Wednesday, August 9, 2023

நல்வழி வருக்கமாலை

மண்டல ஆசிரியப்பா

உயிர் வரிசை

ன்பெனும் குடிலமைத்து உறவுகள் காத்திடுவோம்
சைகள் களையெடுத்து மகிழ்வுடன் வாழ்ந்திடுவோம்
ன்பமாய் வாழ்வதற்கு இருப்பதே போதுமென்போம்
கைகள் பலசெய்து மன்புகழ் பெற்றிடுவோம்
ண்மையை ஒருபோதும் மறவா திருந்திடுவோம்
ருக்குப் புகழ்சேர்த்து அடையாளம் காட்டிடுவோம்
ளிமையாய் வாழ்வமைத்து ஏற்றங்கள் கண்டிடுவோம்
ர்த்தொழில் பலநடத்தி நாட்டினை உயர்த்திடுவோம்
விரல் ஒற்றுமையாய் யாவரும் கூடிவாழ்வோம்
ழுக்கமாய் கல்விகற்று அறிவினைப் பெருக்கிடுவோம்
ய்விலா துழைத்துழைத்து வறுமைகள் ஓட்டிடுவோம்
வையார் சொல்வழியில் வாழ்வினை நடத்திடுவோம்


ககர வரிசை

ற்றதும் பெற்றதும் உன்னுடை அறிவாகும்
காரணம் சொல்லியே விலகிநீ இருக்காதே
கிடைத்ததை கொண்டுநீ வாழ்க்கையை நடத்திடு
கீழென மேலென பிரிவினை பாராதே
குணமுள மனிதரை கடவுளாய் மதித்திடு 
கூகையும் வெல்லமே வாய்ப்புகள் கிடைக்கியில்
கெடுதலைத் தருகிற செயலினை மறந்திடு
கேடுகள் செய்திடும் பொருளினைக் தவிர்த்திடு
கையிலே இருப்பதைக் கவணமாய் காத்திடு
கொடுக்கிற மனதினை தினம்தினம் வளர்த்திடு
கோடிகள் இருப்பினும் பணிவுடன் செயல்படு
கௌரியன் போலநீ தமிழினை வளர்த்திடு

கௌரியன் - பாண்டியன்

சகர வரிசை

கலமும் கிடைத்திடும் பயம்கொள வேண்டாம்
சாதனை படைத்திட மறந்திட வேண்டாம்
சிகரமுன் காலடி சோர்ந்திட வேண்டாம்
சீது பொருட்களைக் கைத்தொட வேண்டாம்
சுரண்டி வாழ்வை நடத்திட வேண்டாம்
சூழ்ச்சி செய்து கெடுத்திட வேண்டாம்
செய்யும் தொழிலை ஒதுக்கிட வேண்டாம்
சேரிடம் அறியா திருந்திட வேண்டாம்
சைத்திரிய மின்றி செயல்பட வேண்டாம்
சொகுசில் மூழ்கி இருந்திட வேண்டாம்
சோகம் வரும்செயல் செய்திட வேண்டாம்
சௌமிய தாதாய் செயல்பட வேண்டாம்

சீது -  மது, சைத்திரியம் - தெளிவு, சௌமியதாது - கோழை                                                                                                                                                                                                                                                                                                                                                

தகர வரிசை

கப்பன் உழைப்பைப் போற்றிட வேண்டும்
தாயின் அன்பை மதித்திட வேண்டும்
திறமை வெளியில் காட்டிட வேண்டும்
தீயவை நீங்கி வாழ்ந்திட வேண்டும்
துணையாய்ப் பலரைக் கொண்டிட வேண்டும்
தூற்றா தெவரையும் போற்றிட வேண்டும்
தெளிந்த அறிவைப் பெற்றிட வேண்டும்
தேவளம் சென்று வழிபட வேண்டும்
தைநம் மாக பழகிட வேண்டும்
தொன்மை மறவா திருந்திட வேண்டும்
தோல்வி கண்டு தெளிந்திட வேண்டும்
தௌலம் போல செயல்பட வேண்டும்

தேவளம் - கோவில், தைநம் - எளிமை, தௌலம் - துலாக்கோல்

நகர வரிசை

ல்லது செய்யப் பழகிட வேண்டும்
நாளும் உன்னை வளர்த்திட வேண்டும்
நின்புகழ்ப் பரவச் செய்திட வேண்டும்
நீரின் மேன்மை உணர்ந்திட வேண்டும்
நுட்பம் அறிந்து செயல்பட வேண்டும்
நூல்பல கற்று உயர்ந்திட வேண்டும்
நெருப்பு போல இருந்திட வேண்டும்
நேர்மை யாக வாழ்ந்திட வேண்டும்
நைபுணன் வழியில் சென்றிட வேண்டும்
நொதுமல ரோடு இணங்கிட வேண்டும்
நோய்நொடி இன்றி வாழ்த்திட வேண்டும்
நௌவி துடிப்பைப் பெற்றிட வேண்டும்

நெவல் - இரக்கம், நைபுணன் - நிபுணன்,  நொதுமலர் -  அயலார் (அக்கம் பக்கத்தார்), நௌவி - மான்

பகர வரிசை

ண்புளம் கொண்டவர் பாதகம் செய்யார்
பாசம் கொண்டவர் பிரிவினை பாரார்
பிழைக்கும் வழிபல அறிந்தவர் வெல்வார்
பீடு வேண்டுவோர் நற்செயல் செய்வர்
புகழும் சொற்கு பெரியோர் மயங்கார்
பூவையர் வழியில்  புரிந்தோர் நடப்பர்
பெண்களை மதிப்பவர் புகழுடன் வாழ்வர்
பேச்சினைக் குறைத்தோர் செயல்பல புரிவர்
பைங்கூழ் வளர்ப்போர் பசிப்பினி அறுப்போர்
பொய்களவு நீக்கி நல்லோர் மிளிர்வர் 
போகம் எண்ணுவோர் நல்வழி செல்வர்
பௌதீக வழியில் நடப்பார் பெரியோர்

பீடு -  புகழ், போகம் - இன்பம், பௌதீகம் - உலகம்

மகர வரிசை

ரங்கள் நட்டு வளர்த்திட வேண்டும் 
மானும் மயிலும் உலவிட வேண்டும்
மிருக இனங்கள் சுதந்திர மாக
மீண்டும் வாழ செய்திட வேண்டும்
முன்னோர் உணவை உண்டிட வேண்டும்
மூத்தோர் வழியில் நடந்திட வேண்டும்
மெய்யாய் பழகி சிரித்திட வேண்டும்
மேனி குளிர செய்திட வேண்டும்
மையல் நீங்கக் கற்றிட வேண்டும்
மொழியை காத்து வளர்த்திட வேண்டும்
மோடு வந்திட உழைத்திட வேண்டும்
மௌனம் காத்து செயல்பட வேண்டும்

மையல் -  மயக்கம், மோடு -  உயர்வு

வகர வரிசை

றுமை கண்டு பயம்கொள் ளாதே.
வாச மலர்போல் நேசம் கொள்க
விசுவாசம் கொண்டு உறவுடன் பழகு
வீன்சொல் இன்றி நல்லதை பேசு
வெற்றி தோல்வி இயல்பென் றறிவாய் 
வேகம் இன்றி விவேகம் கொள்வாய்
வைகறை எழுந்து பணிகளைச் செய்வாய்
வௌவல் இன்றி உழைத்துப் பெறுவாய்.

வௌவல் - திருடல், கொள்ளையடித்தல்