தோழர்களே! தோழிகளே! ஓடி வாருங்கள்
ஆசிரியர் பெருமைகளைப் பாடி மகிழுவோம்
ஆசிரியர் என்பவர்கள் குற்றம் நீக்கியே
அறிவொளியை ஏற்றுகின்ற ஞான தீபங்கள்
எண்ணும்எழுத்தும் கற்றுத்தந்து உலகைக் காட்டினார்
கடுகளவு உலகமென்று அறிவைப் பெருக்கினார்
ஏணியாக இருந்துநம்மை உயர்த்தி வாழ்விலே
உன்னதமாய் லட்சியங்கள் mila¢ செய்கிறார்
பெற்றவர்கள் போலநம்மைக் காக்கும் அவர்களை
போற்றிநாமும் பாடிடுவோம் ஓடி வாருங்கள்.