முன்னுரை
வெண்பா, அகவல் ஆகிய பாக்களால் அந்தாதி தொடை அமைய 20 பாடல்களால் பாடப்படுவது இருபா இருபது என்னும் சிற்றலக்கியமாகும். ஆசிரியர் இரட்டனைண நாராயணகவியின் படைப்பில் வருவனது திருமால் இருபா இருபது. இந்த பாடலில் பொதிந்திருக்கும் பரிநாம வளர்ச்சி தத்துவத்தை வெண்பா யாப்பில் 10 பாடல்கள் அமைத்து ஆசிரியர் பாவில் அவதார நிகழ்வுகளை விவரிப்பதில் மறைந்திருக்கும் ஜோதிட நுட்பத்தையும் ஆய்வுக்கு எடுத்து இக்கட்டுரை விவரிக்கப்பட்டிருக்கிறது.
மத்ஸிய அவதாரம்
தண்ணீரில் முதலில் தோன்றும் உயிரினங்கள் போல் மனிதனும், முதலில் தண்ணீரில் அன்னை வயிற்றில் பனிக்குட நீர் நீந்தி பிறப்பதை இணைத்துள்ளார். "நான்கு முகத்து பிரம்மன் உறங்க" என்று சொல்லும் போது அறிவு உறங்கியிருக்கும் போது, அறியாமையின் தோற்றம் வெளிப்படுவதையும், அறிவு மறைந்து விடும் போது, இறைவன் மீட்டெடுப்பான் என்பதையும், தோற்றத்தின் முதன்மையில் நீர் வாழ் உயிரினங்களின் தோற்றத்தை மச்ச அவதாரம் மூலம் முதல் பரிநாமத்தை, பரி (ஹயக்கிரீவர்) நாமம் (திருமாலின் குறி) மூலம் காட்டுகிறார்.
ஜோதிட நுட்பம்
நட்சத்திரத்தில் முதலில் வருவது அஸ்வதி, அஸ்வம் என்றால் குதிரை. அதன் அதிபதி கேது. தலையில்லா கடவுள்களிடம் அதன் இணைவு. விநாயகர் அதிதேவதை. எண்ணில் அடங்காதது (Infinity) அதன் காரகத்துவம். 7 எண் என்பதால், 7 நாட்களில் பிரளயம் நடைபெறும் என்றும், ஞானகாரகன் கேது என்பதால், முனிவர்களுடன் நீயும் ஏறிடு என்ற சொல்லும், அத்துடன் அவர் நாகம் என்பதால், வாசுகி என்னும் பாம்பை கொண்டு என்ற சொல்லாடல். பைபளில் உள்ள நோவாவின் கதை இது போன்றதே. கேதுவிற்கும் கிருத்துவத்திற்கும் உள்ள தொடர்பும் இது காட்டுகிறது. இப்படி கேதுவிற்கும் மச்சத்திற்கும் உள்ள தொடர்பு வெளிப்படுகிறது.
கூர்ம அவதாரம்
"பிறந்த குழந்தை சில தினங்கள் செல்ல புரண்டு கவிழும் நிலை" அடுத்த பரி நாம வளர்ச்சி:- நீர் வாழ் உயிர்கள் நிலம் நோக்கி வந்து, இரண்டிலும் வாழும் நிலையே ஆமையில் இறைவன் காட்டுகிறான்.
ஜோதிட நுட்பம்
யானைக்கு "கரி" என்ற பெயர் உண்டு. "அவமானம் " என்பது சனியின் காரகத்துவம். ஆமை அதிகம் நாள் வாழும் ஜீவன், மெல்ல நடக்கும் ஜீவன். சரி ஆயுள் காரகன் என்பதாலும், மெல்ல நகரும் கிரகம் என்பதாலும் பொருத்தமாக இருக்கிறது. பொறுமை காத்திட வேண்டும், தகுந்த நேரம் வந்திட சொல்லாடலிலும் வரும் "பொறுமை" "நேரம்" சனியின் காரதத்துவம் ஆகும். நச்சுக்காற்று என்ற சொல்லில் "காற்று" சனியின் அம்சமாகும். அதைப்போலவே, திருநீலகண்டன் என்ற சொல்லில் "நீலம்" சனியின் நிறமாகும். ஆயுர் வேத கடவுள் தன்வந்திரி. இது பழங்கால வைத்திய முறை. பழங்கால வைத்தியம் சனியின் அம்சமாகும். அதைப்போலவே "ஆட்சியைக் கவிழ்த்தனரே" என்ற சொல்லில் ஆட்சிக் கவிழ்ப்பு சனியின் அம்சமாகும். ஆதலால், ஆமை அவதாரம் சனி அம்சம் பெற்றது.
வராக அவதாரம்
"கவிழ்ந்த குழந்தை கைகால் ஊன்றி மெல்ல தவிழ்ந்து நகரும் நிலை". புவி உயிர், நீர் நிலை விட்டு, நிலம் வாழ் உயிராய் மாறும் நிலையும், அதாவது முட்டையில்லாமல் கருத்தறித்தல் வழி வரும் பரிநாம வளர்ச்சியில் பன்றியாய் கடவுள் அவதரித்துள்ளார். பன்றி கர்ப்பம் தரித்து, பின் குழந்தைக்கு பால் கொடுக்கும் நிலை (Amphibians to mammals)
ஜோதிட நுட்பம்
பூமிக்குள் இருப்பது, ராகுவின் அம்சம். ராகு போககாரகன். பன்றி தான் வேகமாக போகம் செய்யும் மிருகம். "இணைத்தை விருத்தி செய்யும்" வரிகளில் பொதிந்துள்ளார். இஸ்லாமிய மதத்தினர் பன்றியை கொல்ல மாட்டார்கள். ஏன்? என்றால் அது ராகுவின் காரகத்தவம் உள்ள மதம். ராகுவைப் போல் இடமிருந்து வலமாக "காபாவை " சுற்றுவார்கள். ராகு மற்றும் வராகத்தின் ஒற்றுமை இதில் புரியும்.
நரசிம்ம அவதாரம்
மனித குணமும், மிருக குணமும் இணைந்து இருப்பதை சொல்லி டார்வின் கோட்பாட்டை மெய்பித்திருக்கிறார் கவிஞர். உருவில் விலங்கிலிருந்து மனித இனம் தோன்றியதை நரசிம்ம அவதாரம் மூலம் கடவுள் மெய்ப்பிக்கிறார்.
ஜோதிட நுட்பம்
நகம், ஆயுதம், இரத்தம், மிருகம், மந்திரம், விளையாட்டு, பூமி, ஆளுமை ஆகியவவைகளுக்கு காரகன் "செவ்வாய்." இவ்வார்த்தைகள் அப்பாடல்களில் உள்ளது. பூமியில் ஆளுமை வர்க்கத்தில் ஒரு விளையாட்டுப் பிள்ளை நாராயண மந்திரம் ஓத எதிர்த்த அவன் தகப்பனை நரசிம்மர் மிருக ரூபமாகவும், நகத்தை ஆயுதமாய் வைத்து, வயிற்றைப் பிளந்து, இரத்தம் வரவழைத்தார். ஆதலால், செவ்வாயின் அம்சம் நரசிம்மர் உடைய அம்சத்துடன் ஒப்பிடலாம் என்பது ஜோதிட நுட்பம்.
வாமன அவதாரம்
நரனாய்நாற் கால்களிலி ருந்திரண்டு கால்களில் நேர்நின்ற குள்ள மனிதன் - அறிவுத் திறனாற்றல் பெற்று வளர்ந்த நிலையை ஐந்தாம் பரிநாம வளர்ச்சியாய் கூறுகிறார். நாலு கால் உள்ள மிருகம் பின் இரண்டு கால் வளர்ச்சி குன்றி - பின் அறிவுத் திறன் மூலம் வளர்ச்சி பெறுவது இந்த பரிநாம நிலை. இதிலும் மனிதன் குள்ளமாய் இருப்பதும், பின் திருவிற்கிரமராய் வளர்ச்சி பெறுவதும், மனிதனின் வளர்ச்சி நிலையை எடுத்துக் காட்டுகிறது.
ஜோதிட நுட்பம்
பொன் என்கின்ற தங்கத்திற்கு காரகன் குரு. குழந்தை சிசு எண்.3 அந்தணர்கள் இதற்கு காரகம் குரு ஆவார். வில்லு, அம்பு என்பது அவர் தனுசு வீடு. ஆகவே பொன், வில்லு, அம்பு, பிரகஸ்பதி, அந்தணர், பன்னிரு நாள் (1+2=3), சிசு, சிறுவன், மூன்றடி ஆகிய வார்த்தைகள் இந்த பாடல்களில் வருவது வாமன அவதாரத்தை குரு அம்சமாக சித்தரிக்கும் நுட்பமாகும்.
பரசுராம அவதாரம்
ஆயுதம் தன்னை மகழ்ச்சியாய் காட்டில் உலவுதல் நாகரீகத்தின் முதற்படி. கைகொண்டான் என்பதில் நகத்தில் இருந்து இப்பொழுது பரசு என்னும் கோடாரி வைத்து, கொண்டதை பரிநாம வளர்ச்சி ஆக 6-ம் நிலை பரிநாம வளர்ச்சியை காட்டுகிறார். மனிதன் + மிருகம் = நரசிம்மர், பின் சித்தர குள்ளர் தோற்றம். இப்பொழுது மனிதன் மட்டுமே ஆன நிலை காட்டில் இயற்கையுடன் வாழும் நிலை.
ஜோதிட நுட்பம்
ஜமதக்னி, ரேணுகா தேவி இருவரும் பிருகு வம்சம் என்பதால், சுக்கிரன் காரகத்துவத்தில் வருகிறார்கள். அத்துடன் எண்.6 சுக்கிரன் சம்பந்தப்பட்டது. கந்தாவன், கற்பு, காமதேனு ஆகியவைகள் சுக்கிரன் காரகத்துவம் வைக்கிறார். ஆகையால், பரசுராம அவதாரம் சுக்கிரன் அம்சம் கொண்டதாகும். பரசுராமர் ராமரை பார்த்து தன் விஷ்ணு தனுசை கொடுத்ததில், ராமர் அதை வெற்றிகரமாக நிலை நிறுத்தியதால், பரசுராமர் ராமரின் வெற்றியை உணர வைக்கும் நிலை. (சுக்கிரன், சூரியனுடன் இணையும் போது வழு இழக்கும் தத்துவம். இதை அஸ்தங்க தோஷம் என்பார்கள்).
இராம அவதாரம்
காட்டிலும், மேட்டிலும் வாழ்ந்த நிலை உரைக்க வீடு, குடும்பம், உறவு, கடமை, தலைவனை தேர்ந்தெடுத்தல், என்ற உயர்வுக்கு எடுத்து செல்லும் பரிநாம வளர்ச்சி நிலை. இதில் நாட்டு உயர்வு, முடியாட்சி என்ற அரசியல் தத்துவம் அடங்கும்.
ஜோதிட நுட்பம்
இராமர் சூரிய வம்சம், அவர் கொடி சூரியனை தாங்கியது. சூரியனை இழுத்து செல்லும் 7 குதிரைகள் குறிப்பது 7-வது அவதாரம். மணிமுடி, அரசன், சூரியன் காரகத்துவம். தரசதன் என்றால் 10 தேர் என்று பொருள். இதன் கூட்டு எண்.1. சூரியனின் எண்.1. தந்தை, நல்லாட்சி, அரச பிரதிநிதி, நெஞ்சம், பட்டம் சூட்டி ஆகிய சொற்கள் சூரியன் காரகத்தவம் அடங்கியது. இப்படி சொல்லால் இராமனை சூரிய வம்சம் என்று சிறப்பு சேர்க்கிறார் கவிஞர் ஜோதிட நுட்பத்தை உள்ளே புகுத்தியுள்ளார்.
பலராம அவதாரம்
காட்டு வாழ்வு முடிந்து, நாட்டு வாழ்வு வர அதில் குடும்பம் அமைத்து பசி, பிணி போக்க உணவு வகை தேடி அதற்கு உழுது பயிர் செய்தும், கிடைத்த உணவுகளை உண்டு வரும் நிலை. இதை உணர்த்த கடவுள் கலப்பையை பலராமனின் ஆயுதமாய் தந்தார். விவசாயத்தின் முக்கியத்துவமும், வேளாண்மையின் மேலாண்மையும் உரைக்கும் பரிநாம தத்துவம் இந்த அவதாரம்.
ஜோதிட நுட்பம்
வேளாண்மையின் நிறம் பச்சை. பலராமன் நாக அம்சம் கொண்டவர். ஆயில்யம் நாக அம்சம் கொண்ட நட்சத்திரம். அதன் அதிபதி புதன். ஜோதிடத்தில் அவதார விஷ்ணுவிற்கும் கிரகம் புதன். ஆக பலராம அவதாரம் புதனுடன் ஒப்பிட்டு சொல்ல ஏதுவாக இருக்கிறது.
கிருஷ்ண அவதாரம்
உழவு செய்தும், கால்நடை ஒப்பியும் வாழ்ந்தவன் வாழும் முறை வகுத்ததன் படி வரிகளில் உழவுடன் கால்நடையின் முக்கியத்துவத்தையும் கூறுகிறார். பால், தயிர், மாட்டு சாணம், கோமியம், ஆகியவைகள் நம் வாழ்வியலுக்கு வேண்டிய பொருள். விவசாயம் போலவே கால்நடை பராமரிப்பும் முக்கியத்துவம் வாய்ந்தது. இதுவே பலராம கிருஷ்ணர் ஆகியோர்களின் இணைவு காட்டுகிறது. அத்துடன் கடவுளின் முழுமை அவதாரம் கிருஷ்ணர். அதில் அவர் அரசானயும், விளையாட்டு பிள்ளையாகவும், காதலனாகவும், இராஜ தந்திரியாகவும், கீதையை உரைக்கும் தத்துவ மேதையாகவும், பலருக்கு நண்பராகவும், புல்லாங்குழல் கலைஞனாகவும் பல பரிநாம எடுத்து தன் முழுமையை காட்டும் அவதாரம் கிருஷ்ண அவதாரம். பரிநாமத்தின் உச்ச நிலை என்பதால், இறைவன் இவ்வவதாரத்தில் பலமுறை விஸ்வரூபம் எடுத்தும் காட்டியுள்ளார்.
ஜோதிட நுட்பம்
பால், தயிர், மோர், நெய், வெண்ணெய் கால்நடைகள் இவை அனைத்தும் சந்திரனின் காரதத்துவத்தில் அடங்கும். அழகுக்கும் இவரே காரகன். கிருஷ்ணர் சந்திர வம்சத்தை சார்ந்தவர். இதில் வரும் சொல் பெண், மாயை தேவி, இரவு, அனுதினம், சிந்தையில் நினைத்து, யமுனை ஆறு, கோகுலம், நந்த கோபர், சுவை, பால் ஆகிய சொற்கள் சந்திரனின் காரகத்துவம் கொண்டது. இதிலிருந்து கிருஷ்ணருக்கும், சந்திரனுக்கும் உள்ள ஒற்றுமை வெளிப்படையாகிறது.
கல்கி அவதாரம்
வளர்ச்சியின் முடிவில் வருவது அழிவு.
ஆக்குவது அழிவுக்கே என்று சொல்வார்கள். பேராசை, வன்மம், கொலை, காமம், சூழ்ச்சி,
(Construction is for Destruction) பொறாமை, சுயநலம், நீதிநெறி தவறுதல், ஆகிய கெட்ட குணங்கள் பெருத்திருக்கும் காலத்தில் அக்காலத்தை மாய்க்க இறைவன் கல்கி அவதாரம் எடுத்து வருவார் என்பது நம்பிக்கை. வளர்ச்சியின் முதிர்ச்சியில் கெட்ட குணங்களாக அவை பரிநமித்து அழிவை நோக்கி செல்லும் பொருட்டு, நேரம் அதை தடுத்து ஒழிக்க எடுக்கும் அவதாரம் கல்கியாகும். எந்த செயலுக்கும் முடிவு உண்டு, அதைப் போலவே பரிநாம வளர்ச்சியின் முடிவு நிலையில் இருக்கும் நிலையில் எடுப்பது கல்கி அவதாரம்.
ஜோதிட நுட்பம்
அழிப்பது, துன்பம், ஆகியவைகள் "மாந்தி" என்ற உபகிரகத்தின் காரகத்துவம். கூண்டோடு அழிவது என்பது மாந்தியை குறிக்கும். மாந்தி என்பது சனியின் மைந்தனாக கருதப்படும் கிரகம். இப்படி தீய எண்ணங்கள் தீய நடத்தைகள் அதிகரிக்கும் பொழுது அவைகளை கட்டுப்பாட்டுக்குள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவது கல்கி கல்கி அவதாரம். கல்கி அவதாரத்தை மாந்தியுடன் ஒப்பிடலாம்.
முடிவரை
இப்படி திருமால் இருபா இருபது - சிற்றிலக்கியம் பரிநாம வளர்ச்சியில் ஆதி முதல் அந்தம் வரை பல கோணங்களை நேர்த்தியாக கையாளப்பட்டிருக்கிறார் இரட்டணை நாராயண கவி. இது பரிநாம வளர்ச்சி தத்துவத்தை மட்டும் சொல்லாமல், ஜோதிட நுட்பத்தையும் கூறுகிறது. அதில் அதிகம் மறைந்து பொதிந்து கிடக்கும் ஜோதிட நுட்பங்கள் அறிவுக்கு விருந்தளிப்பதாக உள்ளது. முதல் அவதாரத்திலேயே பாண்டிய நாட்டு மன்னர் என்று சொல்லும் போது தமிழன் கல் தோண்றி மண் தோண்றா காலத்தே வாளோடு முன் தோண்றிய மூத்த குடி என்பது திண்ணமாகிறது.
ரா.நாராயணன்,
வழக்கறிஞர்,
109, மாவட்ட நீதிமன்ற வளாகம்,
கோவை