மானிடர்கள் பூவுலகில் பிறந்துவந்து - என்றும்
மதிவளரும் பான்மையிலே வாழ்ந்திடணும்
பிணிகளிலாப் பெருவாழ்வு பெற்றிடணும் – பெரியோர்கள்
பேசியநல் பாதைகளிலே சென்றிடணும்
தனித்தமிழை எல்லோரும் கற்பதோடு – அதனைத்
தரணியிலே தழைத்திடவே செய்திடணும்
தேனீக்கள் போலநாமும் ஒன்றுசேர்ந்து – நல்ல
திருநாடாய் இவ்வுலகை மாற்றிடணும்
சமத்துமச முதாயமென மாற்றிடவே – நாம்
சாதிமதப் பூசல்களை மாற்றிடணும்
பூமியிலே பொல்லாத மாந்தரையும் – நல்ல
புனிதமிகு மனிதராக மாற்றிடணும்
அமிழ்தமென கிடைத்ததிந்தப் பிறவியிலே – அந்த
ஆண்டவனின் அருளைநாம் பெற்றிடணும்
சாமியெனப் பொய்வேடம் போடுகின்ற – அந்த
சண்டாளர் கூட்டத்தை அழித்திடணும்.
ஏழைகளே இல்லாமல் செய்துவிட்டு – நல்ல
ஏற்றமிகு நாடாக ஆக்கிடணும்
கோழைகளாய்த் திரிகின்ற மானுடரை – நல்ல
கொள்கையுள்ள மாந்தர்களாய் மாற்றிடணும்
மழையில்லா மாநிலத்தை மாற்றிடணும் – நல்ல
மாற்றங்கள் பூவுலகம் கண்டிடணும்
கூழுக்கு பஞ்சமெனும் நிலைமாற்றி – எங்கும்
குவலயத்தில் வளம்நிலவச் செய்திடணும்
இளம்வயதில் குழந்தைகளைக் கசக்கிடாமல் – அவர்கள்
இன்பத்துடன் கற்றிடவே செய்திடணும்
மலைபோல குடும்பசுமை ஏற்றிடமால் – நல்ல
மணம்வீசும் கல்விப்பயில் வளர்த்திடணும்
காலத்தோடு கல்விதனைக் கற்றிடணும் – இங்கு
கல்லாமை இல்லையெனச் செய்திடணும்
வேலவனின் அருளாலே இவைகளெல்லாம் – நல்ல
வெள்ளிதரும் மாற்றமாக ஆக்கிடணும்.
மதிவளரும் பான்மையிலே வாழ்ந்திடணும்
பிணிகளிலாப் பெருவாழ்வு பெற்றிடணும் – பெரியோர்கள்
பேசியநல் பாதைகளிலே சென்றிடணும்
தனித்தமிழை எல்லோரும் கற்பதோடு – அதனைத்
தரணியிலே தழைத்திடவே செய்திடணும்
தேனீக்கள் போலநாமும் ஒன்றுசேர்ந்து – நல்ல
திருநாடாய் இவ்வுலகை மாற்றிடணும்
சமத்துமச முதாயமென மாற்றிடவே – நாம்
சாதிமதப் பூசல்களை மாற்றிடணும்
பூமியிலே பொல்லாத மாந்தரையும் – நல்ல
புனிதமிகு மனிதராக மாற்றிடணும்
அமிழ்தமென கிடைத்ததிந்தப் பிறவியிலே – அந்த
ஆண்டவனின் அருளைநாம் பெற்றிடணும்
சாமியெனப் பொய்வேடம் போடுகின்ற – அந்த
சண்டாளர் கூட்டத்தை அழித்திடணும்.
ஏழைகளே இல்லாமல் செய்துவிட்டு – நல்ல
ஏற்றமிகு நாடாக ஆக்கிடணும்
கோழைகளாய்த் திரிகின்ற மானுடரை – நல்ல
கொள்கையுள்ள மாந்தர்களாய் மாற்றிடணும்
மழையில்லா மாநிலத்தை மாற்றிடணும் – நல்ல
மாற்றங்கள் பூவுலகம் கண்டிடணும்
கூழுக்கு பஞ்சமெனும் நிலைமாற்றி – எங்கும்
குவலயத்தில் வளம்நிலவச் செய்திடணும்
இளம்வயதில் குழந்தைகளைக் கசக்கிடாமல் – அவர்கள்
இன்பத்துடன் கற்றிடவே செய்திடணும்
மலைபோல குடும்பசுமை ஏற்றிடமால் – நல்ல
மணம்வீசும் கல்விப்பயில் வளர்த்திடணும்
காலத்தோடு கல்விதனைக் கற்றிடணும் – இங்கு
கல்லாமை இல்லையெனச் செய்திடணும்
வேலவனின் அருளாலே இவைகளெல்லாம் – நல்ல
வெள்ளிதரும் மாற்றமாக ஆக்கிடணும்.