Thursday, August 3, 2023

வளர்தமிழ்

அறுசீர் விருத்தம்

வாய்பாடு: காய் காய் காய் காய் காய் காய்

தமிழென்று தோன்றியது தெரியாது
தமிழொன்றே உலகத்தின் அன்னைமொழி
தமிழாலே பலமொழிகள் உருவாச்சி
தமிழ்தானே நமக்கெல்லாம் உயிர்மூச்சு
தமிழர்களும் தமிழ்மொழியும் லெமூரியாவில்
தோன்றிபல இடங்களுக்கு பிரிந்தாச்சு.
தமிழர்தாம் உலகெங்கும் வசிப்பவர்கள்
தமிழாகும் உலகத்தின் ஆட்சிமொழி.

உயிரென்றும் மெய்என்றும் பகுத்தெடுத்து
முதலென்றும் சார்பென்றும் வகைசெய்தோம்
உயிரெழுத்தைக் கடன்வாங்கி ஆங்கிலமும்
உலகமொழி ஆனதையா தமிழாலே
பயிர்க்கிளைத்து பிரிவதுபோல் தென்மொழிகள்
பிரிந்துபல மொழிகளென உருவாச்சி
உயிர்கொடுத்து பலமொழியின் தாயாகி
வாழ்ந்தாலும் நம்மொழிதான் கன்னித்தமிழ்.

எட்டுத்தொகை பத்துபாட்டெ னசங்கநூல்கள்
சங்ககால தமிழர்களின் வாழ்வுசொல்லும்
கொட்டிசேய்வ ளர்ப்பதுபோல் நீதிநூல்கள்
மானுடரை நல்வழியில் இட்டுசெல்லும்
கட்டுபட்டு தெய்வவழி செல்வதற்கு
பக்திசொல்லும் இலக்கியங்கள் தமிழிலுண்டு
தொட்டுஉளம் கவர்ந்திழுக்கும் காப்பியங்கள்
புராணஞ்சிறு இலக்கியங்கள் கொண்டமொழி.

தமிழென்றோ செம்மொழியாய் ஆனதைய்யா
இன்றுதானே மதிப்புதந்து ஏற்கலாச்சு
தமிழ்நாட்டில் இருப்பவர்கள் எல்லோரும்
தமிழ்பேசி தமிழ்எழுதி மொழிகாப்போம்.
தமிழ்நாடு தமிழ்மக்கள் என்றேண்ணி
தமிழ்நாட்டில் மட்டும்நீ இருந்திடாதே
தமிழ்பேசும் திசையெல்லாம் நம்மவர்கள்
வாழ்கின்றார் ஒருபோதும் மறந்திடாதே.

என்னவளம் இல்லைஇந்த திருநாட்டில்
என்பதுபோல் தமிழில்ப லசெல்வமுண்டு
மனந்தொட்டுக் கற்றுபல பண்டிதர்கள்
தமிழாலே வளர்ந்துவிண்ணைத் தொட்டதுண்டு
மனங்கொண்டு தமிழ்மொழியைக் கற்பதனால்
தமிழ்மொழியும் தானாக வளர்ந்திடுமே.
மனம்தோடு சொல் செயலென தமிழாகி
தரணியிலே தமிழ்தழைக்கச் செய்திடுவோம்.