Tuesday, September 20, 2022

உளநலமே உடல்நலம்

உளநலமும் உடல் நலமும் இருந்தால் போதும்
          உலகத்தில் வேறொன்றும் தேவையில்லை
உள்ளத்து எழுச்சிகளை உடலுள் ஏற்று
          உயிர்நோகும் துன்பங்கள் அடையச் செய்யும்
உள்ளத்து அச்சங்கள் நரம்பில் கொண்டு
          உடலும்தன் செயல்பாட்டை முகத்தில் காட்டு
உள்ளத்து உணர்வுகளைத் தூய்மை செய்து
          உடல்நோயை புறம்தள்ளி வாழ்வை வெல்வோம்