இரவு நேர மின்மினி
விரைந்து நம்மை ஈர்த்திடும்
மையை பூசும் இருவிழி
சிரமம் இன்றி பார்வையை
ஈர்க்கும் இரண்டு புவிவிசை
விரும்பி சென்றோர் மூழ்குவர்
விரும்பார் பார்வை மாற்றுவர்
பரிதி சுற்றும் பூமியாய்
பரிதி சுற்றும் பூமியாய்
பார்வை சுற்றி வருதுபார்
பரிதி போல சுற்றிடும்
பார்வை வலையில் சிக்குவோர்
விரைந்து சுழலும் நீரலை
சூழல் உள்ள தூசியாய்
திரிந்து அதிலே மூழ்குவர்
தெரிந்தோர் அதனின் நீங்குவர்