Wednesday, January 29, 2025

அன்னை

அன்னை இல்லா உயிரினங்கள்
மண்ணில் தானாய் பிறக்காது
சின்ன வித்தை கருவாக்கி
உருவம் தந்து சுமந்திடுவாள்
கன்னி தாயாய் ஆகுமுன்னே
மாற்றம் பலவும் கண்டிடுவாள்
தனது ஆசை பலவற்றை
குழந்தைக் காக தவிர்திடுவாள்

உண்ணும் உணவு எதுவென்று
குழந்தைக் காக உண்டிடுவாள்
பண்ணும் இசையும் தான்மறந்து
குழந்தைப் பிதற்றல் கேட்டிடுவாள்