பள்ளி செல்ல வேண்டும்
நல்ல பிள்ளை போல நீயும்
பள்ளி செல்ல வேண்டும்
பள்ளி செல்ல வேண்டும் தம்பி
பள்ளி செல்ல வேண்டும்
பள்ளி செல்ல வேண்டும்
நல்ல பிள்ளை போல நீயும்
பள்ளி செல்ல வேண்டும்
அன்னை தந்தை சொல்லைக் கேட்டு
பள்ளி செல்ல வேண்டும்
அன்னை தந்தை யான ஆசான்
சொல்லைக் கேட்க வேண்டும்
பள்ளி செல்ல வேண்டும் தம்பி
பள்ளி செல்ல வேண்டும்
பள்ளி செல்ல வேண்டும்
நல்ல பிள்ளை போல நீயும்
பள்ளி செல்ல வேண்டும்
கல்வி செல்வம் போல
வேறு ஒன்றும் இல்ல
பிள்ளை நல்ல பிள்ளை
கற்க வேண்டும் மெல்ல
ஏடெ டுத்துப் பாடம்
புத்திக் குள்ளே ஏற்று
நாடு உந்தன் கையைத்
தேடி நிற்கும் பாரு.
பள்ளி செல்ல வேண்டும் தம்பி
பள்ளி செல்ல வேண்டும்
பள்ளி செல்ல வேண்டும்
நல்ல பிள்ளை போல நீயும்
பள்ளி செல்ல வேண்டும்
வயசு இந்த வயசு
கல்வி கற்கும் வயசு
தயவு இன்றி வாழ
கற்கும் நல்ல வயசு
பாதை மாற்றும் எண்ணம்
உன்னில் வந்த போதும்
பாதை மாற வேண்டாம்
பயணம் நல்ல பயணம்
பள்ளி செல்ல வேண்டும் தம்பி
பள்ளி செல்ல வேண்டும்
பள்ளி செல்ல வேண்டும்
நல்ல பிள்ளை போல நீயும்
பள்ளி செல்ல வேண்டும்