Sunday, November 20, 2022

பாவினச் செய்யுட்கோவை - ஓரொலி வெண்டுறை

ஓரொலி வெண்டுறை

மூன்றடி முதல் ஐந்தடி வரை வந்து ஈற்றில் ஓரடியும் ஈரடியும் ஒரு சீரும் இருசீரும் குறைந்து ஓரிசையில் வருவது ஓரொலி வெண்டுறையாகும். இது மூன்றடியானும் நான்கடியானும் வந்து, ஈற்றடி இரண்டும் இரண்டு சீர் குறைந்தும், ஐந்தடியாய் ஈற்றடி ஒன்று ஒருசீர் குறைந்தும் வரும்.

தண்ணீர் தேடி பூமி எங்கும் மண்ணைத் தோண்டி இல்லா போது
தண்ணீர்க் காக ஏங்கி ஏங்கி கண்ணீர் சிந்தி வாடும் முன்னே
மண்மேல் பச்சை செய்.
(பா. 24)

இது நேரொன்றிய ஆசிரியத்தளையால் வந்த ஓரொலி வெண்டுறை.

மணம்தரும் மலர்களை அனைவரும் விரும்புவர் புரிந்துகொள்
பணத்தினால் பெருமைகள் 
வருவது இலையடா பணிவுகொள்
அணைக்கிற கரங்களே உறவினை வளர்த்திடும்
அணைத்திட நினைத்திடு உறவினை வளர்த்திடு.
(பா. 25)

இது நிரையொன்றிய ஆசிரியத்தளையால் வந்த ஓரொலி வெண்டுறை.

ஒருவர் உணர்வில் விருப்பம் பிறக்கும்
இருவர் உணர்வில் இணையும் மனது
இருவர் விழிகள் இணைந்து நடந்தால்
இரும்பு இலவே மலையும் பொடியாம்
புரிந்து நடப்பார் சிலர்.
(பா. 26)

இது இயற்சீர் வெண்டளையால் வந்த ஓரொலி வெண்டுறை.

உன்மடியில் நான்சாய்ந்து உன்மொழியைக் 
          கேட்கவேண்டும் அந்திபகல் நேரமெல்லாம்
உன்னைதொட்டு ஆசைமொழி பேசவேண்டும் சொந்தமெல்லாம்
என்னைவிட்டுப் போகவேண்டும் சொந்தமென நீவேண்டும்.
(பா. 27)

இது வெண்சீர் வெண்டளையால் வந்த ஓரொலி வெண்டுறை.

பிடிவாத குணமிருந்தால் குடும்பத்தில் அமைதிபோகும் மனதிலும்தான்
அடம்பிடிக்கும் குழந்தைபோல பெரியவர்கள் இருப்பதனால் வருவதிது
அடக்கிவைக்கும் குணமிருந்தால் உடல்நலமும் மனநலமும் தொலைந்துபோகும்
குடும்பத்தில் இருப்பவர்க்குக் குடும்பந்தான் பெரியசொத்து இழக்கலாமா?
விட்டுகொடு தொலைந்துபோன உறவுகளும் திரும்பவரும்
. பா. 28

இது கலித்தளையால் வந்த ஓரொலி வெண்டுறை.

அழவைத்துபார்ப் பதெல்லாம்திமிர் பிடித்தபெண்குணம்
          அமைதிகாப்பதால் அடங்கிபோகிறார் எனப்பொருள்இலை
அழகாகதம் குடும்பத்தினை நடத்திசெல்கிறார் 
எனகு
மே
அழவைக்கவும் அணைத்துகாக்கவும் தெரிந்ததேவிவே கஆணின்குணம். (பா. 29)

இது ஒன்றிய வஞ்சித்தளையால் வந்த ஓரொலி வெண்டுறை.

பூமிவிட்டுநாம் தாவிசெல்கையில் வானமேனியில் 
          வர்ணமில்லையே! பேதமில்லையே! எல்லையில்லையே!
நாம்இறக்கையில் கொண்டுசெல்வது வானைப்போலவே! ஒன்றுமில்லையே!
பூமிதன்னிலும் வானைபோலநாம் வாழ்ந்துபார்க்கலாம் வாதோழனே!
 (பா.30)

இது ஒன்றாத வஞ்சித்தளையால் வந்த ஓரொலி வெண்டுறை.