Friday, February 14, 2025

ஊடகங்களால் சமூகம் சீரழிகிறதா? செம்மைப்படுகிறதா? 15.02.2025

மக்கள் கருத்து நாளிதழ் நடத்தும் சிறப்புப் பட்டிமன்றத்திற்குத் தலைமைப் பொறுப்பு ஏற்றிருக்கும் எழுத்தோவியர், மதிப்புறு முனைவர், பாவலர் சுந்தரபழனியப்பன் அவர்களுக்கும்

சீரழிக்கிறதே என்னும் தலைப்பில் என்னோடு பேச வந்துள்ள என் அணித்தலைவர் மதிப்புறு முனைவர் கவிஞர் அ. பாண்டு மற்றும் எதிர் அணியில் அமர்ந்துள்ள அன்புச் சகோரரிகள் முனைவர் அ. பாரதிராணி, கவிஞர் சீதாலட்சுமி ஆகியோருக்கும்

இப்பட்டிமன்ற நிகழ்வைக் கேட்டுக்கொண்டிருக்கும் என் அன்புத் தமிழ் உறவுகளுக்கும் முதற்கண் வணக்கத்தை உரித்தாக்கி மகிழ்கிறேன்.

நடுவர் அவர்களே

நீங்க நல்லவரா? கெட்டவரா?

நீங்க நல்லவர்தான் நடுவர் அவர்களே

எப்படின்னா? தீர்ப்ப எங்கப் பக்கம் தானே சொல்ல போறிங்க.. அதனாலதான்.

ஒருவர் நல்லவரா? கெட்டவரா? அப்படீன்னு தெரிஞ்சிக்கனும்னா.

அவரோட பண்பு நலன்கல ஆராய வேண்டும்.

ஒவ்வொரு மனிதர்க்குள்ளேயும் நல்ல குணமும் உண்டு. கெட்ட குணமும் உண்டு.

அதுல எது அதிகமா இருக்கோ அதுவே அவங்களோட குணம்.

இதைத்தான் வள்ளுவர்

குணம்நாடிக் குற்றமும் நாடி அவற்றுள்
மிகைநாடி மிக்க கொளல்.
குறள் - 504

அப்படீன்னு சொல்லி இருக்காரு.

அதுபோலதான் ஊடகங்களின் இயல்புகளும் இந்தச் சமூகத்திற்கு 

நல்ல விஷயங்கம் அதிகமா கொடுக்குதா?

கெட்ட விஷயங்கள் அதிகமா கொடுக்குதா?

அப்படீங்கறதுதான் இங்க முக்கியம்

நாளிதழ்

அன்புச் சகோதரி பாரதிராணி சொன்னாங்க. நாளிதழ்கள் எல்லாம் நல்ல விஷயங்கள சொல்லலியா? அப்துல்கலாம் பற்றியும் அவரோட சாதனைகளைப் பத்தியும் சொல்லி இருக்கே அப்படீன்னாங்க.

ஐயா இன்றைய நாளிதழ்கள் என்ன செய்யுது தெரியுங்களா?

சொல்ல வேண்டிய விஷயத்த சின்னதாவும்

சொல்லக்கூடாத விஷயத்த பெரியதாகவும் போடுதுங்கைய்யா.

அதுலேயும் கொலை, கொள்ளை, வன்கொடுமை, ஏமாத்தறது இதுதாங்கைய்யா அதிகமா இருக்கு.

வெள்ளித்திரை

ஐயா அந்தக் காலத்துப் படங்களில் எல்லாம் ஆபாச நடனம் ஆடறதுக்குன்னே சில்க் ஸ்மித்தா, டிஸ்கோ சாந்தி போன்ற நடிகைகள் இருந்தாங்கைய்யா.

இன்றைய காலத்துல எல்லா நடிகைகளும் சில்க் ஸ்மித்தா, டிஸ்கோ சாந்திதான் ஐயா.

அந்தக் காலத்துல கற்பழிப்புக் காட்சிகள் வந்தாலோ? முத்தக் காட்சிகள் வந்தாலோ? 

பூவ காட்டுவாங்க, வண்ட காட்டுவாங்க

மானைக் காட்டுவங்க புலியக் காட்டுவங்க

ஆனால் இப்ப எல்லாம் அப்படியா ஐயா இருக்கு சகிக்கல.

இன்றைய சினிமாவுல,  பாடல் காட்சி வந்தாலோ? காதல் காட்சி வந்தாலோ குடும்பத்தோட உக்காந்து பார்க்க முடியுதா ஐயா.

சின்னத் திரை

தியேட்டருக்குப் போய் சினிமா பாத்தது போய் இன்றைக்கு வீட்டிலேயே பார்ப்பது அப்படின்றது மகிழ்ச்சிதான் ஐயா.

ஆனால் இன்னைக்கு சீரியல் என்ற பெயரில் அடிக்கிற கூத்து இருக்கே அதைச் சொல்லி மாலாது. சமுதாயத்த கெடுத்துக் குட்டிச்சுவராக்குது ஐயா.

பண்பாட்டைச் சிதைக்கக் கூடியதாகவும்

ஒழுக்கக் கேடான உறவு முறைகளைக் கொண்டதாகவும்

உறவுமுறைகளைக் கொச்சப்படுத்துவதாகவும் 

மாமனார், மாமியார், கணவன், மனைவி, நாத்தனார், கொழுந்தன் ஆகிய உறவுகளைக் கேவளப்படுத்துவதாகவும் இருக்கு.

இன்றைய பெண்களுக்கு உயர் ரத்த அழுத்தம், சக்கரை நோயும்  அதிகமானதற்குக் முக்கிய காரணம் சீரியல்தான் ஐயா.

சின்னத்திரை சிறப்பு நிகழ்ச்சிகள்

ஆபாசமான ஆடைகளைப் போட்டுக்கிட்டு அவங்க அடிக்கிற லூட்டி இருக்கே அதைவிட அவங்க ஆடை இல்லாமலே வந்திருக்கலாம். ரெண்டும் ஒன்னுதான்.

அதைப் பார்த்து நம்ப பசங்களும் அந்த டிரஸ்தான் வேணும்னு சொல்லும் போது நமக்கு வருமே கோபம்...

கற்காலம் நோக்கி கற்றவரை ஓட்டுதே
தற்கால நாக ரிகம்

ஆபாச ஆடை விளம்பரம்

நெட்டி விளம்பரம், பனியன் சட்டி விளம்பரம் இதையெல்லாம் குடும்பத்தேட பார்க்க முடியுமா.

முக நூல்

ஐயா என் வகுப்புல பத்தாவது படிக்கிற பையங்கிட்ட,

அவனுக்கு எந்தப் பாடத்துல ஆர்வம் அதிகம் இருக்குன்னு தெரிஞ்சிக்க நீ வீட்டுக்குப் போனதும் 

தமிழ் புக் எடுத்து படிப்பியா

அறிவியல் புக் எடுத்து படிப்பியா

சமுக அறிவியல் புக் எடுத்துப் படிப்பியான்னு கேட்டேன் ஐயா

அதுக்கு அவன் சொன்ன

நான் வீட்டுக்குப் போனதும் பேஸ்புக் தான் படிப்பேன்னு

இந்த ஊடகம் எப்படி மாணவர்களைச் சீரழ்ச்சிருக்கு பாத்திங்களா?

வலையொளி

ஐயா 15 வருஷத்துக்கு முன்னாடி ஒரு ஊருக்கு ஒருவர் யூடிப் சேனல் வச்சிருந்தாங்க. ஊருல நடக்கிற நல்ல விசயங்க அதுல போடுவாங்க

ஆனால் இன்னிக்கு வீட்ல இருக்கிற அத்தனைப் பேரும் யூடிப் சேனல் வச்சிருக்காங்க.

ஐயா நானும் ஒரு யூடிப் சேனல் வச்சிருக்கேன் ஐயா அதுல போன்ற கல்வி சார்ந்த வீடியோக்கள போட்டுகிட்டு வரேன்

நான் ஒரு வீடியோவை தயாரிச்சி யூடிப்ல வெளியிட்டா 50 பேருதான் ஐயா பாத்திருக்காங்க

என் வகுப்புல படிக்கிற ஒரு பையன் நேத்து நடந்த ஆண்டு விழா வீடியோவை  எடுத்து அவனோட சேனன்ல போட்டான் ஐயா 

50000 பேரு பாத்திருக்காங்க. இந்த உலகம் எங்க ஐயா போய்கிட்டிருக்கு. 

அச்சம் மடம் நாணம் விட்டுப்
போனதுதான் நாகரிகம்
எட்டுமுழம் சேலை இனி வேணுமா? ..


கத்தரிக்காய் கூட்டு வைக்க
YouTubeபதான் பாக்குறது
பேசன் ஆகிப் போச்சு இப்ப பாரம்மா!

ஐயா இன்னிக்கு எதுக்கெடுத்தாலும் யூடிப்லதான் போய் பாக்கிறாங்க. 

ஏன் சுடுதண்ணி வக்கிறதுக்கு கூட யூடிப் போய் பாக்கறாங்கன்னா பாருங்களேன்.

ஐயா என் மணைவிகிட்ட பிரியாணி செய்து கொடுக்க சொன்னே ஐயா.

அவங்க எனக்குச் செய்ய தெரியாதுன்னு சொன்னாங்கய்யா.

ஒரு பிரியாணி வைக்க தெரியல நீயெல்லாம் ஒரு பொண்டாட்டி அப்படின்னு சொல்லிட்டு

நானும் போய் யூடிப்ல தேடி பிரியாணி செய்வது எப்படின்னு ஒரு வீடியோவ காட்டி பிரியாணி செய்ய சொன்னே ஐயா.

அவங்க அதைப் பார்த்துகிட்டு இருக்கும்போதே நெக்லஸ் விளம்பரம் ஒன்னு வந்தது ஐயா.

அதைக் காட்டி இதை வங்கிக் கொடுங்கன்னு அவங்க கேட்க ஆரம்பிச்சிட்டாங்க ஐயா.

எங்கிட்ட பணம் இல்ல என்னால வாங்கித்தர முடியாது அப்படின்னு சொன்னே ஐயா.

அவங்க போன கீழ போட்டுட்டு நான் கேட்ட எதையும் வாங்கித் தர முடியல நீயெல்லாம் ஒரு புருஷனா அப்படின்னு சண்ட போட ஆரம்பிச்சிட்டாங்கய்யா.

இப்படி குடும்பத்துக்குள்ள சண்டைய மூட்டி விடுற ஊடகம் இருக்கும் போது எப்படி ஐயா சமூகம் செம்மையடையும்.

இதுகூட பரவாயில்ல ஐயா.

பத்தாவது பசங்களுக்கு தமிழ் அன்னை மொழியே அப்படின்ற பாடம் எடுத்துகிட்டிருந்தேன் ஐயா. 

வர சிஇஒ டிஇஒ எல்லாம் பாடம் தொடர்பா காணொளி போட்டுக் காட்டுங்க அப்படின்னு சொன்னதால, நானும் உயர் தொழில் நுட்ப ஆய்வகத்துக்கு மாணவர்கள கூட்டிகிட்டுப் போய்.

வீடியோவைத் தேடி போட்டுக் காண்பித்தேன் ஐயா.

அந்த வீடியோ முடிஞ்சதும் அதை நிறுத்தலாம்னு நான் எழுந்து போகறதுக்குள்ள இன்னொரு வீடியோ வந்தது ஐயா அதைப் பார்த்ததுமே என்ன செய்யறதுன்னே தெரியாம மெய் ஆப் செஞ்சிட்டு மாணவர்கள எல்லாம் போகச் சொல்லிட்டேன் ஐயா.

அப்படி பாடம் சம்பந்தமா பார்க்கம் போது 

ஒழுக்கக் கேடான வீடியோ வந்தா மாணவன் பாடம் படிப்பானா

அந்த வீடியோ பார்ப்பான ஐயா.

இப்படி இருக்கிற ஊடகங்களால சமூகம் சீரழிஞ்சிதானே ஐயா போகும்.

ஆகவே ஊடகங்கள் சமுதாயத்தை சீரழிக்கிறதே என்று தீர்ப்பு வழங்கும்படி கேட்டுக் கொண்டு வாய்ப்புக்கு நன்றி கூறி விடை பெறுகிறேன். 

நன்றி வணக்கம்.