அனைத்துலகப்
பொங்குதமிழ்ச் சங்கம் அன்பு இனைய வனொலி மற்றும் தேனருவி வானொலி இணைந்து வழங்கும் தீபாவளி
சிறப்புக் கவியரங்கம்
தமிழ் வாழ்த்து
அன்னைத் தந்தமொழி அமுதூட்ட வந்தமொழி
பின்னை மொழிக்கெல்லாம் தாயாக
நின்றமொழி
தென்னன் மகளாக வளர்த்திட்ட பிள்ளைமொழி
தென்றல் சுகமாக காதினிலே பாயுமொழி
எம்
தமிழ் மொழியை முதற்கண் வணங்கி.....
தலைமைக் கவி
அனைத்துலகப்
பொங்குதமிழ்ச் சங்கம் – தமிழ்
அமைப்புகளில்
முன்னணியில் தங்கும்
அத்தகைய
சிறப்பு மிக்கத் தலைவர் கவி நடுவர் மதிப்புறுமுனைவர் பாவலர் சுந்தரபழனியப்பன் ஐயா அவர்களுக்கும்
என் வணக்கம்.
இந்தத்
தீபாவளிச் சிறப்புக் கவியரங்கைக் கேட்டுக்கொண்டிருக்கும் அன்பு இணைய வானொலி மற்றும்
தேனருவி இணைய வானொலி நேயர்களுக்கும் என் வணக்கம். மற்றும் தீபாவளி வாழ்த்துக்கள்
வராகஅ வதாரம் தன்னில் பூமியை மீட்டெ டுக்க
பராக்கிர மகாட்டுப் பன்றி உருவமாய்த் திருமால் மாறி
அரக்கனை அழித்து தன்கூர் கொம்பினால் பூமி மீட்டார்
இருவரின் புதல்வ னாக நரகனும் அவத ரித்தான்,
அசுரவ தத்தின் போது பிறந்ததன் கார ணத்தால்
அசுரசு பாவம் வந்து இவனுடன் ஒட்ட லாட்சு
அச்சுதன் மகனென் றாலும் அரக்கரின் குணங்கள் பெற்று
பசுமுதல் தேவர் மக்கள் யாவரும் வதைக்க லானான்.
தரணியை மட்டு மன்றி வானையும் ஆள எண்ணி
இருந்திடும் நேரம் கண்டு அசுரனின் அமைச்சன் சொன்னான்
பரமனின் அருளால் வானோர் இறந்திடா வரத்தைப் பெற்றார்
வரத்தினை நீயும் பெற்று அவருடன் போர்செய் என்றான்.
பிரம்மனை மனதுள் எண்ணி கடுந்தவம் செய்து வந்தான்
பிரம்மனும் தவத்தை மெச்சி அவனது முன்னர்த் தோன்றி
வரத்தினை கேட்பாய் என்றார் இருவிழிப் பருகக் கண்டு
பிரம்மனே தனக்குச் சாகா வரத்தினைக் கொடுப்பாய் என்றான்.
பிறந்தவர் ஒருநாள் இங்கே இறந்திடல் வேண்டும் தானே
மற்றொரு வரத்தைக் கேட்டு பெற்றிடு என்றார் தாயால்
இறந்திட வேண்டும் என்ற வரத்தினைப் பெற்று வந்தான்.
பிறப்பினைத் தந்த அன்னை கொன்றிடு வாளோ என்றே.
வரத்தினைப் பெற்ற பின்னே கொடுமைகள் எல்லைத் தாண்ட
பரமனை நோக்கிப் பல்லோர்புகாரினை அளிக்க லானார்
நரகனை அழிப்ப தற்குப் புறப்பட சத்ய பாமா
பரமனே துணையாய் நானும் உன்னுடன் வருவேன் என்றாள்.
நரகனின் படைகள் எல்லாம் அச்சுதன் தும்சம் செய்து
நரகனை அழிப்ப தற்கு அம்பினை எய்ய பெற்ற
வரத்தினால் நரகா சூரன் துன்பமும் அடைந்தா னில்லை
பரமனும் நிலைய றிந்து மயங்கினாற் போல்வி ழுந்தார்.
நரகனால் தானே இந்த நிலையினை அடைந்தார் கண்ணன்
விரைந்திடும் அம்பை எய்து உன்னைநான் மாய்ப்பேன் என்று
விரைந்திடும் அம்பைக் கொண்டு அசுரனை மாய்த்தாள் சத்யா
புரிந்தனன் இறக்கும் நேரம் கொன்றது அன்னை என்றே.
தன்மகன் என்ற போதும் மக்களை வதைத்த தாலே
கொன்றது சரிதான் என்று தேறினாள் சத்ய பாமா
தன்மகன் கொல்லப் பட்ட தினத்திலே தீபம் ஏற்றி
அனைவரும் மகிழ்ச்சி யாக இருந்திட வேண்டு மென்றாள்.