வெள்ளையரை விரட்டிவிட்டு
குடிமக்கள் ஆட்சிகொண்டு
கொண்டாடி வருகின்றோம்
ஆண்டுதோறும் சுதந்திரத்தை
பெண்ணினங்கள் இன்றுவரை
சுதந்திரத்தைக் கண்டதில்லை
தீண்டாமைக் கொடுமைகளும்
நம்மைவிட்டு நீங்கவில்லை
வன்கொடுமை சட்டம்கண்டோம்
வலியின்னும் தீரவில்லை
ஏழைபணக் காரனென்ற
ஏற்றங்களும் மாறவில்லை
கல்வியிலும் வேலையிலும்
பணம்ஆட்சி செய்யுதடா
கொள்ளையர்கள் ஆட்சியிலே
கொடுமைபல நடக்குதடா
இதைப்போல பலதுன்பம்
தரணியெங்கும் நடக்கையிலே
சுதந்திர தினத்தைமட்டும்
கொண்டாடி மகிழ்வதேனோ?
Monday, November 8, 2021
Tags
# கவிதைகள்

About தமிழ்க்கடல்
rettanainarayanakavi.blogspot.com என்ற இவ்வலைதளம் இரட்டணை நாராயணகவி எனும் புனைப்பெயர் கொண்ட முனைவர் க அரிகிருஷ்ணனின் படைப்புகளைத் தாக்கிய தளமாகும்.
கவிதைகள்
Tags:
கவிதைகள்