Monday, March 10, 2025

ஆக்கக் கவிதைகள்

ஆடை கட்டி உலவு கின்ற
மனித மிருகக் கூட்டமே
ஆடை மட்டும் இல்லை என்றால்
நீங்கள் கூட மிருகமே
கூடி இன்பம் துய்க்க மிருகம்
சம்ம தங்கள் கேட்குது
வாட்டி வதைத்து எல்லை மீறி
இன்பம் கண்டு மாய்க்கிறீர்.

ஓட்டுக் காக காசு வாங்கி
ஓட்டை விற்கும் மானிதரே
ஓட்டு உந்தன் கைவேல் என்று
உணர மல்நீர் இருக்கிறீர்
ஓட்டு உந்தன் நிலையை மாற்றும்
உணர்ந்து கடமை ஆற்றுவீர்
ஓட்டுக் காக ஆசை காட்டும்
மனிதர் இங்கு மாறுவார்.

சோறு போடும் நிலத்தை விற்று 
சோறு வாங்கி உண்கிறீர்
சோறு போடும் மக்கட் கூட்ட 
உள்ளம் நொந்து வேகுது
சோறு தண்ணீர் வளம்கு றைய்ய 
எதனை உண்டு வாழுவீர்
சோறு போடும் தொழிலைச் செய்து
 நிலமை மீண்டும் மாற்றுவோம்

கையூட்டு தந்து தந்து 
காரி யங்கள் நடத்துறார்
கையூட்டு கொடுக்கல் வாங்கல் 
மிகுதி யாக நடப்பதால்
கையூட்டுப் பெற்ற வர்கள் 
தவறு மிகையாய் செய்கிறார்
கையூட்டு இல்லை என்றால்
நாடு மாற்றம் காணுமே


மண்ணில் லாமல் பயிர்வ ளர்த்து
உண்டு வாழும் மானிடா
மண்ணின் சத்தைப் பயிர்கள் உண்டு
பூக்காய் கனியாய் கொடுக்குது

உண்மை அன்பு தேயாது 
பணத்தை நம்பி ஓடாது
உண்மை நட்பு ஒருபோதும்
காத லாக மாறாது
உண்மை யாக வாழ்பவற்கு

வேலைத் தேடி வேலைத் தேடி 
இளைஞர் கூட்டம் ஓடுது

வேலை இன்றித் தவிக்கும் போது
இருக்கும் எண்ணம் யாவுமே
வேலை வந்து சேர்ந்த பின்பு
மாற்றம் கொண்டு வாழுது