வலப்புரமாய்ச் சுற்றிகின்ற நெருப்புப் பொட்டில்
பிரிந்துவந்த சிறுபிழம்பு சூடு ஆரிமலைமுகடாய் இருக்கையிலே எதிரொ லித்த
செந்தமிழைப் பேசுகின்ற நிலப்ப ரப்பில்
பலாப்பழங்கள் பழுத்துமனம் வீசு கின்ற
பண்ணுருட்டி மண்ணில்நற் சான்றோர் கூடி
கலைமூன்றை பரப்புகின்ற தொழிலைச் செய்து
பத்தாண்டை கடந்துநிற்கும் நீவீர் வாழீ.
இயற்றமிழும் இசைத்தமிழும் மேடை ஏற்றி
திறமையுள்ள மாந்தருக்கு விருது தந்தீர்
நயம்படைத்த கலைஞர்கள் கண்டெ டுத்து
நாடகமும் தெருக்கூத்தும் நடத்தி வைத்தீர்
வயல்வெளியில் நாத்துநடும் எளியோ ருக்கும்
வாய்ப்புதந்து மறைந்திருக்கும் திறமை கண்டீர்
இயலாத மாந்தருக்கு உதவி செய்து
வள்ளல்கள் பட்டியலில் இடம்பி டித்தீர்.
எறும்புகளாய் தேனீயாய் இருக்கும் கூட்டம்
தலைமையது சொல்கேட்டு வழிந டக்கும்
சிறுபொழுதும் ஓய்வின்றி சங்கம் சார்ந்த
செயல்பாட்டை முழுநேரப் பணியாய்ச் செய்யும்
சிறப்புடனே சுடர்விளக்கின் தூண்டு கோளாய்
இருக்கின்ற பழனியப்பன் தலைமை வாழீ
உறுப்புகளாய் இணைந்தியங்கும் சான்றோர் காக்கும்
பண்ணுருட்டி செந்தமிழ்நற் சங்கம் வாழீ