Friday, December 26, 2025

வலது கண்ணிலே அடிபட்டாலும்

வலது கண்ணிலே அடிபட்டாலும் 
இடது கண்ணிலும் நீர்வடியும் 
மனசு வேதனையில் இருந்தாலும் 
உடல் வெளிப்படுத்தி காட்டிடுமே



ஒன்னா இருக்கணும் அவங்க
ஒன்னா இருக்கணும் ப்போதும்
கணவனும் மனைவியும் 
ஒன்னா இருக்கணும் 

கண்ணா இருக்கணும் அவங்க
கண்ணா இருக்கணும் 
கடமை செய்யும் நேரத்தில
கண்ணா இருக்கணும் 

 - எப்போதுமே


உனது எனதென்று வார்த்தையில் கூட  

வலது கண்ணிலே அடிபட்டாலும் 
இடது கண்ணும் சேர்ந் தழுதிடுமே 
இதயம் சோகமாய் இருந்தாலும் 
உடலும் அதை வெளிக்காட்டிடுமே 
குடும்ப உறுப்பினர் ஒருவருக்கொருவர் 
மறைத்து வாழ்வது சரிதானோ? 
உனது பணம் என்றும் எனது பணம் என்றும் 
பிரித்துப் பார்ப்பது முறைதானோ?


உன் பணம் என் பணம் என்பதெல்லாம் 
குடும்பத்தில் இருப்பது சரியே இல்லை 
உன் பொருள் என் பொருள் என்பவர்க்கு 
வாழ்க்கையில் அர்த்தம் புரியவில்லை