Monday, August 21, 2023

திரையிசை வடிவம்

பல்லவி
பாட்டுப்பாடத் தெரியல
பாட்டெழுதத் தெரியல
தாளம்போட தெரியல
ஒன்னும் தெரியல


ஊருசுத்த தெரியல
ஊருவம்ப வாங்கல
ஊருக்குள்ள யாருக்குமே
என்ன தெரியல


சரணம் 1


பள்ளிக்கூடம் பேனேனே
பாடம்படிச்சி வந்தேனே
வாத்தியாரு சொன்னதெல்லாம்
கேட்டு நின்னேனே


நண்பரெல்லாம் வந்தாங்க
உடனிருக்க சொன்னாங்க
என்னபாத்து அவங்களுந்தான்
மாறிப் போனாங்க

சரணம் 2

அப்பாஅம்மா சொன்னத
அவசியமா கேப்பேங்க
பெரியவங்க வழியிலதான்
நடந்து போவேங்க


சின்னசின்ன புகழுல
என்மனசு மகிழுங்க
என்னைபுகழ் வந்தடைய
உழைச்சி நிப்பேங்க