Saturday, November 29, 2025

காலையில் எழுந்து கண்விழித்தேன்

காலையில் எழுந்து கண்விழித்தேன்
வீடு வாசலை காணலையே
வெளியில் வந்து பார்திருந்தேன்
எனதுநாடு போல் இல்லையே
சோறு ஊட்டி அன்புகாட்ட
தாயும் தந்தையும் இங்கில்லையே
உறவைத் தேடிப் பார்க்கின்றேன் 
ஒருவர் கூட உடனில்லையே

காலையில் எழுந்து கண்விழித்தேன்
வீடு வாசலை காணலையே
வெளியில் வந்து பார்திருந்தேன்
எனதுநாடு போல்இல்லையே

போட்டி போடும் உலகத்துல
படிப்புதானே சோறுபோடும்
படிச்சிவர வேணுமுன்னு
என்னை அனுப்பி வச்சாங்க.
அப்பா அம்மா சொல்லகேட்டு
ஊரும் உறவும் விட்டுவிட்டு
நாடுதாண்டி நாடுதாண்டி
நானும் இங்கு வந்தேங்க.

காலையில் எழுந்து கண்விழித்தேன்
வீடு வாசலை காணலையே
வெளியில் வந்து பார்திருந்தேன்
எனதுநாடு போல்இல்லையே

நாக்கு சுவை நான் மறந்தேன் 
எனக்கு நானே துணை இருந்தேன்
பேச்சுத் துணை யாருமில்லை 
பேச எனக்கு விருப்பமில்லை
பெத்தவங்க பார்த்த முகம்
எலச்சி எலும்புக்கூடச்சி
பார்த்து பார்த்து ஏங்குகிறேன் 
நான் வந்து நாளாச்சு

காலையில் எழுந்து கண்விழித்தேன்
வீடு வாசலை காணலையே
வெளியில் வந்து பார்திருந்தேன்
எனதுநாடு போல்இல்லையே

அப்பா அம்மா திட்டும் போதும்
கடிந்து என்னைப் பேசும்போதும்
மனம் நொந்து இருந்தாலும்
பெத்தவங்களோடு இருந்தேன்
சுதந்திரமா சுத்தி வந்தேன்
நெனச்சபாடம் படிச்சுவந்தேன்
கேட்க ஒரு ஆளும் இல்லை
இப்ப யாரும் கூட இல்லை

காலையில் எழுந்து கண்விழித்தேன்
வீடு வாசலை காணலையே
வெளியில் வந்து பார்திருந்தேன்
எனதுநாடு போல்இல்லையே
சோறு ஊட்டி அன்புகாட்ட
தாயும் தந்தையும் இங்கில்லையே
உறவைத் தேடிப் பார்க்கின்றேன் 
ஒருவர் கூட உடனில்லையே