Thursday, September 25, 2025

யாப்பியல் நோக்கில் புரட்சிக்கவி

யாப்பியல் நோக்கில் புரட்சிக்கவி

முனைவர் க. அரிகிருஷ்ணன்
பொருளாளர்
தமிழ்நாடு, அனைத்துலகப் பொங்குதமிழ்ச் சங்கம்
150, கிழக்குத் தெரு, இரட்டணை அஞ்சல்
திண்டிவனம் வட்டம், விழுப்புரம் மாவட்டம்

முன்னுரை

"புரட்சிக்கவி" என்பது பாரதிதாசன் எழுதிய ஒரு குறுங்காவியமாகும். இந்நூல் பில்கணியம் என்னும் வடமொழி காவியத்தைத் தழுவி எழுதப்பட்டுள்ளது. 

பயின்று வரும் யாப்பு வகை

ஆசிரியப்பா
எண்சீர் விருத்தம்
சிந்து
நொண்டிச்சிந்து
பஃறொடை வெண்பா
கும்மி

நேரிசை ஆசிரியப்பா

அரசன் அமைச்சர்பால் அறிவிக் கின்றான்;
‘அமுத வல்லிஎன் ஆசைக் கொருபெண்!
தமிழிலக் கியங்கள் தமிழிலக் கணங்கள்
அமைவுற ஆய்ந்தாள்; அயல்மொழி பயின்றாள்;
ஆர்ந்த ஒழுக்கநூல், நீதிநூல் அறிந்தாள்;
அனைத்தும் உணர்ந்தா ளாயினும், அன்னாள்
கவிதை புனையக் கற்றாள் இல்லை.
மலரும், பாடும் வண்டும், தளிரும்,
மலையும், கடலும், வாவியும், ஓடையும்.
விண்ணின் விரிவும், மண்ணின் வனப்பும்,
மேலோர் மேன்மையும், மெலிந்தோர் மெலிவும்,
தமிழின் அமுதத் தன்மையும் கவர்வன, அதனால்
என்மகள் அகத்தில் எழுந்த கவிதையைப்
புறத்தில் பிறர்க்குப் புலப்படுத்த துதற்குச்
செய்யுள் இலக்கணம் தெரிதல் வேண்டுமாம்!
ஏற்றதோர் ஆசான் எங்குளான்?
தோற்றிய வாறு சொல்க அமைச்சரே!’


எண்சீர் ஆசிரிய விருத்தம்

நீலவான் ஆடைக்குள் உடல் மறைத்து
நிலா என்று காட்டுகின்றாய் ஒளிமுகத்தை!
கோல முழுதும் காட்டிவிட்டால் காதல்
கொள்ளையிலே இவ்வுலகம் சாமோ? வானச்
சோலையிலே பூத்த தனிப்பூவோ நீ தான்
சொக்க வெள்ளிப் பால்குடமோ, அமுத ஊற்றோ
காலை வந்த செம்பரிதி கடலில் மூழ்கிக்
கனல்மாறிக் குளிர்அடைந்த ஒளிப்பி ழம்போ - புரட்சிக்கவி ப. 20

சிந்துக் கண்ணி

முதலடியிலேயே தனிச்சொல் பெற்று வருவது சிந்து எனப்படுகிறது.

எண்ணும் இரண்டடி எதுகை ஒன்றின்
கண்ணி என்று கருதப் படுமே - சிந்துப்பாவியல்

இரண்டிரண்டு அடிகள் ஓர் எதுகைப் பெற்று அமைவது கண்ணி எனப்படும்.

நாலடி பெற்று நடக்கும் கண்ணியும்
ஓரடி கண்ணியும் உளவென மொழிப 

யாப்புமுறை உரைப்பான்-அணி
யாவும் உரைத்திடுவான்;
பாப் புனை தற்கான-அநு
பவம்பல புகல்வான்.
தீர்ப்புற அன்னவளும்-ஆக
சித்திரம் நன்மதுரம்,
சேர்ப்புறு வித்தாரம்-எனும்
தீங்கவிதை அனைத்தும்,

இப்பாடலை நாலடிக் கண்ணி என்று கூறுவர்.

பஃறொடை வெண்பா

“வானத்தை வெண்ணிலா வந்து தழுவுவதும்
மோனத் திருக்கும் முதிர்சோலை மெய்சிலிர்க்க
ஆனந்தத் தென்றல்வந்தாரத் தழுவுவதும்
நானோக்கி நோக்கி நலிதலினைக் காணாயோ?
சித்தரித்த ஆணழகே, சென்றுபடர் முல்லையினைக்
கத்தரித்தல் இன்றிக் கரந்தழுவும் மாமரமும்,

நொண்டிச் சிந்து



எண்சீர் அடிகள் இரண்டோர் எதுகையாய்,
ஐந்தாம் சீர்தொறும் மோனை அமைந்து,
நான்மை நடையுடன், நாலாஞ் சீரில்
தனிச்சொல் தழுவி இனித்திட நடப்பது.
நொண்டிச் சிந்தென நுவலப் படுமே.
      
நாலசைத் தனிச்சொல் நடுவே மடுத்தலும்,
ஐந்தாஞ் சீரிலும் ஏழாம் சீரிலும்
எதுகை பெறுதலும் எழில்மிகத் தருமே.
    
[முனைவர் இரா. திருமுருகனார், சிந்துப் பாவியல் - 35. 36]


நொண்டிச் சிந்துகளில் நாலாம் சீராக நடுவே வரும் தனிச்சொல் நான்கு உயிர்ளைப் பெற்றுவருவதும், ஒவ்வோரடியின் ஐந்தாம் சீரிலும், ஏழாம் சீரிலும் எதுகை பெற்றுவருவதும் அப்பாடலுக்கு மிகுந்த அழகை அளிக்கும்.
     
இன்றைய நொண்டிச் சிந்துக்களில் தனிச்சொற்கள் பெரும்பாலும் ஈரசைச் சொற்களாக உள்ளன. ஓரசைச் சொற்கள் அருகி வருகின்றன.


கவிஞன் இவ்வாறுரைத்தான்-புவி
காப்பவன் இடியெனக் கனன்று ரைப்பான்;
'குவிந்த உன் உடற்சதையைப்-பல
கூறிட்டுநரிதின்னக் கொடுத்திடுவேன்.
தவந்தனில் ஈன்ற என்பெண்-மனம்
தாங்குவதில்லையெனிற் கவலை இல்லை!
நவிலுமுன் பெரும் பிழைக்கே-தக்க
ராசதண்டனை யுண்டு மாற்ற முண்டோ?

கும்மி


‘நாயை இழுத்துப் புறம் விடுப்பீர்-கெட்ட
நாவை அறுத்துத் தொலைக்கு முன்னே!-இந்தப்
பேயினை நான்பெற்ற பெண்ணெனவே சொல்லும்
பேச்சை மறந்திடச் சொல்லிடுவீர்-என்
தூய குடிக்கொரு தோஷத்தையே தந்த
துட்டச் சிறுக்கியைக் காவற்சிறை-தன்னில்
போய் அடைப்பீர்! அந்தப் பொய்யனை ஊரெதிர்
போட்டுக் கொலை செய்யக் கூட்டிச் செல்வீர்!