Saturday, January 4, 2025

இன்றைய பண்டிகைகள் மக்களுக்கு இன்பம் அளிக்கிறதா? துன்பம் அளிக்கிறதா?

சிறப்புப் பட்டிமன்றம்

 

அன்னை தந்த மொழி அமுதூட்ட வந்த மொழி

பின்னை மொழிக்கெல்லாம் தாயாக நின்ற மொழி

 

என் தாய் தமிழை முதற்கண் வணங்கி,

 

பொங்கல் திருவிழாவை முன்னிட்டு நடைபெறும் “இன்றைய பண்டிகைகள் மக்களுக்கு இன்பம் அளிக்கிறதா? துன்பம் அளிக்கிறதா?” என்ற சிறப்புப் பட்டிமன்றத்தை ஏற்பாடு செய்த 90.4 பவ்டா பன்பலை நிறுவனர் அவர்களுக்கும்

 

பட்டி மன்றத்தின் நடுவர் மதிப்புறு முனைவர் பாவலர் சுந்தரபழனியப்பன் ஐயா அவர்களுக்கும் 

 

இன்றைய பண்டிகைகள் மக்களுக்கும் துன்பம் அளிக்கிறதே என்னும் தலைப்பில் என்னோடு பேச இருக்கும் எனது அருமைச் சகோதரி கவிஞர் கீதாலட்சுமி அவர்களுக்கும்.

 

பண்டிகைகளைக் கொண்டாட முடியாமல் துன்பப் பட்டுக் கொண்டு இன்பமே என்று பேச அமந்திருக்கும் என் எதிர் அணித் தலைவர் சகோதரர் கோவி. மகாவிஷ்ணு மற்றும் சகோதரி கு. சுவித்ரா அவர்களுக்கும்

 

இந்நிகழ்ச்சியைப் பட்டிதொட்டி எங்கும் கண்டும் கேட்டும் ரசித்துக் கொண்டிருக்கும் என் தாய்த்தமிழ் உறவுகளுக்கும் முதற்கண் வணக்கத்தையும் பொங்கல் வாழ்த்தையும்  தெரிவித்துக் கொள்கிறேன்.

 

நடுவர் அவர்களே

 

 

பண்டிகைகள் என்பது 

உறவுகள் சம்பந்தப்பட்டது

பணம் சம்பந்தப்பட்டது

மனம் சந்பந்தப்பட்டது

 

 

அந்தக் காலத்துல

 

பாட்டன் பாட்டி

பெரியப்பா பெரியம்மா

சித்தப்பா சித்தி

அப்பா அம்மா

அண்ணன் அக்காள்

தம்பி தங்கை

மாமா அத்தை

 

என்று எத்தனையோ உறவுகள் ஒரே குடும்பமா இருந்தது

 

அப்போது தோள்கொடுக்க உறவுகளும்

 

கண்ணீர் துடைக்க கரங்களும் இருந்தன

 

அந்த நேரத்துல 

 

உன்னைக் கண்டு நானாட 

என்னைக் கண்டு நீயாட

ஆனந்தம் பொங்கும் இந்த தீபாவளி

 

அப்படின்னு மகிழ்ச்சியாகக் கொண்டாடினாங்க

 

அதுமட்டுமல்லாமல் ஆளுக்கொரு வேலையா பங்கிட்டு பண்டிகைகளைக் கொண்டாடினாங்க

 

ஆனால் இன்னிக்கு அப்படியா ஐயா  இருக்கு. 

 

நாம் இருவர் நமக்கு இருவர்னு

குடும்ப உறுப்புனர்கள் அளவு சுருங்கிப் போச்சி.

 

வீட்டு வேலையா இருந்தாலும் சரி

பண்டிகை வேலையா இருந்தாலும் சரி

நாமதானதானைய்யா செஞ்சாகணும்....

 

நடுவர் அவர்களே

 

பண்டிகைகள் இன்பத்தைத்தான் தருகிறதுன்னு சொல்றாங்களே

 

அவங்களோட கதை உங்களுக்குத் தெரியுமா?

 

பண்டிகையைச் சிறப்பா கொண்டாடணும்னு சொல்லிட்டு

கடன் காரனிடம் கடன வாங்கிட்டு

 

உன்னைக் கண்டு நான் ஓட

என்னைக் கண்டு நீ தேட

துன்பத்தைக் கொண்டு வந்த தீபாவளி

 

அப்படின்னு வீட்டைத் தாப்பாள் போட்டு பாட்டுப்பாடிகிட்டு இருக்காங்கயையா அவங்க

 

இப்படி இருக்கிற சூழ்நிலையில் பண்டிகைகள் இன்பத்தைjன் தருதுன்னு அவங்களாள எப்படி பேச முடியுது?

 

நடுவர் அவர்களே

 

பேங்குக்கும் உறவுக்கும் ஒரு ஒற்றுமை இருக்கு

 

இரண்டிலும் கொடுத்தாத்தான் திரும்ப வாங்க முடியும்.

ஒருவேள வாங்கறது மட்டும்தான் நடக்குதுன்னா அது  கிரீடிட் காடு மாதிரி கொடுத்துட்டு அப்புறம் கஷ்டப்படுத்தும்..

 

 

நடுவர் அவர்களே

 

 

பண்டிகை என்பது பணம் சம்பந்தப்பட்டது,

 

பாட்டன் பூட்டன் சொத்துல உக்காந்து பண்டிகைகளைக் கொண்டற இவங்களுக்க

 

அன்னாடங் காய்ச்சிக்களோடு கண்டம் எப்படி ஐயா தெரியும்  

 

இன்றைய வாழ்க்கையில பணம் சம்பாதிக்க மனிதர்கள் மிஷினவிட வேகமா ஓடிகிட்டிருக்கான்

 

நடுவர் அவர்களே

 

ஆசப்பட்ட எல்லாத்தையும் காசிருந்தா வாங்கலாம் 

 

அப்படின்னு சொல்றாங்க 

 

காசை யாருகிட்ட ஐயா வாங்கறது.

 

நடுவர் அவர்களே

 

ஒரு குடும்பத்துல இருக்கிற இரண்டு பேரும் சம்பாதிச்சா மட்டும்தான் இன்னிக்குக் குடும்பமே நடத்த முடியும்.

 

ஒருவேளை ஒருத்தர் மட்டும் சம்பாதிக்கிற குடும்பமா இருந்தா?

தினக் கூலிக்குப் போற குடும்பமா இருந்தா?

 

எப்படி ஐயா பண்டிகையை மகிழ்ச்சியா கொண்டாட முடியும்?

 

நடுவர் அவர்களே

 

மத்தவங்களப் போல நாமும் பண்டிகைகளைக் கொண்டடாடலான்னு

 

நகை நட்டெல்லாம் அடகு வச்சி

பக்கத்து வீட்ல இருக்கிறவங்க வடையைத் தட்டினாலும்

நாம தொடையாவது தட்டனும்னு நெனச்சி

 

துணிக் கடைக்குப் போனேங்கைய்யா

 

முதல்ல

எனக்கும் எங்க வீட்டம்மாவுக்கும் துணி எடுத்தோம்

1500 ரூபாய் தாய் ஆச்சி

ரொம்ப மகிழ்ச்சியா இருந்தது.

 

அடுத்து

 

என் பசங்களுக்குத் துணி எடுக்க குழந்தைகள் பிரிவுக்குப் போனேன் ஐயா

வகை வகையா துணிகளை எடுத்துப் போட்டாங்க

தேடிப் பிடிச்சி என் பசங்க ரெண்டு பேருக்கும் துணி எடுத்தேன் ஐயா

விலையைப் பார்த்தா ஒருசெட்டு துணி பொண்ணுக்கு 3500 ரூபாயும்

என் பையனுக்கு 2900 ரூபாயும் இருந்தது ஐயா

நான் துணிக்குன்னு எடுத்துக்கிட்டு போனது 5000 ரூபாய்தான்

என்ன செய்ய

எனக்கும் என் மனைவிக்கும் எடுத்த துணிய வச்சிட்டு

என் பசங்களுக்கு மட்டும் எடுத்துகிட்டு வந்துட்டோம் ஐயா.

 

அடுத்து,

 

பொங்கல் வைக்க தேவையான மளிகை வாங்கலான்னு சூப்பர் மார்க்கெட்டுக்குப் பேனேன் ஐயா ஏகப்பட்ட வரிசையில எதை எதையோ அடுக்கி வைச்சிருந்தாங்க

 

பட்டிக்காட்டான் முட்டாய் கடைய மொரச்சி பாக்கிறமாதிரி பார்த்துகிட்டே போனோம் ஐயா

 

மளிகை சாமான் எல்லாம் வாங்கினோம் 1800 ரூபாய் ஆச்சி. இப்பவும் ரொம்ப சந்தோசமா வந்து பில்லு போட்டேன் ஐயா.

 

என் பையனும் பொன்னும் பில்லு போடற இடத்துக்கு வரல என்னடான்னு பார்த்தா

 

போகும்போதே சூப்பர் மார்க்கெட் உள்ள நொழஞ்சதுமே சில பொருட்கள பாத்துட்டாங்க அதை வாங்கிக் கொடுக்கலன்னு அவங்களுக்குக் கோபம்

என்னடா இதுன்னு

போய் அந்தப் பொருளோட விளையக் கேட்டா ரெண்டு பேருக்கும் சேர்த்து 5000 ரூபாய் அப்படின்னு சொன்னாங்க

 

என்னோட கோபத்தையும் மன வலியையும் கட்டுப் படுத்துகிட்டு வாங்கிக் கொடுத்துட்டு பாத்தா 100ரூபாய் தான் மீதி இருக்கு.  பஸ்க்கு என்ன பன்றதுன்னு கவலை வந்திடுத்து.

 

நல்ல வேல பஸ்சுல மகளிர்க்கு இலவசம்னு சொன்னதால நான் தப்பிச்சேன்.

 

நடுவர் அவர்களே

 

பண்டிகைன்னா மகிழ்ச்சியா கொண்டாடுவது யாருன்னு தெரியுங்களா

 

நகக்கடை ஓனரும்

துணிக்கடை ஓனரும்

மளிகைக்கடை ஓனருந்தாங்கைய்யா

 

நடுவர் அவர்களே

 

ஐயா நாங்கெல்லாம் ஒன்றாக கூடி

குக் பண்ணி சாப்பிடறவங்க

அவங்கெல்லாம் ஆல்லைனில்

புக் பண்ணி சாப்பிடறவங்க

 

அதுமட்டுமல்ல ஐயா

 

ஐயா நாங்கெல்லாம் துன்பப்பட்டாலும்

பண்டிகை லைக் பண்ணி கொண்டாடுவோம்

அவங்க சந்தோசமா கொண்டாடினாலும்

லைக்கக்காக கொண்டாடுறாங்க ஐயா

 

பண்டிகை வருதுன்னு குளிக்கிறவங்க

இல்லைங்கைய்யா நாங்க

தினம்தினம் விர்வையில் குளிக்கிறவங்க

 

நடுவர் அவர்களே

 

திருவிழா என்பது ஒரு நாளோட மகிழ்ச்சியா பார்க்காதீர்கள்

ஓர் ஆண்டோட பொருளாதார துன்பங்களா பாருங்க

 

பண்டிகை எல்லாம் சின்னப் பசங்களோட கொண்டாட்டமாகவும்

பெரியவங்களுக்குத் திண்டாட்டமாகவும்தான் இருக்கு

 

நடுவர் அவர்களே

 

எதிர் அணியில இருக்கிற சின்ன பசங்களோட இன்பத்தைப் பார்க்காம

 

எங்கள மாதிரி இருக்கிற பெரியவங்களோடு துன்பத்தைக் கண்டு தீர்ப்பு வழங்குமாறு பணிவோடு கேட்டுக் கொண்டு விடைபெறுகிறேன்.

 

நன்றி வணக்கம்