நிலையினை அறிவீர் உயிரினம் கண்டு
நாளைய உணவு இதுவென ஒதுக்கி
வேளைகள் பிரித்து உண்பது இல்லை
கிடைத்ததை உண்பது எவ்வுயி ராயினும்
படைத்ததை உண்ணல் மானிடர் இயல்பே.
உண்ணும் பொருளை ஆக்கும் அறிவை
மண்ணில் மனிதர் மட்டும் பெற்றனர்.
காட்டிலும் மேட்டிலும் மரத்திலும் குகையிலும்
வேட்டை யாடியே உறங்கிக் கிடந்தவன்;
காயும் கனியும் பூவும் தழையும்
தேனும் கிழங்கும் சாரும் நீரும்
வேண்டும் பொழுது உண்டு வாழந்தவன்;
நாளைய உணவின் தேவை அறிந்து
இல்லம் அமைத்து இருக்கை அமைத்து
பள்ளம் மேடு பார்த்துப் பழகி
கூரிய கல்லால் ஆயுதம் செய்தும்
தோலால் தழையால் ஆடைகள் செய்தும்
குழுக்க ளாக ஒன்றாய் இணைந்தும்
காட்டைத் திருத்தி கழனிகள் செய்தும்
வேட்டை விலங்கை உழுதிட பழக்கியும்
நாவின் சுவைக்கு முதன்மை கொடுத்து
நானிலம் பகுத்து