போற்றி
பெண்வடிவை ஏற்றமிழ்தம் தந்தாய் போற்றி
பாற்கடலில் தோன்றியவள் மணந்தாய் போற்றி
தூணுக்குள் ஒளிந்திருந்த தேவா போற்றி
தேவனுடல் பன்றிதலை கொண்டாய் போற்றி
தூண்பிளந்து பிள்ளைகாத்த தயவே போற்றி
தேவனாக மீனாகப் பிறந்தாய் போற்றி 37
விரல்நகமே ஆயுதமாய் கொண்டாய் போற்றி
வாசலிலே குடியிருந்து காப்பாய் போற்றி
கிருதமாலா ஆற்றில்சி றுமீனாய் வந்தாய்
குடல்மாலை கொண்டவரே குருவே போற்றி
இரணியாட்சன் அழித்துபூமி மீட்டாய் போற்றி
இருட்டுநிறம் கொண்டவனே இனியா போற்றி
இரவுக்குள் அன்னைமாறச் செய்தாய் போற்றி
இன்முகத்தில் காட்சிதரும் இறைவா போற்றி 38
குருசுக்ரன் கண்குருடு செய்தாய் போற்றி
குள்ளமுனி யாகவந்த குந்தா போற்றி
சர்வலோக நாயகனே சம்பு போற்றி
சங்குசக்ர தாரியான சயனா போற்றி
அருகம்புல் ஆயுதமாய் கொண்டாய் போற்றி
அந்தனனாய் குடைதாங்கி வந்தாய் போற்றி
திருவோண திருநாளின் சிறப்பே போற்றி
தாழம்பூ குடையுடைனே வந்தாய் போற்றி 39
கங்கைவேடன் குடில்தங்கி இருந்தாய் போற்றி
கூர்மமாகி மலைதாங்கி இருந்தாய் போற்றி
தங்கைசேலை தந்துமானம் காத்தாய் போற்றி
தேவலோக பசுமீட்ட தேவா போற்றி
திங்களொடு செம்பருதி விழியோன் போற்றி
தசரதனின் உயிரான உயிரே போற்றி
அந்திநேரம் உனக்குகந்த காலம் போற்றி
அவதூறு செய்தவரை அழிப்பாய் போற்றி 40
மோட்சம்தந் திரணியனைக் காத்தாய் போற்றி
மூன்றடிமண் கேட்டுலகை அளந்தாய் போற்றி
ஓட்டுக்குள் ஒளியும்த லைகொண்டாய்ப் போற்றி
ஓரடியில் பூமியினை அளந்தாய் போற்றி
கோடாரி கைக்கொண்ட துணிவே போற்றி
கூப்பிட்டக் குரலுக்கு வருவாய் போற்றி
கோடைமழை யாகவந்து காப்பாய் போற்றி
காமதேனு கவர்ந்தவன் அழித்தாய் போற்றி 41
ஈரடியில் வானத்தை அளந்தாய் போற்றி
இன்பதுன்பம் கலந்தெனக்குத் தருவாய் போற்றி
ஊர்ந்துசெல்லும் ஓர்உயிராய் வந்தாய் போற்றி
உறவுகளை தந்தென்னைக் காப்பாய் போற்றி
நீர்த்துவாரம் அடைத்தவன்கண் அழித்தாய் போற்றி
நிலைத்தபுகழ் வந்தடையச் செய்வாய் போற்றி
நீருக்குள் ஒளிந்துகொண்டு இருந்தாய் போற்றி
நின்பாதம் அடைந்தஎன்னைக் காப்பாய் போற்றி 42
மீன்வணங்கும் மாந்தர்கள் காப்பாய் போற்றி
மணல்வீடு கட்டிவைக்க சிதைத்தாய் போற்றி
மூன்றடிமண் தானமாகக் கேட்டாய் போற்றி
மூவுலகும் காக்கின்ற மூலா போற்றி
மான்விழியாள் மாலைசூட ஏற்றாய் போற்றி
மூவடியை தலைவைத்து மாய்த்தாய் போற்றி
நான்முகனின் தந்தையான நாதா போற்றி
நால்வர்க்கு மூத்தவனே ராமா போற்றி 43
இரகுகுல வம்சத்து தோன்றல் போற்றி
இட்சுவாகு வம்சத்தில் உதித்தாய் போற்றி
இருசுடரை உன்விழியாய்க் கொண்டாய் போற்றி
இலட்சுமனன் சோதரனே இறைவா போற்றி
பரசுகையில் ஏந்திநிற்கும் பகவன் போற்றி
பரவையிலே பாம்பணையில் இருப்பாய் போற்றி
உரமிகுந்த திண்தோள்கள் உடையாய் போற்றி
ஊருசெய்யும் அசுரர்கள் அழித்தாய் போற்றி 44
சத்யவிர தன்கைநீரில் வந்தாய் போற்றி
செங்கமல மலர்விரும்பி ஏற்றாய் போற்றி
சித்தமெல்லாம் நீயாக இருந்தாய் போற்றி
சிரம்தாழ்த்தி வணங்குகின்றேன் உன்னைப் போற்றி
எத்திசையும் புகழ்மணக்கச் செய்வாய் போற்றி
இனியசெயல் செய்திடவே வைப்பாய் போற்றி
சித்திரையில் பௌர்ணமியாய் வருவாய் போற்றி
சிறப்புடனே வாழ்வதற்கு அருள்வாய் போற்றி 45
விண்ணளந்து தேவரினம் காத்தாய் போற்றி
வசிஷ்டமுனி குலகுருவாய் ஏற்றாய் போற்றி
மண்ணுலகில் அவராதம் கொண்டாய் போற்றி
மாகாபலியின் யாகசாலை வந்தாய் போற்றி
விண்ணவர்கள் குறைபோக்கும் விமலா போற்றி
வாய்அமுதம் போலவந்து சுவைப்பாய் போற்றி
எண்ணியதை நிறைவேற்றித் தருவாய் போற்றி
என்னுடலைக் காக்கின்ற மருந்தே போற்றி 46
தாடகைக்கு வீடுபேறு அளித்தாய் போற்றி
திருவரங்கில் கிடந்தகோலம் கண்டாய் போற்றி
காமம்பொய் களவுநீங்கச் செய்வாய் போற்றி
அர்ச்சுனனின் தேரோட்டி ஆனாய் போற்றி
கடைபாதம் இடம்தந்து காப்பாய் போற்றி
மரமேறி தோழனாக ஏற்றாய் போற்றி
பஞ்சசன்யம் கரம்கொண்ட பகவான் போற்றி 47
வரதராச பெருமானே துதிப்பேன் போற்றி
வேங்கடத்தில் உறைகின்ற இறைவா போற்றி
அரவாணை மணந்தவனே அரியே போற்றி
மீன்விழியாள் உடனிருந்து அருள்வாய் போற்றி
மருதமரம் அடிசாய நடந்தாய் போற்றி
மலைசூழ்ந்த இலங்கைசென்று வென்றாய் போற்றி
சிரம்பத்து வென்றுமோட்சம் தந்தாய் போற்றி
சிவதனுசு வில்லொடித்து மணந்தாய் போற்றி 48
கார்த்தவீரி யன்சிரசு கொய்தாய்ப் போற்றி
கைகேயி பாசமகன் ஆனாய் போற்றி
மாரீசன் வெற்றிகொண்ட மறவா போற்றி
மனதாலும் உடலாலும் துதிப்பேன் போற்றி
சூரியனாய் இருப்பவனே சிம்மா போற்றி
சிபிமரபு வழிவந்த சீமான் போற்றி
ஆறுகடல் உன்நிறமே கண்டேன் போற்றி
அன்புவழி நின்றவரைக் காப்பாய் போற்றி 49
ஐவேலங் காட்டுலவும் பெண்ணே போற்றி
ஐம்பொறிகள் அடக்கிகாக்கும் ஐயா போற்றி
மூவேழு தலைமுறைகள் அழித்தாய் போற்றி
வசிஷ்டமுனி பெயர்வைத்த வளமே போற்றி
பாவங்கள் எனைநீங்கச் செய்வாய் போற்றி
பற்றற்ற துறவிபற்றும் பொருளே போற்றி
தேவகியின் மைந்தனான கிருஷ்ணா போற்றி
தூண்துரும்பு எவ்விடத்தும் இருப்பாய் போற்றி 50
சித்தாசி ரமம்காத்த சீடா போற்றி
சேல்கெண்டை மீன்கண்ணி மணந்தாய் போற்றி
பத்மசூரன் அழிக்கபெண்ணாய் வந்தாய் போற்றி
பாம்போடு பகைகருடன் கொண்டாய் போற்றி
சுதர்சனத்தால் எதிரிகளை வெல்வாய் போற்றி
சுக்ரீவன் துயர்தீர்த்த சுதர்சா போற்றி
பெத்தவளின் மனம்குளிர வைத்தாய் போற்றி
ஜமதக்னி ரேணுகாவின் புதல்வா போற்றி 51
பச்சையாகி பயிர்வளர்க்கும் விந்தை போற்றி
பாலுக்குள் புளிப்பாகி இருந்தாய் போற்றி
கசப்புக்குள் இனிப்பாகி நின்றாய் போற்றி
கோசலையின் புதல்வனாகப் பிறந்தாய் போற்றி
விசுவாமித் திரர்உள்ளம் கவர்ந்தாய் போற்றி
வேதங்கள் மீட்டெடுத்துத் தந்தாய் போற்றி
தசரதனின் மூத்தமகன் ராமா போற்றி
தாய்அதிதி காசியபர் மைந்தா போற்றி 52
விந்தைகளைச் செய்துபகை வென்றாய் போற்றி
விஷ்ணுபக்தன் பிரகலாதன் காத்தாய் போற்றி
தந்தையின்சொல் தலைக்கொண்ட தனையா போற்றி
தவம்செய்து பரசுபெற்ற தவமே போற்றி
இந்திரனின் சோதரனே இறைவா போற்றி
இளமையிலே பகைவென்று மகிழ்ந்தாய் போற்றி
மந்தரையின் சூழ்ச்சியிலே வீழ்ந்தாய் போற்றி
மன்னனாக ஏற்றுநாடு ஆண்டாய் போற்றி 53
தஞ்சமென வந்தவரைக் காப்பாய் போற்றி
தாயோடு உடன்பிறந்தார் அழித்தாய் போற்றி
வஞ்சமின்றி வாழ்வோர்க்கு அருள்வாய் போற்றி
வாமனனாய் வந்துபூமி அளந்தாய் போற்றி
நஞ்சுடைய பாம்படக்கி வென்றாய் போற்றி
நல்லநிலை உடல்மனதை அளிப்பாய் போற்றி
நெஞ்சுரத்தால் கம்சனையே வென்றாய் போற்றி
ஜெயவிஜயன் பெற்றசாபம் தீர்த்தாய் போற்றி 54
உரல்கயிறால் கட்டுண்ட உடலே போற்றி
உன்புகழைப் பாடிநின்றேன் அருள்வாய் போற்றி
கருநெய்தல் பூப்போன்ற கண்ணே போற்றி
கார்மேகம் நிறம்கொண்ட கதிரே போற்றி
இரணியனின் பெருமைகளை வென்றாய் போற்றி
வடமதுரை அரசனான நந்தா போற்றி
கருப்புவைரம் போலிருக்கும் கண்ணா போற்றி
குபேரமக்கள் பெற்றசாபம் தீர்த்தாய் போற்றி 55
மயிற்பீலி பட்டாடை அணிந்தாய் போற்றி
குழலோசை கொண்டுபசு மேய்த்தாய் போற்றி
உயிர்காக்கும் என்னருமை இறைவா போற்றி
ஆர்ப்பரிக்கும் கடலுக்குள் இருந்தாய் போற்றி
தயிர்பால்நெய் தேடிஉண்டதேவா போற்றி
கொடைவள்ளல் மகாபலிக்கு அருள்வாய் போற்றி
எயிற்றினிலே பூமிதனைச் சுமந்தாய் போற்றி
கற்புடைய ரேணுகாவின் குமரா போற்றி 56
மண்ணுருண்டை கூன்நிமிரச் செய்தாய் போற்றி
கோட்டியூரில் கோவில்கொண் டமாயா போற்றி
வண்டமரும் தேன்மலர்கள் ஆனாய் போற்றி
வாடாத மாலைசூடி இருந்தாய் போற்றி
மண்டோதரி மகள்மணந்த மன்னா போற்றி
மனுவுக்கு ஆணையிட்ட மீனே போற்றி
தண்டைகாலில் ஒலியெழுப்பு நகர்ந்தாய் போற்றி
தண்ணீரில் உலவுகின்ற சுறவே போற்றி 57
பூத்தமலர் கையெடுத்து வந்தேன் போற்றி
புத்தாடை யோடுஅதை அணிவாய் போற்றி
காத்திருக்கேன் உன்னருனைப் பெறவே போற்றி
கடைபார்வை தந்தெனக்கு அருள்வாய் போற்றி
ஏத்தும்சொல் லெடுத்துஉனைத் துதிப்பேன் போற்றி
இருள்வாழ்வு ஒளிபெறவே செய்வாய் போற்றி
நாத்தாகி வான்பார்த்து இருந்தேன் போற்றி
சாரல்ம ழையாகவந்து காப்பாய் போற்றி. 58
கோகுலத்தைக் காக்கின்ற அரசே போற்றி
குழலூதி எனைமயக்கும் இசையே போற்றி
ரோகிணியில் அவதரித்த கண்ணா போற்றி
ரவியாகி ஒளிதந்த கதிரே போற்றி
மூக்கறுத்த சோதரனைப் பெற்றாய் போற்றி
நந்தகோபன் குமரனாகப் பிறந்தாய் போற்றி
பாக்குமரம் போல்உயர்ந்து அளந்தாய் போற்றி
பாதுகையாய் அரசான்ற பராமா போற்றி 59
சக்கரத்தால் சூரியனை மறைத்தாய் போற்றி
கும்பனது மகள்மணந்த காளை போற்றி
ருக்மணியை கரம்பிடித்த அழகே போற்றி
கடல்நடுவே அணைகட்டி நடந்தாய் போற்றி
சக்கரத்தை உளைமாட்ட வைத்தாய் போற்றி
காகம்கண் கொய்துஉயிர் காத்தாய் போற்றி
கொக்குருவில் வந்தவனை வென்றாய் போற்றி
கோபமின்றி வனவாசம் போனாய் போற்றி 60
சேவைசேய்து வாழுகின்றேன் காப்பாய் போற்றி
சிரமமில்லா வாழ்வுவாழச் செய்வாய் போற்றி
பாவகடல் நீந்தசெய்யும் படகே வேற்றி
பணிவோடு அருள்கின்றேன் பரமா போற்றி
தேவைகளை அறிந்தெனக்கு அருள்வாய் போற்றி
தெளிவான புத்தியினைத் தருவாய் போற்றி
பூவையர்கள் மணம்கவரும் புனிதா போற்றி
பஞ்சாயு தம்கரங்கள் கொண்டாய் போற்றி 61
முனிவனாகி காட்டிற்குச் சென்றாய் போற்றி
மருதமலர்ச் சோலையிலே இருந்தாய் போற்றி
வனவாசம் புதிதல்ல உனக்கே போற்றி
வசுதேவர் மைந்தனாகி வந்தாய் போற்றி
பொன்மானைப் பிடித்துவரச் சொன்றாய் போற்றி
பொய்கையிலே யானைமீட்ட புனிதா போற்றி
தன்மானம் காத்தவளைக் காத்தாய் போற்றி
தாய்தந்தை விலங்கவிழ்த்த தனையா போற்றி 62
சூர்ப்பணகை மூக்கறுக்க வைத்தாய் போற்றி
சிறுபுல்லை ஆயுதாமாய் கொண்டாய் போற்றி
பாரதப்போர் சூழ்ச்சியினால் வென்றாய் போற்றி
பேரனுக்கு உஷைமணம் செய்தாய் போற்றி
ஓர்இரவில் இருதாய்க்கு மகனே போற்றி
வேய்ங்குழலோன் உனைவேண்டி நின்றேன் போற்றி
நீரூற்று போலவந்து காப்பாய் போற்றி
நீலமணி நிறம்கொண்ட நிமலா போற்றி 63
ஏரோட்ட ஒருபிறவி எடுத்தாய் போற்றி
ஏற்றிவிடும் ஒருதெய்வம் நீயே போற்றி
தேரோட்ட ஒருபிறவி எடுத்தாய் போற்றி
தெளிந்தமனம் தந்திடுவாய் எனக்கே போற்றி
நீராள ஒருபிறவி எடுத்தாய் போற்றி
நிம்மதியாய் வாழவழி செய்வாய் போற்றி
பாராள ஒருபிறவி எடுத்தாய் போற்றி
பணிந்துநின்றோம் வரங்களைநீ தருவாய் போற்றி 64
உலகுகாக்க ஒருபிறவி எடுத்தாய் போற்றி
உறவுகாக்க ஒருபிறவி எடுத்தாய் போற்றி
மலைசுமக்க ஒருபிறவி எடுத்தாய் போற்றி
மனம்முழுதும் உனைவைத்தேன் காப்பாய் போற்றி
நிலம்மீட்க ஒருபிறவி எடுத்தாய் போற்றி
நிலையான தெய்வமேநீ அருள்வாய் போற்றி
நிலைகாட்ட ஒருபிறவி எடுத்தாய் போற்றி
நலம்மிகுந்த உடல்மனதைத் தருவாய் போற்றி 65
நப்பின்னை மணக்ககாளை வென்றாய் போற்றி
நாரணனே என்சிந்தை முழுதும் போற்றி
விபீஷணனை தோழனாக ஏற்றாய் போற்றி
வேங்கடத்தில் நின்றிருந்து அருள்வாய் போற்றி
விபீஷணனை அரசாள செய்தாய் போற்றி
விநாயகன் சக்கரத்தை மீட்டாய் போற்றி
விபரீதம் நடவாமல் காப்பாய் போற்றி
விழுந்துன்னை வணங்குகின்றேன் சிறப்பாய் போற்றி 66
காளியனவன் செருக்கடக்கி வைத்தாய் போற்றி
கேசிகனை வெற்றிகண்ட குருவே போற்றி
காளியனைச் சரணடைய வைத்தாய் போற்றி
கருங்கூந்தல் சீதையுடன் நடந்தாய் போற்றி
காளியவள் அண்ணனான கண்ணா போற்றி
கால்விழுந்து வணங்குகின்றேன் உனையே போற்றி
கேளிசெய்யும் மனிதர்கள் வெல்வாய் போற்றி
கேசவனே மாயவனே துதிப்பேன் போற்றி 67
கொலையானைக் கொம்பொடித்த திறமே போற்றி
கோவர்த்த னகிரிபோற்றி துதித்தாய் போற்றி
உலகுண்டு உமிழ்ந்தபரம் பொருளே போற்றி
உனைவணங்கும் பக்தர்கள் காப்பாய் போற்றி
தலைமூக்கு அரிந்தவனே தலைவா போற்றி
திருமாலின் பெயர்வைத்து அழைப்பேன் போற்றி
இலங்கையிலே அம்புமழை பொழிந்தாய் போற்றி
இந்திரனின் செருக்கறுக்கச் செய்தாய் போற்றி 68
துன்பங்கள் வரும்போது கலங்கேன் போற்றி
துணையாக நீயிருந்து காப்பாய் போற்றி
என்உள்ளம் முழுவதுமே நீயே போற்றி
எப்போதும் உன்நாமம் சொல்வேன் போற்றி
என்அழைப்பை ஏற்றுஉடன் இருப்பாய் போற்றி
எளிமையாக இருப்பவர்க்கே அருள்வாய் போற்றி
என்செயல்கள் யாவுமாகி நின்றாய் போற்றி
உனையன்றி பிறர்தொழவே மாட்டேன் போற்றி 69
காய்கனிகள் உண்டுதவம் செய்யேன் போற்றி
கனிவோடு உனைவணங்கி இருப்பேன் போற்றி
நோய்நொடிகள் வாராமல் தடுப்பாய் போற்றி
நல்வாழ்வு அளித்தென்னை காப்பாய் போற்றி
நேயமுடன் உனைவணங்கும் பக்தன் போற்றி
நிம்மதியாய் வாழ்ந்திடவே செய்வாய் போற்றி
தாயாக உடனிருக்கும் துணையே போற்றி
தண்ணீராய் பயிர்வளர்க்கும் கருணை போற்றி 70
சங்குருவில் உனைக்கண்டு துதிப்பேன் போற்றி
சிசுபாலன் செருக்கறுத்து வென்றாய் போற்றி
சங்கிருக்கும் இடத்தினிலே இருப்பாய் போற்றி
சாரங்கம் வில்கரத்தில் கொண்டாய் போற்றி
சிங்கமுக நாதனாக அருள்வாய் போற்றி
சக்கரமாய் நீயிருந்து அருள்வாய் போற்றி
பங்குதாரா பகைஎதிராய் நின்றாய் போற்றி
தந்திரங்கள் செய்வதிலே வல்லாய் போற்றி 71
யுத்தத்தில் முழங்குகின்ற சங்கே போற்றி
எமதூதர் விரட்டிஎனைக் காப்பாய் போற்றி
சத்யபாமா மணவாளன் நீயே போற்றி
சிந்தையினைத் தெளிவுபெறச் செய்வாய் போற்றி
அத்தைமக்கள் வெற்றிபெற உழைத்தாய் போற்றி
அடியார்கள் காக்கின்ற அரியே போற்றி
பத்துவிரல் ஆயுதமாய்க் கொண்டாய் போற்றி
பதமலரில் இடம்கொஞ்சம் தருவாய் போற்றி 72
மீன்ஆமை ஏனமரி உருவே போற்றி
குறளாகி மூன்றுராமன் ஆனாய் போற்றி
கோன்கிருஷ்ணா கல்கியாகி வருவாய் போற்றி
கோட்டியூரில் வாழுமிறை கிருஷ்ணா போற்றி
மான்துள்ளி ஓடும்வேங் கடமே போற்றி
மாடுகளை மேய்கின்ற மாலே போற்றி
தேன்நிறைந்த மாலிருஞ்சோ லையானே போற்றி
தேவையற்ற புறச்செய்தி தவிர்ப்பாய் போற்றி 73
திருமாலின் இடக்கரத்து சங்கே போற்றி
விநாயகனின் வாய்சென்று வந்தாய் போற்றி
திருமாலின் வலக்கரத்து சக்ரா போற்றி
நரசிங்கன் விரல்நகமாய் ஆனாய் போற்றி
குருவாகி கீதையினை மொழிந்தாய் போற்றி
பார்த்தனுக்குப் பக்கபலம் நின்றாய் போற்றி
பரிசுந்த மானமனம் தருவாய் போற்றி
பாயாசம் தினம்விரும்பி உண்பாய் போற்றி 74
கடல்வண்ணம் ஆனவனே கவியே போற்றி
கருமாரி தாய்மாரி பிறந்தாய் போற்றி
கடல்நடுவே நகர்புகுந்து மீட்டாய் போற்றி
கவலைகொள்ளும் மனம்தேற்றி வைப்பாய் போற்றி
உடல்உறுப்பு மனம்புத்தி காப்பாய் போற்றி
உடன்பிறந்த பாவம்தீ ரவைப்பாய் போற்றி
உடல்சோர வரும்நோயைத் தவிர்ப்பாய் போற்றி
உறைகின்ற இடம்தேடி வருவேன் போற்றி 75
நான்மறந்து இருந்தபோதும் காப்பாய் போற்றி
நாநயமாய் வாழ்வதற்கு அருள்வாய் போற்றி
நான்முகனைப் படைத்தவனே நாதா போற்றி
நன்மைஎது தீமைஎது சொல்வாய் போற்றி
நான்நினையா பொழுதுமுட னிருப்பாய் போற்றி
நம்பிக்கை மருஉருவே நீதான் போற்றி
வானளவு உயர்ந்தவனே வண்ணா போற்றி
வண்டுலவும் சோலையிலே இருப்பாய் போற்றி 76
நூற்றுவரை வெல்லதுணை நின்றாய் போற்றி
நந்தகோபன் குமரனாகி அருள்வாய் போற்றி
பாற்கடலுள் தோன்றியநற் சங்கே போற்றி
பாஞ்சாலி குழல்முடிக்க வைத்தாய் போற்றி
ஆறுமக வழித்தவனை வென்றாய் போற்றி
அறிவுமங்கி இருந்தபோதும் காப்பாய் போற்றி
சோறுண்ணா வெண்ணையுண்ட கிருஷ்ணா போற்றி
சிறப்பாக எனையாளும் அரசே போற்றி 77
மனமென்னும் தேரேரி வருவாய் போற்றி
மெல்லிடையால் உடன்காடு நடந்தாய் போற்றி
மனச்சுவரில் எழுதிவைத்தேன் உனையே போற்றி
மண்ணளந்த மணிவண்ணா துதித்தேன் போற்றி
மனமுருகி வேண்டுகின்றேன் காப்பாய் போற்றி
மல்லரினம் வென்றெடுத்த மாலே போற்றி
மனம்மொழிகள் நீயாகி இருந்தாய் போற்றி
மண்ணுலகம் முழுதாளும் மன்னா போற்றி 78
ஆண்சிங்கம் போன்றவனே அரியே போற்றி
ஐம்பூத வடிவான ஐயா போற்றி
வீணான மனச்சுமையைத் தவிர்ப்பாய் போற்றி
வஞ்சனைகள் சூழாதிருக்கச் செய்வாய் போற்றி
சாணூரன் வென்றெடுத்த தோளே போற்றி
சரமழைபோல் அம்பெய்தி வென்றாய் போற்றி
ஊண்வழங்கும் மலைவாழும் இறையே போற்றி
விழிஉண்ணும் திருவுருவாய் இருந்தாய் போற்றி 79
பலம்கொண்ட பரம்பொருளே பரமா போற்றி
பகாசூரன் வாய்பிளந்த வீரா போற்றி
குலதெய்வ மோடுஎன்னைக் காப்பாய் போற்றி
கும்பகர்ணன் தோள்வென்ற கனிவே போற்றி
சிலைமேலே எழிலுருவாய் நின்றாய் போற்றி
ஜெயத்திரதன் தலைகொய்ய வைத்தாய் போற்றி
சிலைகையில் வைத்தவனே ராமா போற்றி
சீதையோடு உடனிருந்து அருள்வாய் போற்றி 80
வெயிலுக்கு ஏற்றநிழல் நீயே போற்றி
விட்ணுசித்தர் தவப்புதல்வி மணந்தாய் போற்றி
விரைந்துவந்து உன்னருளைத் தருவாய் போற்றி
கடல்பிறந்த வெண்சங்கை ஏற்றாய் போற்றி
குதிரைமுக கேசிகனை வென்றாய் போற்றி
உடல்முழுதும் நீலநிறம் கொண்டாய் போற்றி
உன்பெருமை பாடுகின்றேன் அருள்வாய் போற்றி 81
முன்வலக்கை தாமரையைக் கொன்டாய் போற்றி
முனிவின்றி புன்னகைக்கும் உறவே போற்றி
முன்இடக்கை கௌமொதகி ஏற்றாய் போற்றி
மனம்முழுதும் நீயாகி இருந்தாய் போற்றி
பின்வலக்கை சுதர்சனமும் உடையாய் போற்றி
பிறவிநோயைத் தீர்த்திடுவாய் புனிதா போற்றி
பின்இடக்கை பஞ்சசன்யம் வைத்தாய் போற்றி
பக்தர்கள் அமுதமாகி இனித்தாய் போற்றி 82
சௌமியநா ராயணனைப் பணிவேன் போற்றி
சயனநிலை கொண்டஇறை நீயே போற்றி
கௌமோத கிஆயுதமாய் ஏற்றாய் போற்றி
குழலூதி மாடுமேய்த்து வளர்ந்தாய் போற்றி
தாமரையின் நாயகனே தலைவா போற்றி
துவாரகாவில் உறைபவனே துணைவா போற்றி
பூமகளின் உளர்கவர்ந்த புனிதா போற்றி
பஞ்சமுக நாகத்தில் அமர்ந்தாய் போற்றி 83
வேதத்தின் பொருளான வரதா போற்றி
ஓமென்னும் மந்திரத்தின் பொருளே போற்றி
நாதனேஉன் அருள்மழையைத் தருவாய் போற்றி
நினைத்தவுடன் வந்துநிற்கும் நினைவே போற்றி
கோதையவள் நெஞ்சுறையும் கோவே போற்றி
கருணையோடு காத்தருளும் கதிரே போற்றி
சீதையவள் உடனிருக்கும் துணையே போற்றி
சிற்றுருவை பேருருவாய் வளர்த்தாய் போற்றி 84
காக்கணம்பூ காயாம்பூ நிறமே போற்றி
கல்விசெல்வம் தந்தருளும் வரமே போற்றி
காவேரி நீர்சூழும் இடத்தோய் போற்றி
விமலனாகி அருள்வழங்கும் விந்தை போற்றி
வாடாத துளசிமாலை அணிந்தாய் போற்றி
பலராமன் தம்பியான கிருஷ்ணா போற்றி
பச்சைநிறம் கொண்டவாசு தேவா போற்றி 85
பரபிரம்மம் ஆனவனே பரமா போற்றி
படமெடுத்தா டும்நாகம் கொண்டாய் போற்றி
பரமாத்மா வாகிஎங்கும் இருப்பாய் போற்றி
பஞ்சசனன் உடல்வளர்ந்த சங்கே போற்றி
பரம்பரைகள் செழித்தோங்கச் செய்வாய் போற்றி
பருகும்நீ ராகிநின்று சுவைப்பாய் போற்றி
இருமாப்புக் கொண்டோரை வென்றாய் போற்றி
இரட்டணையில் உறைகின்ற வரதா போற்றி 86
மாலைசூடி தந்தவளை மணந்தாய் போற்றி
மகப்பேறு வரமருளும் மாலே போற்றி
ஆலிலையில் குழந்தையாகி இருந்தாய் போற்றி
ஆழ்வாரின் மருமகனே அரங்கா போற்றி
வேலைவாய்ப்பு தந்தருளும் வேதா போற்றி
வாயமுதம் குழல்பருக இசைத்தாய் போற்றி
கால்நோக நடந்துகாடு சென்றாய் போற்றி
கூத்தாடி ஆழியினைப் பெற்றாய் போற்றி 87
திசைபத்தும் ஆளுகின்ற திறமே போற்றி
துளசிமாடம் கிடந்தவளை மணந்தாய் போற்றி
வசுதேவர் தலைசுமக்கக் கடந்தாய் போற்றி
விபீஷணனின் உளம்கவர்ந்த வீரா போற்றி
தசரதனின் ஆருயிரே அரசே போற்றி
தேர்த்தட்டில் கீதைவைத்த திருவே போற்றி
வசந்தத்தின் உறைவிடமே வருவாய் போற்றி
வைதேகி நினைப்பாக இருந்தாய் போற்றி 88
மனவலிமை கொடுக்கின்ற மருந்தே போற்றி
மதுகைடபன் சுவடிமீட்ட அயக்ரீ போற்றி
மனுகுலத்தில் பிறந்தவனே மணியே போற்றி
மயிலிறகை தலைசூடி இருப்பாய் போற்றி
அனுமனின் நெஞ்சுறையும் ராமா போற்றி
ஆறுகடல் கடந்துசென்று மீட்டாய் போற்றி
அனுசுயாவின் குழந்தையாகி இருந்தாய் போற்றி
ஆற்றலுடை சிவதனுசு முறித்தாய் போற்றி 89
பரதனுக்குப் பாதுகையை அளித்தாய் போற்றி
பாதுகையை அரசாள வைத்தாய் போற்றி
சரஸ்வதியின் குருவான அயக்ரீ போற்றி
சடாயுமோட்சம் தந்தவனே சகனே போற்றி
திரிமூர்த்தி யானதத்தாத் ரேயா போற்றி
தனிமையிலே இருந்துதுணை நினைத்தாய் போற்றி
மருத்துவக டவுளான வந்ரி போற்றி
மாமழையைத் தடுத்துகுலம் காத்தாய் போற்றி 90
மாலைசூடி தந்தவளை மணந்தாய் போற்றி
மகப்பேறு வரமருளும் மாலே போற்றி
ஆலிலையில் குழந்தையாகி இருந்தாய் போற்றி
ஆழ்வாரின் மருமகனே அரங்கா போற்றி
வேலைவாய்ப்பு தந்தருளும் வேதா போற்றி
வாயமுதம் குழல்பருக இசைத்தாய் போற்றி
கால்நோக நடந்துகாடு சென்றாய் போற்றி
கூத்தாடி ஆழியினைப் பெற்றாய் போற்றி 87
திசைபத்தும் ஆளுகின்ற திறமே போற்றி
துளசிமாடம் கிடந்தவளை மணந்தாய் போற்றி
வசுதேவர் தலைசுமக்கக் கடந்தாய் போற்றி
விபீஷணனின் உளம்கவர்ந்த வீரா போற்றி
தசரதனின் ஆருயிரே அரசே போற்றி
தேர்த்தட்டில் கீதைவைத்த திருவே போற்றி
வசந்தத்தின் உறைவிடமே வருவாய் போற்றி
வைதேகி நினைப்பாக இருந்தாய் போற்றி 88
மனவலிமை கொடுக்கின்ற மருந்தே போற்றி
மதுகைடபன் சுவடிமீட்ட அயக்ரீ போற்றி
மனுகுலத்தில் பிறந்தவனே மணியே போற்றி
மயிலிறகை தலைசூடி இருப்பாய் போற்றி
அனுமனின் நெஞ்சுறையும் ராமா போற்றி
ஆறுகடல் கடந்துசென்று மீட்டாய் போற்றி
அனுசுயாவின் குழந்தையாகி இருந்தாய் போற்றி
ஆற்றலுடை சிவதனுசு முறித்தாய் போற்றி 89
பரதனுக்குப் பாதுகையை அளித்தாய் போற்றி
பாதுகையை அரசாள வைத்தாய் போற்றி
சரஸ்வதியின் குருவான அயக்ரீ போற்றி
சடாயுமோட்சம் தந்தவனே சகனே போற்றி
திரிமூர்த்தி யானதத்தாத் ரேயா போற்றி
தனிமையிலே இருந்துதுணை நினைத்தாய் போற்றி
மருத்துவக டவுளான வந்ரி போற்றி
மாமழையைத் தடுத்துகுலம் காத்தாய் போற்றி 90
சத்யவதி மகனான வியாசா போற்றி
விபீஷணனின் துயர்தீர்த்த அரங்கா போற்றி
வள்ளலான மகாபலியை வென்றாய் போற்றி
கபிலராக அவதரித்த துறவே போற்றி
கலியுகத்தில் பச்சைநிறம் கொண்டாய் போற்றி
அபயகரம் நீட்டுகின்ற அரியே போற்றி
அனுசுயாஅத் திரிமுனிவர் மகவே போற்றி 91
நரநாரா யணராக வந்தாய் போற்றி
நெய்வெண்ணை களவாடி உண்ணாய் போற்றி
குரவையாடி வென்றவனே கூத்தா போற்றி
குணம்கொண்டோர் உளம்நிறையும் கோவே போற்றி
கருநெய்தல் பூநிறத்து வடிவே போற்றி
கண்மலரை அர்ச்சனைசெய் தகண்ணா போற்றி
கரன்கபந்தன் முக்திதந்த மாயா போற்றி
கனிவோடு வணங்குவோர்க்கு அருள்வாய் போற்றி 92
கர்ணனவன் கவசத்தை அறுத்தாய் போற்றி
கோபியரை வம்பிழுக்கும் குரும்பே போற்றி
சரசுவதி மைந்தன்நா ரதனே போற்றி
சுக்ரீவன் நாடுதந்த சுடரே போற்றி
கிருதயுக வெள்ளைநிறம் வடிவே போற்றி
கிழங்ககழும் வள்ளிதந்தை ஆனாய் போற்றி
திரேதாயு கம்கருவெண் நிறமே போற்றி
துவாபரயு கநீலநிற வடிவே போற்றி 93
சிற்றன்னை கைகேயிதவப் புதல்வா போற்றி
சீதேவி பூதேவி மணவாளா போற்றி
கற்பாலம் கட்டிகடல் கடந்தாய் போற்றி
களைபோல பகைக்கூட்டம் களைந்தாய் போற்றி
வெறுந்தூணில் உருமாறி வந்தாய் போற்றி
வானரங்கள் துணைக்கொண்டு கடந்தாய் போற்றி
பெற்றவர்சொல் மாறாத மகனே போற்றி
பஞ்சாயு தம்தரித்த வடிவே போற்றி 94
கர்ணனிடம் தர்மதானம் பெற்றாய் போற்றி
கைநெல்கொடுத்து கூடைபொன்னாக் கியவா போற்றி
சொர்க்கவாசல் திறந்தென்னை அழைப்பாய் போற்றி
சனகாதி முனிவர்கள் வடிவே போற்றி
வரம்கொடுத்து வாஞ்சையோடு அருள்வாய் போற்றி
விதுரர்தம் வில்லொடிக்கச் செய்தாய் போற்றி
வரம்பெற்றோர் முடிச்சவிழ்த்து வென்றாய் போற்றி
உக்ரசேனர் நாடாளச் செய்தாய் போற்றி 95
எங்கும்நி றைந்திருக்கும் விட்ணு போற்றி
ஏழுமலை மீதிருக்கும் இறைவா போற்றி
ரங்கமன்ன ராயிருந்து அருள்வாய் போற்றி
ரகுகுலம் தழைக்கவந்த ராமா போற்றி
பங்காளி பகைமுடித்த பாங்கே போற்றி
பனைமரமாய் வானுயர்ந்த உருவே போற்றி
தங்குதடை இல்லாமல் காப்பாய் போற்றி
தெய்வயானை பிள்ளையாகப் பெற்றாய் போற்றி 96
காளிங்க மடுஆடி களித்தாய் போற்றி
குந்திவரம் கேட்கவைத்த திறமே போற்றி
மாளிகையில் மரக்காட்டில் நடந்தாய் போற்றி
மலைமகளின் சோதரனே திருவே போற்றி
நாளைபரி ஏறிவரும் கல்கி போற்றி
நாமகளின் பிள்ளையாகி வந்தாய் போற்றி
காளைவென்று நப்பின்னை மணந்தாய் போற்றி
கதிர்வடிவாய் பூமிவலம் வந்தாய் போற்றி 97
வெறுங்கையுடன் பாரதப்போர் வென்றாய் போற்றி
அமிழ்தகுடம் சுமந்துவந்த இறைவா போற்றி
குறைவின்றி அருள்வழங்கும் இறையே போற்றி
குந்திகர்ணன் உறவுமுறை சொன்னாய் போற்றி
சிறப்புமிகு வாழ்வளித்து காப்பாய் போற்றி
சூரசேனர் வழிவந்த கிருட்ணா போற்றி
கறுப்புநிற வடிவழகே முகுந்தா போற்றி
காடுகளில் நடந்துலவி மகிழ்ந்தாய் போற்றி 98
பாதியாற்றல் கவர்வாலி வென்றாய் போற்றி
பூமிதேடி வளம்பெற்ற பிருது போற்றி
கோதண்டம் கரம்கொண்ட கோவே போற்றி
கோகுலத்து வாசிகளின் உறவே போற்றி
ராதையவள் மணம்கவர்ந்த ராமா போற்றி
லவகுசனின் தந்தையான அரசே போற்றி
சேதிசொல்ல தூதுசென்ற தூதா போற்றி
சேனையோடு வந்தவரை வென்றாய் போற்றி 99
வெண்பரிமேல் ஏறிவரும் கல்கி போற்றி
வைணவியாய் உருமாறி வந்தாய் போற்றி
வெண்பரிதி யாகவந்து ஒளிர்வாய் போற்றி
ஆழ்வார்கள் பாசுரத்தின் பொருளே போற்றி
வெண்மேகம் போன்றபல ராமா போற்றி
ஆலயங்கள் குடிகொண்ட அமிழ்தே போற்றி
துணைதேட மாருதியை விளித்தாய் போற்றி
தங்தங்கள் ஒடித்துபீடம் வென்றாய் போற்றி 100
நிகரில்லாத் தலைவனாகி சிறந்தாய் போற்
நீர்த்தாரை வார்க்கமண்விண் அளந்தாய் போற்றி
பகைக்கூட்டம் கதிகலங்கச் செய்தாய் போற்றி
பொறுமைமகள் தேடிஎங்கும் அலைந்தாய் போற்றி
அகப்பொருளாய் நீயிருந்து அருள்வாய் போற்றி
ஐயப்பன் தாயான அழகே போற்றி
முக்காலம் அறிந்தவனே மூலா போற்றி
முன்சென்ம பாவம்நீக் கிகாப்பாய் போற்றி 101
பிரம்மாதி தேவர்கள் துதிப்போய் போற்றி
பாவநோய் போக்கிகாக்கும் மருந்தே போற்றி
அருவாகி உருவாகி உள்ளாய் போற்றி
ஆறுகள்சூழ் இரட்டணையில் உறைவோய் போற்றி
பரிபூர ணஞானசோதி வடிவே போற்றி
பகையழித்து அறம்மீட்ட பரமா போற்றி
சரணடையா மாந்தர்க்கும் அருள்வாய் போற்றி
சபரிமோட்சம் தந்தவனே சயனா போற்றி 102
அசோகவனம் அடைந்தாளை மீட்டாய் போற்றி
யாதுமாகி நின்றவனே யதுவே போற்றி
விசுவாமித் திரர்யாகம் காத்தாய் போற்றி
உள்ளத்து அசுத்தங்கள் களைவாய் போற்றி
வசுதேவர் தேவகியின் மைந்தா போற்றி
மூலிகைகள் கைக்கொண்டு வந்தாய் போற்றி
மச்சமாகி நீர்நீந்தி இருந்தாய் போற்றி
மந்தபுத்தி நீக்கிஞானம் காப்பாய் போற்றி 103
கன்னிமாட சீதையிடம் தொலைந்தாய் போற்றி
கருணைவடி வானவனே கண்ணா போற்றி
அனுமனுக்குக் கீதையினை மொழிந்தாய் போற்றி
அவதாரம் பலகொண்ட நாதா போற்றி
என்துன்பம் நீங்கபாடி வந்தேன் போற்றி
என்குலம் காக்கின்ற இறையே போற்றி
மன்புகழைக் கொண்டவனே மாலே போற்றி
மதிசூடி உயிர்காத்த மதியே போற்றி 104
ஆயர்கள் குலக்கொழுந்தே கண்ணா போற்றி
விண்பூமி பாதாளம் ஆள்வாய் போற்றி
நாயகனின் நாயகனாய் ஆனாய் போற்றி
தோசங்கள் நீக்கிஎனைக் காப்பாய் போற்றி
தாயுருவில் வந்தவளை வென்றாய் போற்றி
தந்தைபாசம் கொண்டவனே தனையா போற்றி
தாய்தந்தை போல்வந்து காப்பாய் போற்றி
தேவாதி தேவர்கள் அரணே போற்றி 105
மூன்றன்னை நேசிக்கும் புதல்வா போற்றி
மனம்தளரா வனம்சென்ற மைந்தா போற்றி
நான்எனது ஆணவங்கள் அழிப்பாய் போற்றி
நல்லநிலை அடைவதற்கு அருள்வாய் போற்றி
நான்விரும்பி ஏற்றஇறை நீயே போற்றி
நலம்மிகுந்த மனதோடு துதிப்பேன் போற்றி
மான்தேடி துணைதொலைத்து நின்றாய் போற்றி
மாண்புடைய வாழ்வமையச் செய்வாய் போற்றி 106
தரணிகாக்க அவதரித்த திருவே போற்றி
தாமாக முன்வந்து அருள்வாய் போற்றி
திருமேனி அழகுகண்டு மகிழ்வேன்போற்றி
தெகிட்டாத தேன்பலா போன்றோய் போற்றி
அருளோடு பொருள்வழங்கும் அரியே போற்றி
அன்னஉரு கொண்டோனின் தந்தை போற்றி
பெருமைவரச் செய்கின்ற புனிதா போற்றி
பெண்ணாகி ஆணாகி பிறந்தாய் போற்றி 107
மிதிலைநகர் வில்லெடுத்த வீரா போற்றி
மண்ணளக்க வளர்ந்தவனே மாறா போற்றி
பதினான்கு ஆண்டுகாடு வாழ்ந்தாய் போற்றி
பதிதேடி இலங்கைநகர் சென்றாய் போற்றி
பத்துதலை செருக்கறுத்த பரமே போற்றி
பாதாதி கேசமுனைப் புகழ்வேன் போற்றி
சித்துருவம் கொண்டவரை வென்றாய் போற்றி
சிறைக்காவல் யமுனைஆறு கடந்தாய் போற்றி 108
ஆர்வத்தை உண்டாக்கும் அனந்தா போற்றி
அன்னைஅன்பு கொண்டவனே அழகா போற்றி
நீர்நிலைகள் நிறைந்திருக்கச் செய்வாய் போற்றி
நீயின்றி வேரில்லை காப்பாய் போற்றி
நீரூற்று போலஞானம் தருவாய் போற்றி
நினைத்ததைநான் செய்வதற்கு அருள்வாய் போற்றி
நேருக்கு நேர்நின்று வெல்வாய் போற்றி
நாசுவைக்க மண்ணெடுத்து உண்டாய் போற்றி 109
ஆனந்த கூத்தாடு அன்பா போற்றி
அன்புவடி வானவனே அரங்கா போற்றி
ஏனமின்றி தானமேற்ற எளியோய் போற்றி
எங்களது நிலையுணர்ந்த எந்தாய் போற்றி
தேனமுதத் திருநாமம் துதிப்பேன் போற்றி
தாய்தந்தை குருவாகிக் காப்பாய் போற்றி
மீனொத்த கண்ணுடையாள் கணவா போற்றி
பயிர்விளையும் பூமியினைக் காப்பாய் போற்றி 110
உலகமெங்கும் மழைபொழிய வைப்பாய் போற்றி
உடல்வலிமை தந்தென்னைக் காப்பாய் போற்றி
தலைமீது கைவைத்து காத்தாய் போற்றி
திருநாமம் தினம்சொல்வேன் அபயம் போற்றி
இலையடங்கும் சிறுஉருவே இறைவா போற்றி
ஏர்க்கலப்பைத் தோள்கொண்ட ராமா போற்றி
கலைபலவும் கற்றுணரச் செய்வாய் போற்றி
பஞ்சமில்லா பெருவாழ்வு அளிப்பாய் போற்றி 111
நீர்நீந்தும் அவதாரம் சுறவம் போற்றி
ஊர்ந்துவரும் அவதாரம் ஆமை போற்றி
பாருலவும் அவதாரம் வராகா போற்றி
மிருகமனி தஅவதாரம் சிங்கா போற்றி
நேர்நின்ற அவதாரம் வாமனா போற்றி
பயிர்செய்யும் அவதாரம் பரசு போற்றி
சேர்ந்துவாழும் அவதாரம் ராமா போற்றி
உரிமைமீட்கும் பலராம கிருட்ணா போற்றி 112