Friday, July 28, 2023

யாகசேனி பெருமகிழ்ச்சி மாலை

நெருப்பிலே சுட்ட தங்கம் பொலிவுடன் திகழ்தல் போல
உருகிடும் நெய்யும் வித்தும் எரிபொருள் ஆக்கி செய்த
துருபதன் யாகம் தன்னில் திறம்பட வெளியே வந்த
கருநிற மேனி கொண்ட எழிலுறும் தேவ நங்கை. 01

யாசர், உபயாசரைக் கொண்டு பிள்ளை வரம் வேண்டி துருபதன், நெய்யையும் விதைகளையும் கொண்டு எரிபொருளாக்கி செய்த யாகத்தீயில் இருந்து, நெருப்பில் சுட்டத் தங்கம் சுடர்விட்டு மின்னுவதுபோல, கருத்த நிறம் மேனி அழகுடன்  தோன்றினாள் தேவ உலக நங்கை பாஞ்சாலி.

கொக்கொடு நாரை உள்ளான் கெளுத்தியும் விராலும் உண்ணும்
திக்கெலாம் அலைகள் மோதி தன்உரு தொலைந்தே போகும்
முகிலினம் தந்த பொய்கை ஆடிய பெண்ணாய் இங்கு
அக்கினி எழுந்து சாந்த முகத்துடன் காட்சி தந்தாள். 02

கொக்கு, நாரை, உள்ளான் ஆகிய பறவைகள் கெளுத்தி விரால் முதலிய மீன்களை உண்ணும். ஒவ்வொரு திசைகளிலும் அலைகள் வீசி கரையில் மோதி காணாமல் போகும். மேகம் தந்த மழைநீரைத் தாங்கி நிற்கும் பொய்கையில் நீராடி வெளியே வரும் பெண்ணாய், அமைதியான முகத்தோடு அக்கினியில் இருந்து வெளியே வந்தாள். 

சுருண்டிரும் நெடிய கூந்தல் தாமரை மலர்போல் கண்கள்
திரண்டிரும் நகில்க ளோடு சிறுத்திரும் இடையும் மெல்ல 
பரவிடும் மலரின் வாசம் கவர்ந்திடும் ஒளியாய்த்  தேகம்
திருமகள் இவள்தான் என்ற அழகுடன் தோற்றம் கொண்டாள் 03

கிருட்டிணை, சுருண்ட நெடிய கூந்தலையும் தாமரை மலர் போன்ற கண்களையும் பருத்துத் திரண்ட மார்பகங்களையும் சிறுத்த இடையையும் காற்றில் மெல்லப் பரவிடும் நீலோத்பலம் மலரின் வாசத்தினையும் அனைவரையும் தன்வசப்படுத்தும் உடல் அழகினையும் பெற்று, திருமகளைப் போன்ற அழகுடன் தோன்றியாள்.

தூண்டிலில் சிக்கு கின்ற  சிற்றிரை மீன்கள் போல
காண்பவர் கண்கள் எல்லாம் கண்டதை ஒன்றே காணும்
வேண்டிய அழகு எல்லாம் திறம்பட பெற்றி ருந்தாள்
நாணமும் மேலெ ழும்ப நலினமாய் இருந்தாள் சேனி. 04

கனகக

பாண்டுவின் மூன்றாம் மைந்தன் பர்க்குணன் மணமு டிக்க
வேண்டுதல் மூலம் பெற்ற வேல்விழி நங்கை நல்லாள்
ஓணப்பிரான் இனிய நண்பன் கொழுநனாய் மனதில் எண்ணி
காண்பொருள் அவனே எல்லாம் நினைப்புடன் வளர்ந்து வந்தாள் 05

திருமணப் பருவம் கண்டு துருபதன் சேதி சொல்ல
தரணியில் உள்ள வேந்தர் சுயவரம் கலந்து கொண்டு
இருக்கையில் அமர்ந்தி ருக்க நினைப்பிலே உள்ள கள்வன்
இருப்பிடம் தேடித் தேடி கண்களும் பூத்து நின்றாள் 06

சுயம்வரம் வந்தோர்க் கெல்லாம் சகோதரன் விதிகள் கூற
பயத்தினில் பலவேந் தர்கள் பதுங்கியே பின்சென் றார்கள்
பயமிலா சிலவேந் தர்கள் வில்லினை எடுத்தும் தொட்டும்
மயங்கிகீழ் வீழ்ந்தும் தோற்றார் நாயகன் தேடி நின்றாள் 07
 
அந்தன வேட கொண்ட ஆண்மகன் ஒருவன் வந்து
சிந்தையில் உதிக்கும் வண்ணம் அவையினர் நோக்கி கேளீர்
அந்தனர் எடுத்து வில்லை வளைத்திட லாமே என்றான்
வந்தவர் தோற்ற பின்னர் விதியினில் தளர்வு செய்தார் 08

அந்தன னாக வந்து வில்லினை மெல்ல தாங்கி
மந்திர செயல்கள் போல நாணினை வில்லில் ஏற்றி
அந்தரத் திலுள்ள மீனை நொடியினில் வீத்தி விட்டான்
வந்தவர் திகைத்தி ருக்க வெற்றியைக் கையில் கொண்டான் 09

வென்றவர்  யார்தான் என்று அறிந்திடா நிலையில் சேனி
வென்றிட ஒருத்தர் மட்டும் தானென அறிந்து கொண்டு
புன்னகை ததும்ப வந்து நாணமும் மேலெ ழும்ப
தன்கையில் இருந்த மாலை அந்தனன் கழுத்தில் இட்டாள் 10

 







காதோரம் கம்மல் போட்டு




வேண்டியே







துருபதன் வெல்வ தற்காய் எரிதழல் உதித்தாள் இல்லை
ஒருத்தியாய் தோற்றம் கொண்ட நால்வரில் இல்லா ளாகி
மருஉரு கொண்டு வந்து ஐவரை மணக்கத் தானே
பொருப்புடன் திரௌபதி பிறப்பு சொல்லும் ரகசியம் இதுவே யாகும்
 
திரௌபதி, துருபதன் நடத்திய யாகத்தில் தோன்றியது அவனை வெற்றி பெறச் செய்ய அல்ல. இப்பிறவியில் 


பாண்டவர்கள் அனைவரும் முற்பிறவியில் தேவர்கள். பாஞ்சாலி ஒருத்தி அல்ல நான்கு தேவர்களின் மனைவியின் சக்தியாவாள்.

எமனின் மனைவி சியாமளா, வாயுவின் மனைவி பாரதி, இந்திரனின் மனைவி சசி, இரண்டு அசுவினி குமாரர்களின் மனைவி உஷா ஆகியோரின் சக்தி ஆவாள்.


 பெண்களுடைய அழகு, குணம், ஆக்கம், சிறப்பு முதலியவற்றைக் கூறுவது பெருமகிழ்ச்சி மாலை

https://mrpuyal.com/spiritual-aanmeegam/who-is-draupadi-what-is-her-born-reason/