முன்னைய வினைகளை தீர்த்திடும் ஐங்கரன் பாதமும் பணிந்திடுவோம்
என்னைய றிந்திட உலகமும் புரிந்திட வைத்திடும் முன்னவனே
என்னுடன் வருகிற தீவினை யாவையும் விலக்கிநீ காத்திடுவாய்! 01
ஆதியில் வந்தவள் ஆற்றலின் மருஉரு தேவியை வணங்கிடுவோம்
சோதனைத் தீர்த்தவள் இல்லினை மகிழ்ச்சியைப் பெருகிடச் செய்திடுவாள்
ஓதிய பாடமும் இருந்திடும் செல்வமும் பொறுப்புடன் காப்பவளே
மாதவன் தங்கையே குமரனின் அன்னையே நற்கதி தந்திடம்மா! 02
இன்பமும் துன்பமும் தாங்கிடும் மனதினில் அருவமாய் இருப்பவனே