Friday, November 28, 2025

மாயோனே நெடியோனே

மாயோனே நெடியோனே
மலைமீது இருப்பவனே
ஓயாமல் உனைநானே
வணங்கியே மகிழ்ந்தேனே
எப்போதும் திருவடியைத்
தொழுதவன் நான்தானே
தப்பாமல் நாள்தோறும்
காத்திட வேண்டுமையா

மாயோனே நெடியோனே
மலைமீது இருப்பவனே
ஓயாமல் உனைநானே
வணங்கியே மகிழ்ந்தேனே


வேறுதுணை இல்லாமலே
நம்பியே வாழுமெனை
வேற்றுவர்போல் சோதித்து
ஏமாற்றம் தருவதேனோ?
கடவுளென்றால் கைகொடுத்து
நம்பினோற்கு துணைஇருக்கும்
விடாமுயற்சி செய்தபோதும்
தோல்விவந்து சேர்வதேனோ?

மாயோனே நெடியோனே
மலைமீது இருப்பவனே
ஓயாமல் உனைநானே
வணங்கியே மகிழ்ந்தேனே

உறவுகளை விட்டுவிட்டு
உன்னைநம்பி வந்தோமே!
உறவாக உன்னைஎண்ணி
உன்வழியில் நடந்தோமே!
உன்னிடத்தில் சொல்லிசொல்லி
செயல்யாவும் செய்தோமே!
அன்னையாக நீஇருந்து
காப்பதுஉன் கடமையன்றோ?

மாயோனே நெடியோனே
மலைமீது இருப்பவனே
ஓயாமல் உனைநானே
வணங்கியே மகிழ்ந்தேனே
எப்போதும் திருவடியைத்
தொழுதவன் நான்தானே
தப்பாமல் நாள்தோறும்
காத்திட வேண்டுமையா