Wednesday, August 24, 2022

போற்றித் திருஅகவல்

கேசியை அழித்த கேசவா போற்றி
திருமகள் மார்பில் வைத்தாய் போற்றி
கருட வாகனம் கொண்டவா போற்றி  
மூன்றடி மண்ணை யாசித்தாய் போற்றி
வேங்கட மலையில் நின்றாய் போற்றி
சங்கொடு சக்கரம் ஏந்தினாய் போய்றி
வெண்ணை உண்ட வாயனே போற்றி
மண்ணை உண்ட மாயவா போற்றி
வாமன னாகி வந்தாய் போற்றி
பாற்கடல் பள்ளி கொண்டவா போற்றி
காளியன் வதம்செய் கோவிந்தா போற்றி
மலைக்குடை தாங்கி நின்றவா போற்றி