Monday, October 14, 2019

கண்ணன் என் காதலன்

கண்ணிலு ருவம்கண்டேன் – அந்த

கள்ளனு ருவங்கண்டேன்

என்னையே நானிலந்தேன் – என்னுள்

ஏக்கம் குடிகொண்டதே.



உண்ண முடியவில்லை – எனக்கு

உறக்கம் வரவுமில்லை

கண்ணில் தெரிகின்ற – அந்த

கோலத்தைக் காணவில்லை.



பஞ்சனைப் படுக்கையும் – என்னை

பற்றி எரித்ததடீ

சஞ்சல மில்லாத – மனதில்

சாந்தி துளைந்ததடீ



வஞ்சகம் செய்தவனை – என்னை

வஞ்சித்துப் போனவனை

கொஞ்சம் பொழுதேனும் – கண்டால்

குறையும் நெஞ்சுவலி.



தன்னந் தணியாக – என்னை

தவிக்க விட்டவனை

என்னநான் சொல்வேனோ – அவனை

என்னுநான் காண்பேனோ.



கண்டு களித்திடவே – கண்களும்

காத்து கிடக்குதடி

தூண்டில் மீனினைப்போல் – மனது

மாட்டித் தவிக்குதடி.



என்று வருவானோ – என்று

ஏங்கி இருக்கையிலே

கன்றினை நாடிவரும் – அந்த

காலத் துப்பசுவைபோல்



கண்ணனும் வந்தாண்டி – எனக்குள்

களிப்பைத் தந்தாண்டி

என்னையே நான்மறந்தேன் – இன்று

ஏக்கமும் தீர்ந்ததடீ



உச்சி குளிர்ந்ததடி – என்தன்

உள்ளமும் மகிழ்ந்ததடி

பச்சை நிறத்தவனை – எந்தன்

பார்வையில் பட்டவனை



கச்சியில் உறைபவனை – இன்று

கண்களில் கண்டதனால்

அச்சமும் வந்ததடி – எனக்குள்

அழகும் வந்ததடி,