Tuesday, September 6, 2022

வெண்ணியம்மன் நான்மணிமாலை

நேரிசைவெண்பா (காப்பு)

தொண்டியாற் றங்கரை கோவில் உறைஏழு
கன்னிய ருள்ஊர் முதன்மையான - அன்னையாம்
வெண்ணியம் மன்புகழ் பாட நிரைமேய்க்கும்
கண்ணன் இருப்பான் துணை 

இரட்டணை தொண்டி ஆற்றங்கரையில் கோவில் கொண்டுள்ள கன்னியர் ஏழுவருள் இவ்வூரின் முதன்மைத் தெய்வமாக விளங்கும் வெண்ணியம்மனின் புகழ் பாடுவதற்கு ஆனிரைகளை மேய்க்கும் கண்ணன் துணையாக இருந்து காப்பான்.

நேரிசைவெண்பா

தீமை அழிக்கதரு மம்காக்க தெய்வம்
பூமியில் தோன்றி செயல்முடித்து - தாம்இருக்க
ஓரிடம் தேடி உறைந்தங்கு உள்ளமக்கள்
வாழ அருளும் சிறந்து. 01

அதர்மங்களை அழிக்கவும் தருமங்கள் காக்கவும் பூமியில் தெய்வங்கள் தோன்றி, தன்னுடைய செயல் முடிந்த பின்பு, தாம் இருக்க ஓர் இடம் தேடி கோவில் கொண்டு அங்குள்ள மக்களைக் காத்து சிறப்பாய் வாழ்வதற்கு அருள் புரிகின்றன.

கட்டளைக் கலித்துறை

சிவனார் முதலாய் படைத்த எழுவகை கன்னிகையர்
அவனியில் வந்த செயலை முடித்தோய்வு கொள்வதற்கு
தவத்தோர் வசிக்கும் சிறந்த இடமாம் இரட்டணையில்
அவத்தை நீக்கி வணங்குவோ காக்க அமர்ந்தனளே 02

சிவன், விஷ்ணு, பிரம்மா, முருகன், வராக மூர்த்தி, யமன் ஆகியோரால் உருவாக்கப்பட்ட பிராம்மி, மகேஸ்வரி, கௌமாரி, வைஷ்ணவி, வராகி, இந்திராணி, சாமுண்டி என்ற ஏழு கன்னியர்கள், பெண்ணின் கருவில் தோன்றாத கன்னித்தன்மை வாய்ந்த பெண்ணால் மட்டுமே தனக்கு மரணம் உண்டாக வேண்டும் என்ற வரத்தை பிரம்மாவிடம் வேண்டிப் பெற்ற அந்தகாசுரன், அண்ட முண்டர்களை அழித்து, ஓய்வு கொள்வதற்காக நல்ல இடம் தேடி, ஒழுக்கங்களில் சிறந்தவர்கள் வசிக்கும் இரட்டணையில் வணக்குகின்ற மக்களின் துன்பங்கள் நீக்கி காத்திட கொவில் கொண்டாள்.

அறுசீர் விருத்தம்

அன்னையரை வணங்கு தற்கு ஆணவத்தை விட்டொ ழிப்பீர்
கன்னியர்க்கும் தன்னு டற்கும் சம்பந்தம் அறிந்து கொள்வீர்
கன்னியரை வணங்க வேண்டும் குலதெய்வம் அறியா மாந்தர்
துன்பங்கள் தீரு தற்கு கைத்தொழுது வரங்கள் கேட்போம் 03

சப்த மாதாக்களின் அருள் நமக்கு கிடைக்க வேண்டும் என்றால், நமக்குள் இருக்கும் ஆணவங்களை விட்டொழிக்க வேண்டும். ஏழு கன்னியர்க்கும் நமது உடக்குமான தொடர்பை அறிந்துகொள்ள வேண்டும். ( சப்தமாதர்களுக்கும் நம் உடலுக்கும் தொடர்பு உள்ளதாக புராணங்கள் தெரிவிக்கின்றன. அவை : பிராம்மி தோலுக்கு தலைவி. மகேஸ்வரி நிணத்திற்கு தலைவி. கவுமாரி ரத்தத்திற்கு தலைவி. நாராயணி சீழிற்குத் தேவதை. வாராஹி எலும்பின் தெய்வம். இந்திராணி சதையின் தேவதை. சாமுண்டி நரம்பின் தலைவி.)  தங்களின் குலதெய்வம் எதுவென்று அறியாதவர்கள் சப்த கன்னிகையரை வணங்குதல் வேண்டும். நம்முடைய துன்பங்கள் தீர கைத் தொழுது வரங்களைக் கேட்போம்.

மண்டில ஆசிரியப்பா

கேட்கும் வரங்கள் பெற்றிட நினைத்தால்
போற்றிடும் அன்னையர் கோயில் சென்று
சுயநலம் இன்றி தூய மனத்துடன்
மஞ்சள் சிவப்பு ஆடைகள் சாற்றி
மங்கள பொருட்கள் அர்ச்சனை யாக்கி
வணங்கிட வாழ்வில் திருப்பம் உண்டே. 04

வேண்டிய வரங்கள் பெற்றிட வேண்டும் என்றால் சப்த கன்னியர் ஆலயம் சென்று, சுயநலம் நீக்கி தூய மனத்துடன் மஞ்சள் அல்லது சிவப்பு ஆடைகள் சாற்றி, மங்களப் பொருட்களை அருச்சனைப் பொருட்களாக்கி வணங்கினால் வாழ்வில் திருப்பம் உண்டாகும்.

நேரிசைவெண்பா (வைஸ்ணவி)

திருமால் சிவன்பிரம்மா மூவரின் இல்லாள்
திரும லைகலை
மகள் சேர்ந்த - உருவாய்
கரங்களில் சங்கொடு சக்கரம் தாங்கி
இரட்டணை உள்ளாள் அவள் 05


திருமால், சிவன், பிரம்மா ஆகிய மூவரின் இல்லத் துணைவியர்களான திருமகள் (இலட்சுமி), மலைமகள் (பார்வதி), கலைமகள் (சரஸ்வதி) ஆகியோர் ஒன்றிணைந்த உருவம் கொண்ட வைஸ்ணவி, கைகளில் சங்க சக்கரத்தைத் தாங்கி, அம்பிகையின் கைகளில் இருந்து தோன்னிற வெண்ணியம்மன் இரட்டணையில் கோவில் கொண்டுள்ளாள்.

கட்டளைக் கலித்துறை (பிரம்மஹி)

அயனது அம்சம் சரசுவின் தோற்றம் முகம்பிறந்து
நயம்மிகு நான்கு தலைகரம் நாலிரு கண்படைத்த
பயன்தரும் கல்விக் கதிபதி  யான பிரம்மகியின்
தயவு பெறமஞ்சள் உணவாடை சார்த்தி வணங்குவோமே 06

பிரம்மகி, நான்முகனின் அம்சத்துடன் சரசுவதியின் தோற்றம் கொண்டு  அம்பிகையின் முகத்தில் தோன்றியவள். பிரம்மாவைப்போலவே நான்கு தலைகளும் நான்கு கரங்களும் எட்டுக் கண்களும் இவளுக்குண்டு. வாழ்க்கைக்குப் பயன்தரும் கல்விக்கு அதிபதியான இவளின் அருள் வேண்டுவோர், மஞ்சள் நிற ஆடை சார்த்தி, எலுமிச்சை சாதம் வைத்து வணங்குதல் வேண்டும்.

அறுசீர்விருத்தம் (மகேசுவரி)

வழக்கிலே வென்றோன் அம்சம் தாங்கிய முக்கண் தேவி
மழுவுடன் பாசம் நாகம் அங்குசம் மணிமான் சூலம்
அழகிய ரிசபம் கொண்டு பரசுவும் அபயம் காத்து 
எழில்தலை ஐந்தி னோடும் சிறப்புடன் அமைந்தி ருப்பாள் 07

திருவெண்ணைய் நல்லூரில் சுந்தரருடன் நடந்த வழக்கில் வென்ற சிவனின் அம்சத்துடன் மூன்றுகள்களைக் கொண்டு, மழு, பாசம், நாகம், அங்குசம், மணி, மான், சூலம், பரசு ஆகிய ஆயுதங்களைத் தாங்கி அழகிய காளை வாகனம் கொண்டு, அழகுதரும் ஐந்து தலைகளுடன் அம்பிகையின் தோள்களில் இருந்து தோன்றிய  மகேசுவரி சிறப்பாகக் காட்சி தந்தாள்.

மண்டில ஆசிரியப்பா (கௌமாரி)


அறுபடை வீடு கொண்ட முருகனின் 
அம்சம் மான கௌமாரி அன்னை
மயில்வா கனமும் சேவல் கொடியும்
வேலும் கைக்கொண்டு தோற்றம் கொள்வாள் 08

திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழநி, சுவாமிமலை, திருத்தணி, பழமுதிர்சோலை ஆகிய ஆறுபடை வீடுகளைக் கொண்ட முருகனின் அம்சத்தில் தோன்றிய கௌமாரி அன்னை, அம்பிகையின் கால் பகுதியில் இருந்து தோன்றியவள். மயிலை வாகனமாகவும் சேவலைக் கொடியாகவும் வேலைக் கையில் கொண்டு காட்சி கொடுப்பாள்.

நேரிசை வெண்பா (இந்திராணி)


கொடியானை வாகனமாய் இந்திரனின் அம்சமாய்
பொன்னிற மேனி அழகுகொண்டு - தன்னை
வழிபடு வோர்உயிர் காத்தும் சிறந்த
துணைதந்தும் காப்பாள் அவள் 09

அம்பிகையின் தனத்தில்(மார்பில்) இருந்து தோன்றிய இந்திராணி, யானையைக்  கொடியாகவும் வாகனமாகவும் கொண்டவள். இவள், இந்திரனின் அம்சமும் பொன்னிற மேனியும் அழகும் கொண்டு தன்னை வணங்குகின்றவர்களின் உயிரைக் காத்தும் சிறப்பான துணையை அமைத்துத் தந்துக் காப்பாள்.

கட்டளைக் கலித்துறை (சாமுண்டி)

அன்னையர் யாவரின் சக்தி அனைத்தையும் பெற்றவள்நம் 
துன்பம் விலக்கி நினைத்த வரங்களைத் தந்துகாப்பாள்
அன்னை வணங்க பயம்போம் உருத்திரன் அம்சமாவாள்
முன்பத்ர காளி உருபெற்ற சாமுண்டி வடிவினளே 10

சப்த கன்னியர்களின் சக்திகள் அனைத்தையும் பெற்ற சாமுண்டி, நம்முடைய துன்பங்களை நீக்கி வேண்டிய வரங்களைத் தந்து காக்கும் இயல்பினள். உருத்திரனின் அம்சமான இவள், முன்பு பத்திரகாளியாக இருந்து தன் கோர உருவத்தை மாற்றி, சாமூண்டி வடிவம் கொண்டாள். இவ்வன்னையை வணங்க, எம பயம், எதிரி பயம் யாவும் நீங்கும்.

எண்சீர் ஆசிரியவிருத்தம் (வராகி)


வராக முகமும் அம்பாள் உடலும்
          ஞானம் வடிவாய் மூன்றாம் கண்ணும்
கரங்கள் எட்டும் இனிது காக்க
          நீல நிலத்தில் தோற்றம் கொள்வாள்
திருமால் என்றால் நினைவில் தோன்றும்
          சங்கு ஆழி கரங்கள் கொள்வாள்
விரதம் இருந்து அவள்தாள் பணிய
          தேவை அறிந்து தானே அருள்வாள் 11

அம்பிகையின் பின் பகுதியில் இருந்து தோன்றிய வராகி, பன்றியின் முகத்தையும் அம்மனின் உடலமைப்பையும் அறிவின் அடையாளமாக விளங்கும் மூன்றாவது கண்ணும் எட்டுக் கைகளில் அவற்றிற்குரிய ஆயுதங்களைத் தாங்கி நீல நிறத்தில் காட்சி அளிப்பாள். திருமால் என்றதுமே நம் நினைவில் வரும் சங்கு சங்கரங்களை கைகளில் கொண்டவள். அவளை நினைத்து விரதங்கள் இருந்தாள் நம் தேவைகளை அவளே அறிந்து நம்மைக் காப்பாள்.

நேரிசை ஆசிரியப்பா

அன்னையர் எழுவர் பல்லூர் உறைவர்
எனினும் ஒருவர் முதன்மைத் தெய்வமாவர்
அவ்வகை இரட்டணை உறைபவள் வைணவி
எழுவரின் சக்திகள் ஒன்றாய்க் கொண்டு
எழுந்திடும் ஆலயம் வருவோர்க் கெல்லாம்
அருள்தந்து ஆட்சி செய்யும்
திறம்வி யந்து வழிபடு வோமே 12

பிராம்மி, மகேஸ்வரி, கௌமாரி, வைஷ்ணவி, வராகி, இந்திராணி, சாமுண்டி என்ற ஏழு கன்னியர்கள், பல ஊர்களில் கோவில் கொண்டுள்ளனர். ஆனால் அவர்களுள் ஓர் அன்னை மட்டும் அவ்வீரின் முதன்மையான தெய்வமாகக் கருதப்படுவாள். அவ்வகையில் இரட்டணையில் முதன்மையாகக் கோவில் கொண்டுள்ள அன்னை வைணவியாவாள். இவ்வன்னை ஏழு கன்னியர்களின் சக்திகளை ஒன்றாகப் பெற்று, தன் ஆலயத்திற்கு வரும் பக்தர்களுக்கு அருள் வழங்கி இப்பகுதியை ஆளுகின்ற திறத்தினை வியந்து வழிபடுவோம்.

நேரிசை வெண்பா

வழிபடும் பக்தர் மனமறிந்து எண்ணும்
செயல்கள் நிறைவேற்றி அன்பு - மயமான
வாழ்வளிக்கும் வைணவி யானவெண்ணி யம்மன்தாள்
போற்றி உயர்ந்திடு வோம். 13

வைணவியான வெண்ணியம்மன், தன்னை வழிபடுகின்ற பக்தர்களின் மனங்களை அறிந்து அவர்கள் நினைக்கின்ற செயல்களை நிறைவேற்றி, அன்பு மயமான வாழ்வை அளிக்க வல்லவள். இவ்வன்னையைப் போற்றி வழிபட்டு உயர்வோம்.

கட்டளைக் கலித்துறை

உலகில் நடக்கும் அநீதிகள் மாய்த்திட தேவிமூவர்
பலம்தந்து ஆக்கிய வெண்ணியம் மன்தன் செயல்முடித்து
நிலைகொண்டாள் மாயவன் ஆயுதம் தாங்கியோள் செல்வவீரம்
பலதிறப் பட்ட அறிவும் அளிக்கும் இயல்பினளே 14

உலகில் நடக்கும் அநீதிகளை அழிப்பதற்காக காளி, இலட்சுமி, சரசுவதி ஆகிய தேவியர் மூவரும் தன் சக்திகளைக் கொண்டு உருவாக்கிய வெண்ணியம்மன், தான் படைக்கப்பட்டதற்கான செயல்களை முடித்து, இரட்டணையில் கோவில் கொண்டுள்ளாள். மாயவனின் ஆயுதங்களான சங்கு, சக்கரங்களைக் கரங்களில் தாங்கிய அன்னை, செல்வம், வீரம், பலதிறப்பட்ட அறிவு ஆகியவற்றை வழங்கும் இயல்புடையவள்.

அறுசீர் ஆசிரியவிருத்தம்

இந்திரன் முதலா தேவர்  வணங்கிடும் அன்னை யாளை
சிந்தையில் வைத்தே நாமம் சொல்லிடும் அடியார் காப்பாள்
வந்திடும் பிணிகள் போக்கி எதிரியை அஞ்சச் செய்வாள்
சந்ததி விருத்தி செய்து சங்கடம் நீக்கி காப்பாள் 15

இந்திரன் முதலான தெய்வங்கள் வணங்கும் வெண்ணியம்மன், தன்னை மனத்துள் வைத்து தன் பெயர்ச் சொல்லி வணங்குகின்ற அடியவர்களைக் காப்பாள். அவர்களுக்கு வருகின்ற நோய் நொடிகளை நீக்குவாள். அவர்களின் எதிரிகளை பயம் கொள்ளச் செய்வாள். சந்ததிகளை உண்டாக்கி அவர்களின் துன்பங்களை நீக்கி காத்திடுவாள். 

மண்டில ஆசிரியப்பா

காக்கும் தொழில்செய் கண்ணன் அம்சம்
காயா மேனி கன்னி ஒருத்தி
சூரியன் போல உழைக்கும் மாந்தர்
பண்பும் பணிவும் கொண்டு வாழ்வோர்
உண்மை பேசி நியாயம் காப்போர்
பாதக மின்றி தொண்டுகள் செய்வோர்
ஆடம் பரம்ஆர்ப் பாட்டம் இல்லோர்
அமைதி வழிநடப்போர் உறவுகள் காப்போர்
பின்னை வரும்பழி அறிந்து செயல்படுவோர்
அருள்மழை தந்து துணைநிற் பாளே 16

காக்கும் தொழிலைச் செய்கின்ற கண்ணனின் அம்சமாகி நீல நிறம் கொண்ட எழுவகைக் கன்னியருள் ஒருத்தியான வெண்ணியம்மன், சூரியனைப் போல ஓயாமல் உழைப்பவர், 

தனது மழைபோன்ற அருளினைத் தந்து துணையாக இருந்து காத்திடுவாள். 

நேரிசை வெண்பா

துணைதந்து இல்லக் கசப்புநீக்கி ஊரார்
புகழ்வண்ணம் வாழவைத்து சூழும் - பகைநீக்கி
பிள்ளை வரம்அளித்து கல்வியோடு வேண்டிய
செல்வம் தருவா ளவள். 17

னனனனனன

கட்டளைக் கலித்துறை

தருமம் நிலைக்கத் துணைநிற்பாள் தீமை அழித்திடுவாள்
உரிமைகள் மீட்டுத் தருவாள் குடும்பம் தழைத்திடுவாள்
பெருமை தரும்செயல் செய்விப்பாள் உள்மனம் ஏதுமின்றி
சிரம்தாழ்த்தி தன்நாமம் சொல்லி உணர்வாய் பணிந்தவர்க்கே 18

னகளனககளகளன

அறுசீர் ஆசிரியவிருத்தம்

பணிந்திட நினைப்ப வர்கள் வேம்பினை அருகில் நட்டு
துணிவகை பலவும் சார்த்தி மஞ்சளும் திலக மிட்டு
பணிவுடன் மலர்கள் சூடி மரத்தினைப் பாது காத்து
வேண்டுதல் அதன்முன் வைத்து அம்மனாய் வணங்கிடு வீரே 19

ஆசிரியப்பா

வீர மங்கை யாகி நின்று
போரில் கொடிய அசுரர் வென்றாய்
கார்தூவ செழிக்கும் விளைநிலம்போல் இல்லம்
நேர்இன்னல் போக்கி வாழ வைப்பாயே  20

வீரம் பொருந்திய பெண்ணாக நின்று அசுரர்களைப் போலில் வென்றவள் நீ. மேகம் பொழிய செழித்திடும் விளைநிலம் போல வழிபடுவோரின் இல்லங்களில் நேருகின்ற துன்பங்களை போக்கி வாழ் வைத்திடுவாய்.

வையம் முழுதுலவும் காற்றாய் நிலன்நீராய்
தீயொடு ஆகாயம் ஆகியும் - தேயாத
சூரியன் தேயும் நிலவாய் இருந்துபல
சீவனைக் காப்பவள் நீ 21

நீரின்றி வாழா உயிரினம் நீயின்றி ஊரினர்க்கு
நேர்கின்ற இன்னல் களைபவர் யாருளார்? தாயெனவே
சீராட்டி காக்கும் இயல்புடை அன்னையே சேயெனவே 
பார்த்துன் அருள்வேண்டி நிற்கின்றேன் வெண்ணி உமையவளே 22

உமையாளின் ஆயு தங்கள் கரத்தில் தாங்கி தக்க
சமையங்கள் பாத்தி ருந்து பகைமை போக்கி உள்ள
அமைதியுடன் செல்வம் கல்வி அன்பு பாசம் எல்லாம்
அமைகின்ற வாழ்வு தந்து போற்றி காப்பாய் தாயே 23

தாயொருத்தி வந்தபின்னே சேய்மனம் குளிர்வதுபோல் 
நீயிருக்கும் காரணத்தால் ஊர்மக்கள் மனம்குளிர்வர்
நோய்நொடிகள் இல்லாத வாழ்வுதனைத் தந்தவளே
பாய்விரித்த உளமமர்ந்தாய் உலகாளும் வெண்ணியம்மா 24

வெண்ணி மலர்சூடி வீதிஉலா வந்தவளே
பெண்ணின் உளம்கவர்ந்த பேரழகே - எண்ணிய
யாவும் கொடுக்கும் இயல்பினளே எங்களின்
நோய்நொடி நீங்கிட செய் 25

நூறு மல்லிகைப் பூவின் வாசத்தை ஒருங்கே பெற்ற வெண்ணி (நந்தியாவட்டம்) மலரைச் சூடி வீதியில் உலா வந்தவளே. பெண்களின் உள்ளம் கவர்ந்த பேரழகே. நான் நினைத்த யாவற்றையும் கொடுக்கும் இயல்புடையவளே. எங்களின் நோய்நொடிகள் நீங்கிட செய்வாயாக.

செய்வினை சூனியம் பில்லியோ டேவல்  அகற்றிடுவாய்
பொய்சூது வஞ்சனை வன்மம் பொறாமை இலாதுசெய்வாய்
தொய்விலா தன்கடன் செய்திட ஊக்கம் அளித்திடுவாய்
மெய்யில் இருந்திடும் தீமை தரும்நச்சு நீக்குவாயே 26 

வெண்ணியம்மனே, மனிதர்கள் தமது எதிரிகளை நேரடியாக எதிர்க்க துணிவில்லாமல் மறைமுகமாக தாக்கி அழிக்க நினைத்து செய்யும் செய்வினை, பில்லி, சூனியம், ஏவல் ஆகியவை என்னை அண்டாமல் அகற்றிடுவாய். பொய், சூது, வஞ்சனை, வன்மம், பொறாமை ஆகியவை என்னுள் இல்லாமல் செய்திடுவாய். தொய்வு இல்லாமல் என்னடைய கடமைகளை செய்வதற்கு ஊக்கம் அளிப்பாய். உடலில் இருந்து தீமைதரும் நச்சுக்களை நீக்கிடுவாய்.

வாய்ப்பிதற்றும் குறுமொழியில் உந்தன் நாமம்
          நகர்ந்துசெல்லும் தென்றலிலும் உந்தன் ராகம்
வேய்ங்குழலும் மெல்லிசையாய் உன்னை பாடும்
          பூத்திருக்கும் பூவிதழ்கள் உன்னைக் காட்டும்
தாய்பாடும் தாலாட்டின் பொருளும் நீயே
          இருசுடராய் வந்துசெல்லும் ஒளியும் நீயே
ஓய்வின்றி கரைமோதும் அலையும் நீயே
          உண்ணுகின்ற ஓர்உணவும் நீயே அன்றோ 27

அன்பும் அருளும் உடையவர் நெஞ்சில்
ஆலயம் கொண்டு குடிபுகும் தெய்வம்
தண்ணீர் இன்றி வாடும் பயிர்க்கு
நன்னீ ராகி காப்பது உன்கடன்
புன்னிய பூமி சுயநலம் ஆனது
எந்நிலை யாகினும் என்துணை நீயே 28

நீயே நிலஉலகம் நீயே இருசுடர்
நீயே கடல்நீயே வான்மழை - நீயே
அனைத்துமாய் நின்றாய் எனையளும் வெண்ணியம்மா
உள்ளம் அறிந்து அருள் 29

அருள்தரும் தெய்வமாய் ஆசை அறுத்து நிலவுலகில்
பொருள்இலா மாந்தர் படும்துயர் போலன்றி காத்திடம்மா
இருள்சூழ் உலகில் ஒளியாய் இருந்து வழிநடத்தி
பெருங்கடல் வாழ்வு கடக்க படகாய் இருப்பவளே 30

பொய், களவு, காமம் முதலான இருள் சூழ்ந்த இந்த நிலவுலகில் அவற்றைப் போக்கும் ஒளியாக இருந்து எங்களை வழிநடத்தி, வாழ்க்கை என்னும் பெருங்கடலைக் கடப்பதற்கு தெப்பமாய் இருப்பவளே. அருள் கொடுக்கும் தெய்வமாய் என் ஆசைகளை எல்லாம் அறுத்தெடுத்து, பொருள் இல்லாதவர்கள் படும் துன்பம்போல் அல்லாமல் காத்திட வேண்டுமம்மா.

இருஉரு வாகி நின்று  அருள்தரும் வெண்ணி யம்மா
பெருமழை யாகி நின்று வறுமையை ஒழிக்க வள்ளாய்
தருநிழ லாகி நின்று உடலினை உறுதி செய்வாய்
இருசுட ராயி ருந்து வேண்டுதல் தந்து காப்பாய் 31

உருவமாகவும் அருவமாகவும் இருந்து அருள் புரியம் வெண்ணியம்மா, பெரும் மழைபோன்று என்னுடைய வறுமையை ஒழிப்பவள் நீ. மரத்தின் நிழலாக இருந்து என்னுடைய உடலுக்குத் தேவையான சக்தியை அளிப்பவள் நீ. உலகினைக் காக்கும் சூரிய சந்திரனைப் போல இருந்து எனக்கு வேண்டியவற்றை எல்லாம் தந்து காப்பாயே.

காக்கும் கடவுள் அம்சமாய் வந்து
தாக்கும் எதிரியை தும்சமும் செய்து
தருமம் நிலைபெற செய்யும் வெண்ணியே
மாந்தரின் அன்பு தேய்பிறை ஆனது
கானலாய் இரக்கம் பாசம் தியாகம் 
பரிவு விட்டுக் கொடுத்தல் ஆயின
உறவுகளில் விரிசல் நீண்டது ஆணவம்
சுயநலம் தலையில் கிரீடம் கொண்டது
களவுபொய் காமம் மிகுந்து போனது
உயிரி ரக்கம் கருணை மாண்டது
தனக்காய் வாழும் நிலையே ஆனது
வீடுகள் தங்கும் விடுதியாய் மாறின
இத்தகை சூழலில் வாழ்கிறேன்
பத்திரமாய் என்னை காத்திடு தாயே 32

தாயும்நீ தந்தையும்நீ உடன்பிறப் பும்நீயே
சூழ்ந்திரும் சுற்றமும்நீ  வாழ்ந்திடும் - வாழ்வும்நீ
தேடிடும் செல்வமும்நீ பெற்றிடும் கல்வியும்நீ
யாவுமாய் நின்றவள் நீ 33

நீயே எனது வழிகாட்டி நீயே பகைவிரட்டி
நீயே எனது  பெருஞ்செல்வம் நீயே அருமருந்து
நீயே எனது  குடிகாப்பான் நீயே நெறிபடுத்தி
நீயே எனது  பயம்போக்கி நீயே குலவிளக்கே 34

விளக்கொளி யாயி ருந்து நல்வழி காட்டி டம்மா
நளினியே வரட்சி நீக்கி நீர்நிலை நிறைத்தி டம்மா
விளைபொருள் காந்து நல்ல விளைச்சலை தந்தி டம்மா
களித்திடும் இல்லம் தந்து கனிவுடன் காத்தி டம்மா 35

அம்மாநான் வேண்டுதல் கேட்டருள் புரியவேண்டும்
சும்மா இல்லாமல் உழைத்திட வேண்டும்
அன்னையாய் நீயிருந்து காத்திட வேண்டும்
நோய்நொடி அண்டாமல் செய்திட வேண்டும்
காய்கின்ற வெப்பம் தனிந்திட வேண்டும்
மாதமும் வான்மழை பெய்ய வேண்டும்
கல்வியை சிறப்புடன் கற்றிட வேண்டும்
மக்களெலாம் மகிழ்வுடன் வாழ வேண்டும்
கொக்கொடு நாரை பறந்திட வேண்டும்
வயல்கள் பயிரை விளைத்திட வேண்டும்
காற்றில் குளிர்ச்சி பரவிட வேண்டும்
ஏரிகுள மெல்லாம் நிறைந்திட வேண்டும் 
வறுமை இலாது செய்திட வேண்டும்
நாட்டின் நரம்புகளில் தண்ணீர் ஓடவேண்டும்
உன்பெருமை உலகிற்கு நான்சொல்ல வேண்டும் 36

வேண்டிய தெல்லாம் நடக்கஅம்மன் தாள்பணிவோம்
வேல்அளகு காவடி என்பன - வேண்டல்
நிறைவேற்றி நாளும் தொழுதிடுவோம் எண்ணிய
தெல்லாம் தருவாள் இவள் 37

இன்முகத் தோற்றமும் புன்மு றுவலும் உடையவளே
பன்மலர் மாலையும் ஆரமும் தோடும் அணிந்தவளே
பின்கரம் சங்கொடு சக்கரம் தாங்கிய பொன்மகளே
மின்னும் கிரீடமும் கோல விழிகளும் கொண்டவளே 38

கொண்டவன் துணையென வாழ்த்திடும் மங்கையர் காத்தி டம்மா
வேண்டிய வரங்களால் நற்செயல் செய்திட வைத்தி டம்மா
மண்ணினை நம்பியே வாழ்ந்திடும் ஏழையை ஏற்றி டம்மா
எண்ணிய செயல்களை செய்திடும் மனதினை கொடுத்தி டம்மா 39

தன்னுடைய இல்லத் துணையாக வந்தவனோடு

அம்மா என்றதும் ஓடி வந்து 
பக்கம் நின்றிடு வாய்நான் வேண்டும்
வரங்கள் தந்து எனக்கு உறுதுணை 
புரிந்திடுவாய் உன்னை யன்றி எனக்கு
வேறு துணையும் இல்லை யம்மா
தாயும் தந்தையு மாகி காத்திடம்மா
தேடிடும் செல்வமாய்  நீயி ருப்பாய்
சொல்லும் பொருளும் நீயே ஆவாய்
பல்லோர் புகழ ஏற்றிடுவாய்
என்னை ஆளும் வெண்ணி உமையே 40

என்னை ஆளுகின்ற வெண்ணியம்மா, நான் அம்மா என்று அழைத்ததும் ஓடிவந்து என் பக்கம் நின்றிட வேண்டும். நான் வேண்டுகின்ற வரங்களைத் தந்து எனக்கு அளித்து உற்ற துணையாக இருந்து காக்க வேண்டும். உன்னைத் தவிர வேறு துணை எனக்கு இல்லை. எனவே எனக்குத் தாயாகவும் தந்தையாகவும் இருந்து காத்திடவேண்டும். என் நா உதிக்கும் சொல்லும் நீயே அதன் பொருளும் நீயே. பலரும் புகழ்ந்திட ஏற்றம் தந்து காப்பாய்.








 



























கௌமாரி என்பவர் கௌமாரனாகிய முருகனின் அம்சமாவார். இவர் நான்கு கரங்களையும், பின் இரு கைகளில் வஜ்ரம் மற்றும் சக்தி ஆயுதங்களையும் தரித்து காணப்படுகிறார். மயில் பறவையினை வாகனமாக கொண்டவர். சேவல்கொடியினை கைகளில் தாங்கியிருப்பவர்














அரியுடை ஐந்து படைகள் சிவனது சூலமொடு
பிரமனின் கரத்தில் மேவும் மலரும் இனிதுதாங்கி
அருள்வழங்கும் கோலத் துடனே இருக்கும் அழகுகண்டு
சிரம்தாழ்த்தி கைக்கூப்பி சாமுண்டி அன்னை வணங்குவோமே 02

இரட்டணையில் வெண்ணியம்மனாய்க் காட்சி தரும் சாமுண்டீஸ்வரி, திருமாலின் கரங்களில் உள்ள சங்கு, சக்கரம், வில், கதை, வாளும் சிவனின் கரத்தில் உள்ள சூலாயுதமும் பிரம்மனின் கரத்தில் உள்ள தாமரை மலரும் கரங்களில் கொண்டு, அருள் வழங்குகின்ற அழகிய தோற்றத்தில் அமைந்துள்ளாள் அவளை வணங்குவோமாக.


அம்பிகையின் தோளில் இருந்து உருவானவள் மகேஸ்வரி
வெண்பொங்கல், சுண்டல், பழம், எலுமிச்சை சாதம், தயிர் சாதம், மொச்சை, பருப்பு வடை







எண்சீர் ஆசிரியவிருத்தம் (பிரம்மஹி)


அயனின் மனைவி வேத மாதா
பொய்கை மலர்ந்து தாமரை மேவி
சிரங்கள் ஐந்தும் சிறப்பாய்க் கொண்டு
கரங்கள் பத்தில் சங்கொடு சக்கரம்
கசைகதை கபாலம் தாமரை ஏடு
அங்குசம் தாங்கி காட்சி கொடுப்பாள் 04

பிரம்மனின் மனைவியாகவும் வேதங்களின் தாயகவும் விளங்கும் காயத்திரி தேவி மலர்கள் நிறைந்த நீர்நிலையான பொய்கையில் மலர்ந்து தாமரை மலரில் அமர்ந்து, ஐந்து முகங்களையும் பத்துத் திருக்கரங்களும், அத்திருக்கரங்களில் சங்கு, சக்கரம், சாட்டை, அங்குசம், கபாலம், கதை, தாமரை ஏடு முதலானவற்றைத் தாங்கி காட்சி தருவாள்.



காயாகி கனிகின்ற பூவைப் போல
          அறிவாலே வென்றுவாழ்வில் உயர வேண்டும்
தீயாக எனைசூழும் துன்பம் எல்லாம்
          பனியாக விலக்கிடவே வேண்டும் அம்மா.