Friday, November 5, 2021

என்பாட்டி தனபாக்கியம்

பத்துபுள்ள பெத்தவ எங்க பாட்டி

வறுமையைத் தவிர வேறெதும் கண்டதில்ல

கத்தரிக்கா கருவாடு போட்டு

குழம்பு வச்சி இறக்கையில...

வீட்டுக்குள்ள இருக்கும் எங்கல

தேடிவரச் செய்யும்....

ஒத்தபடி அரிசி போட்டு

சோறு பொங்கி இறக்கி வச்சி

பேரபுள்ள அத்தனைக்கும்

சோறு போட்டு தினம்தருவா...