Monday, October 14, 2019

வேலையில்லா பட்டதாரி

சிறகுகளை விரித்துவிட்டேன்

வான்வெளியில் பறந்துசெல்ல

எனது சிறகுகளும்

ஆரோக்கியமானவைகளாகத்தான் உள்ளன

என்றாலும்,

என் சிறகுகள்

என் கட்டுப்பாட்டில் இல்லை.



எனது கனவுகளும்

என் எண்ண ஓட்டத்திற்கு

நகர்ந்து செல்ல ஏதுவாக

சமுதாயத்தைத்தான்

நாடவேண்டியிருக்கிறது.



பெற்றோர், உற்றார், உறவினர் என

எத்தனையோ தடைகற்கள்

என் கனவுகளை உடைப்பதற்கு

காத்துக்கொண்டிருக்கின்றனர்,



இத்தகைய சமுதாயம்

என்னை ஏணிப்படிகளாக்கி

உயர்த்திவிடும என்ற கனவுகளோடு

என் பள்ளிப் படிப்பில்

என் பாதச்சுவடுகளைப்

பதிய வைத்தேன்.

படிப்பையும் வென்று வந்தேன்,



வேளையில்லாத் திண்டாட்டம்

என்னையும் ஒரு

வேளையில்லாப் பட்டதாரியாக்கியது

எல்லோரையும் போல நானும்

தண்டச்சோறு என் பட்டத்தை வாங்கினேன்,



சாதிப்போர் பட்டியலில்

என்பெயரையும் எழுதிவைத்து

என் படிப்பிற்கு ஏற்ற வேலை

கிடைக்குமென்று காத்திருந்தேன்.

படிப்பிற்கு மட்டுமல்ல

என் வறுமைக்கு வேலை கிடைக்கவில்லை.

இன்று ஒருபிடி சோற்றுக்கே

அடுத்தவர்களை நாடவேண்டியுள்ளது.



இளைஞர்களே

சிந்தித்து செயல்படுவீர்

படிப்பிற்கு ஏற்ற வேலையைவிட

பசிக்கேற்ற வேலையைத் தேடி

வாழ்வை உயர்த்துங்கள்

பிறர்

ஏசலுக்கு வாய்ப்பூட்டுப் போடுங்கள்.