Monday, October 14, 2019

சீதனம்

கண்ணில் கண்ட

பெண்களை எல்லாம்

காமுகப் பார்வையில்

காண்பவர்கள் ஏராளம்

ஏன்?

கட்டி அனைத்திட நினைப்பதும் உண்டு.



ஆண்களைப் போலவே நீயும்

கண்ணில் கண்ட

ஆண்களை எல்லாம்

விழுங்கி உண்பதுபோல்

காண்பது ஏனோ?



பூக்களைச் சுற்றி வந்து

தேன் உண்ணும்

வண்டுகளைக் கண்டிருக்கிறேன்

ஆனால்

வண்டுகளைச் சுற்றித்

தேன்கொடுக்கும் பூ

நீயாகத் தானிருப்பாய்.



பொன் குழைத்து செய்தால்தான் ஆபரணம்

பெண் ஒழுக்கம் சிறந்தால்தான் சீதனம்

உன்னை மாலை சூட வருபவனுக்கு



நீ கொடுக்கும் சீதனம் என்னவோ?