பின்னை மொழிக்கெல்லாம் தாயாக நின்றமொழி
தென்னன் மகளாக வளர்த்திட்ட பிள்ளைமொழி
தென்றல் சுகமாக காதினிலே பாயுமொழி
சங்க இலக்கியமாய் வாழ்வைச் சொல்லும்மொழி
சிங்க வேந்தருக்கும் அறிவை ஊட்டும்மொழி
பொங்கும் காப்பியத்தில் மரபு உரைக்கும்மொழி
திங்கள் ஒளியாக பக்தி பரப்பும்மொழி
பள்ளு குறமென்றும் பிள்ளைத் தமிழென்றும்
கிள்ளை மொழியாக சிறந்தோர் சிறப்புரைக்கும்
விளக்கும் இலக்கணங்கள் பலவும் கொண்டமொழி
உள்ளம் கவர்ந்திழுக்கும் எங்கள் தமிழ்மொழி