ஏட்டுக் கல்வி எமக்குத் தந்த
இரண்டாம் பெற்றோர்
எட்டுத் திக்கில் பாதை சொன்ன
திசைகள் காட்டி
கற்கும் பொருளைத் தெளிவாய்க் காட்டும்
மூன்றா வதுகண்
ஏற்றி விட்டு பெருமை கொள்ளும்
ஏணிப் படிகள்
ஒன்று முதலாய் இந்நாள் வரையில்
அறிவு தந்த
அன்பு நிறைந்த ஆசான் களுக்கு
ஆசிரியர் தின வாழ்த்துகள்
Sunday, September 4, 2022
ஆசிரியர் தின வாழ்த்துகள்
Tags
# கவிதைகள்

About தமிழ்க்கடல்
rettanainarayanakavi.blogspot.com என்ற இவ்வலைதளம் இரட்டணை நாராயணகவி எனும் புனைப்பெயர் கொண்ட முனைவர் க அரிகிருஷ்ணனின் படைப்புகளைத் தாக்கிய தளமாகும்.
கவிதைகள்
Tags:
கவிதைகள்