அன்பு நிறைந்த சான்றோர் என் வணக்கம்
நடுவர் அவர்களே
பெருமை என்றால் என்ன?
பெருமை என்பதற்கு, , , மேன்மை
உயர்ந்த நிலை.
பெருமைப்படுத்துதல்,
சுயமரியாதை
திறமைகள்
மரியாதை
கியாதி,
கீர்த்தி
கௌரவம்,
புகழ்
அழகு
செல்வம்
பதவி
அபிமானம் என அகராதிகள் பகர்கின்றன.
இங்கு பெருமைப்படுத்துதல் என்பதை எடுத்துக் கொள்கிறேன்.
எந்த வகையில் பெருமைப்படுத்துதல்
பெண்ணின் குணங்கள்
அச்சம் என்பது வரவிருக்கும் அபாயம் குறித்து ஏற்படும் மன நடுக்கம் எனப் பொருள்படும். பய உணர்வு என்று கருதப்படும்.
மடம் மடம் இது மடமை எனவும் கூறப்படும். அறிந்தவொரு விடயத்தைக் கூட அறியாதவர் போல சபையில் எடுத்துக்கூறாதத் தன்மை என இது விளக்கப்படுகிறது.
நாணம் என்பது வெட்கப்படுவது எனப் பொருள் கொள்ளப்படும்.
பயிர்ப்பு தாய், தந்தை தவிர்த்து வேற்று நபர் உடல் பரிசம் பட்டதும் ஏற்படும் கூச்ச உணர்வு என இது விளக்கப்படுகிறது.
நம் முன்னோர்கள் பெண்களுக்கான குணமாகச் சொல்லி பெண்களை அடக்கி வைத்திருந்தனர். இதனைக் கண்ட பாரதி,
நாணும் அச்சமும் நாய்கட்டு வேண்டுமாம்! என பாரதியார்.
"முந்நீர் வழக்கம் மகடூஉ வோடில்லை" என்று தொல்காப்பியர் கூறியிருப்பார். ஆனால். ‘வாய்ற்படி தாண்டுதல் பெண்களுக் கில்லை” என்பதுதானே அன்றைய காலப் பெண்களின் நிலை. தொல்காப்பியர் கூற்றையும் பொய்யாக்கி, கல்விக்காக, வேலைக்காக, உரிமைக்காக, வீட்டைவிட்டு வெளியே வந்து வெற்றி காணும் நிலை இன்றைய பெண்கள் பெற்றிருக்கிறார்கள்.
நாணும் அச்சமும் நாய்கட்டு வேண்டுமாம்! என பாரதியார்.
கல்வியால் பெருமை
இன்று உள்ள பெண்கள் கல்வி கற்று நல்ல அறிவாளிகளாக, சுயசிந்தனை உள்ளவர்களாக, தானே முடிவெடுக்கும் திறன் கொண்டவர்களாக விளங்குகின்றனர்.
ஏட்டையும் பெண்கள் தொடுவது தீமை என்றும் ‘அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்கு’ என்றும் கூறிய அந்த காலத்திலிருந்து மீண்டு இன்று பெண்கள்,
பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும்
பாரினில் பெண்கள் நடத்த வந்தோம்
என்ற நிலைக்கு வந்துவிட்டனர். அதுமட்டுமல்ல,
எட்டும் அறிவினில் ஆணுக்கு இங்கே பெண்
இளைப்பில்லை காண்
என்று கூறும் அளவிற்கு வளர்ந்து விட்டதோடு மட்டுமல்லாமல் ஆண்களுக்கே ஆலோசனை கூறுபவர்களாகவும் அமைகின்றனர்.
முடிவெடுக்கும் திறனில் பெருமை
அன்று ஆண்களுக்குப் பின்னால் இருந்துகொண்டு ஆண்கள் சொல்வதற் கெல்லாம் தலையாட்டிய பெண்கள் இனம் இன்று,
எந்தக் கல்வியைக் கற்க வேண்டும்
எந்த ஆடையை அணிய வேண்டும்
யாரோடு பழகவேண்டும்
யாரைத் திருமணம் செய்துகொள்ளவேண்டும்
எனத் தீர்மாணித்து முடிவெடுக்கின்றனர்.
நல்லது கெட்டது என முடிவெடுக்கும் திறனை இன்றைய பெண்கள் பெற்றுருகின்றனர்.
குளு குளு பொய்கள் சொல்லி என்னை வெல்வாய்…
அது தெரிந்தும் கூட அன்பே…
மனம் அதையேதான் எதிர்பார்க்கும்…மின்னலே
அது தெரிந்தும் கூட அன்பே…
மனம் அதையேதான் எதிர்பார்க்கும்…மின்னலே
கருத்துச் சுதந்திரத்தில் பெருமை
பொட்டக் கோழி கூவி பொழுது விடியாது என்று பெண்களுக்குப் பேச்சுரிமை கொடுக்காமல், பெண்கள் ஊமையாகவே வைத்திருந்த அந்தக் காலத்தில் இருந்து மீண்டு இன்று.
தன் கருத்தை குடும்பத்தின் மத்தியில், சமுதாயத்தின் மத்தியிலும் தைரியமாகச் சொல்லும் ஆற்றலை இன்று பெற்றுள்ளனர்.
வெளியுலகத்தில் பெருமை
ஆடையில் பெருமை
அன்று இருந்த ஆடைக் கட்டுப்பாடு இன்று இல்லை. அன்று எந்த ஆடையயைப் போட்டுக்கொள்ளவேணடும். இப்படித்தான் நீ இருக்க வேண்டும் என்ற கட்டுப்பாடுகளைத் தாண்டி ஆடைச் சுதந்திரத்தையும் இன்றைய பெண்கள் வெற்றிருப்பது
வேலைவாய்ப்பில் பெருமை
உத்தியோகம் புருஷ லட்சண்ம் என்பது அந்தக் கால பழமொழி. இதனை இன்று மாற்றியமைத்தவர்கள் பெண்கள்.
இன்று அனைத்துத் துறை அலுவலகங்களிலும் 75 சதவீதத்திற்கு மேலாக ஆண்களுக்கு இணையாக பெண்கள் இருந்து பணியாற்றிவருகின்றனர்.
பெண்ணால் பெருமை - கருவி, கருத்தா, உடனிகழ்வு
பெண்ணுக்குப் பெருமை - கொடை, பகை, நட்பு, தகுதி, அதுவாதல், பொருட்டு, முறை
பெண்ணின் பெருமை - நீங்கல், ஒப்பு, எல்லை, ஏது
பெண்ணது பெருமை - உரிமை