எங்கள் தமிழ்மொழி வாழ்க
ஆழிசூழ்ந்த தரணியெங்கும்
உலவும் தமிழ்மொழி வாழ்க
ஏணியின்றி வானுலகம்
சென்ற தமிழ்மொழி வாழ்க
தேன்சொரியும் இலக்கியங்கள்
கொண்ட தமிழ்மொழி வாழ்க
வளரும் தமிழ்மொழி வாழ்க
பொங்கிவரும் இலக்கியங்கள்
கொண்ட தமிழ்மொழி வாழ்க
சிந்தனையில் ஊற்றெடுக்கும்
சீரிய தமிழ்மொழி வாழ்க
பிந்தைமொழி அத்தனைக்கும்
அன்னைத் தமிழ்மொழி வாழ்க
வகைப்படுத்தி அறம்மொழியும்
நீதித் தமிழ்மொழி வாழ்க
கதையோடு வாழ்வுசெல்லும்
காப்பிய தமிழ்மொழி வாழ்க
விதையாக பக்தியினை
செப்பிய தமிழ்மொழி வாழ்க
பாடும் தமிழ்மொழி வாழ்க.
நாட்டுமக்கள் வாழ்வியலை
சொல்லும் தமிழ்மொழி வாழ்க
கவிதையொடு உரைநடையும்
கொண்ட தமிழ்மொழி வாழ்க
கவிவடிவம் பலவந்து
சேர்ந்த தமிழ்மொழி வாழ்க
ஆய்வுத் தமிழ்மொழி வாழ்க
வாய்மொழிகள் நூல் வடிவம்
கொண்டத் தமிழ்மொழி வாழ்க
ஆர்வமுள்ள நாட்டினர்கள்
பேசும் தமிழ்மொழி வாழ்க
நீராரும் கடலுடுத்தி
நின்ற தமிழ்மொழி வாழ்க
நிலைத்த தமிழ்மொழி வாழ்க
நீக்கமற நிறைந்திருக்கும்
எங்கள் தமிழ்மொழி வாழ்க