Monday, July 3, 2023

முத்தமிழ் அறிஞர் கலைஞர் (கலைஞரின் தமிழ்த் தொண்டு)

முத்தமிழ் அறிஞர் கலைஞர்

முத்தமிழ் அறிஞர் என்றால் உலகமுன் பேரைச் சொல்லும்
முத்துவேல் அஞ்சு கத்தின் அருந்தவப் புதல்வன் என்று
பித்துபி டித்த வனும்உன் பேச்சினைக் கேட்டால் போதும்
மொத்தமாய் மாறி நின்று சுயமறி யாதை கொள்வான்.

பாண்டியர் காத்துத் தந்த முத்தமிழ் உன்னால் இன்று
வேண்டிய திசைக்குச் சென்று தன்புகழ் பரப்பி நிற்கும்.
எண்ணமும் செயலும் உன்தன் சிந்தையில் உதித்த போது
வண்ணமாய் தமிழும் இங்கே விரிந்திட கண்டோம் நாங்கள்.

மேடையில் முழுக்க மிட்டு வார்த்தைவாள் வீசி நின்றாய்
ஓடையில் ஓடும் நீராய் திரையினில் வசனம் தந்தாய்
சாடையாய்ப் பகைவர் நோக்கி முருவலாய் பதிலும் தந்தாய்
கேடையம் உன்னைத் தேடி வந்திட சூழ்ச்சி செய்வாய்

மூன்றெழுத் தென்மூச் சென்று மேடையில் முழுக்க மிட்டாய்
தேன்கவி பலவும் தந்து கவிஞனாய் பவனி வந்தாய்
கோன்வளர் புகழை உன்தன் பூம்புகார் கதையில் சொன்னாய் 
வான்தொடும் வள்ளு வத்தை தரணியில் பரவச் செய்தாய்

நாடகத் துறையில் பாட்டும் வசனமும் எழுதித் தீர்த்தாய்
ஏடகம் நடத்தி சிந்தை பூத்ததை பதித்து வைத்தாய்
நாட்டினை பெரியார் சொன்ன பாதையில் அழைத்துச் சென்றாய்
ஏடகம் நடந்த பேனா நாட்டினை ஆளக் கண்டேன்

எழுத்திலே பேச்சில் உள்ள பிறமொழி சொற்கள் நீக்கி
விழுந்திடா மொழியைத் தாங்கி தரணியில் தவழச் செய்தோன்
விழித்தெழ மடமை நீக்கி புதுஒளி தந்த வள்ளல்
மொழியினை இனிது காத்து அவர்வழி நடந்து வெல்வேம்