Thursday, April 25, 2024

குடும்ப முன்னேற்றத்திற்குப் பெரிதும் காரணமாக இருப்பவர்கள் ஆண்களே! பெண்களே!

கடலூர் மாவட்டம் பண்ணுருட்டி வட்டம் பூண்டி குச்சிப்பாளையத்தில் அமைந்தள்ள அருள்மிகு ஸ்ரீ சிந்தாலம்மன் ஆலையச் சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு நடத்தப்படும்

குடும்ப முன்னேற்றத்திற்குப் பெரிதும் காரணமாக இருப்பவர்கள் ஆண்களே பெண்களே என்ற சிறப்புப் பட்டிமன்றத்தின் நடுவராக வீற்றிருக்கும் பண்ணுருட்டி செந்தமிழ்ச் சங்கம் மற்றும் அனைத்துலகப் பொங்குதமிழ்ச் சங்கம் ஆகியவற்றின் தலைவர் மதிப்புறு முனைவர் பாவலர் சுந்தரபழனியப்பன் ஐயா அவர்களுக்கும்

 

என் கருத்துக்கு வலுசேர்த்துக் கொண்டிருக்கும் எங்க  அணியினருக்கும்

எங்கள் கருத்துக்கு எதிராக வாதாட வந்திருக்கும் எதிர் அணியினருக்கும்

இந்தப் பட்டிமன்ற நிகழ்வைக் கேட்டு, ரசித்து, உற்சாகமூட்டக் காத்துக் கொண்டிருக்கும் என் அன்பு உறவுகளுக்கும்

என் மாலை வணக்கத்தை முதற்கண் தெரிவித்துக் கொள்கிறேன்.

நடுவர் அவர்களே

தலைப்பை நன்றாக கவனியுங்கள்.

குடும்ப முன்னேற்றத்திற்குப் பெரிதும் காரணமாக இருப்பவர்கள் யார்?

பெரிதும் என்பது மிகுதியாக என்ற அர்த்தத்தைக் கொண்டது. அதாவது குடும்ப வளர்ச்சிக்கு 90 சதவீதம் காரணமாக இருப்பவர்கள் யார் என்பதை முடிவு செய்வதற்காகத்தான் இந்தப் பட்டிமன்றம்.

ஆண்களுக்கும் பெண்களுக்குமான வித்தியாசங்கள்

ஒரு விஷயத்தை ஆண்கள் பார்க்கும் பார்வைக்கும் பெண்கள் பார்க்கும் பார்வைக்கும் வித்தியாசம் உண்டு.

ஒன்னுமில்ல. நானும் என் மனைவியும் பைக்குல போய்கிட்டிருந்தோம். அப்போ,

ஓர் ஆணும் பெண்ணும்  பைக்குல போய்கிட்டிருந்தாங்க. என் மனைவி சொன்னாங்க. ஏங்க அங்க பாருங்களேன் அப்படின்னாங்க

நான் பார்த்துட்டு ஆமாம் ஏதோ புதுசா கல்யாணம் ஆனவங்க போராங்க போலிருக்கு அப்படின்னேன்

அப்போ என் மனைவி சொன்னாங்க அதுக்காக இப்படியா ஒராசிகிட்டு போரது

ஆண் எல்லவற்றையும் நல்ல விதமாகப் பார்க்கக் கூடியவன்.

பெண் மாத்தி யோசிக்கக் கூடியவளாக இருக்கிறாள்.

 

குடும்ப முன்னேற்றம் என்பது

1.      ஒற்றுமையை அடிப்படையாகக் கொண்டது.

2.      விட்டுக் கொடுத்தலை அடிப்படையாகக் கொண்டது.

3.      பொருளாதாரத்தை அடிப்படையாகக் கொண்டது.

 

குடும்ப ஒற்றுமை

எந்த ஒரு ஆணும் உங்க அம்மா அப்பாவோட பேசக் கூடாது. உங்க அண்ணன் தம்பி அக்காள் தங்கைகளோடு பேசக் கூடாது என்று சொல்லமாட்டான்.

அவன் பேசாமல் இருந்தாலும் இருப்பானே தவிர தன்னுடைய மனைவியை பேசக் கூடாது என்று ஒருபோதும் கூறுவதில்லை.

ஆனால் பெண்கள் அப்படியா?

திருமணம் முடிந்து மாமியார் வீட்டுக்கு வந்த உடனேயே சி.பி.ஐ மாதிரி எல்லோரைப் பற்றியும் ஆராய்ந்து அவர்களிடம் இருக்கும் குற்றங்களை மட்டும் எடுத்துச் சொல்லும் இயல்பு கொண்டவர்களாக  இருக்கிறார்கள்.

திருமணமான மூன்று மாதத்தில் தனிக்குடுத்தினம்.

கணவன் மனைவு என்பவன் எப்படி இருக்க வேண்டும் தெரியுங்களா?

கணவன் என்பவன் மனைவியின் இரண்டாவது தந்தையாக இருக்க வேண்டும்.

மனைவி என்பவர் கணவனின் இரண்டாவது தாயாக இருக்க வேண்டும்.

அப்போதுதான் அந்தக் குடும்பத்தில் ஒற்றுமை நிலவும்.

 விட்டுக் கொடுத்தல்

கணவனுக்காக மனைவியும் மனைவிக்காக கணவனும் விட்டுக் கொடுத்துப் போனால்தான் குடும்பம் என்பது வளர்ச்சிப் பாதைக்குச் செல்லும்.

அது ஆண்கள் இடத்துலதான் அதிகமா இருக்கு.

நடுவர் அவர்களே

மனுசனுக்கும் புருசனுக்கும் என்ன வித்தியாசம் தெரியுங்களா?

தப்பு பண்ணிட்டு மன்னிப்பு கேட்பவன் மனுசன்

தப்பே பண்ணாம மன்னிப்பு கேட்கிறான் பாருங்க அவன்தான் புருசன்

நடுவர் அவர்களே

செய்தித்தாளில் ஒரு செய்தி படித்தேன். ஒரு பெண் கோர்ட்டுக்குப் போயிருக்கு.

அந்தப் பெண்ணை விசாரித்த நீதிபதிக்கு ஒரே ஷாக்.

என்ன கேஷ் அப்படின்னு பார்த்தால்

நான் சொன்ன கடையில பிரியாணி வாங்கித் தரவில்லை. அதனால் எங்களுக்குள் கருத்து வேறுபாடு எனக்கு டைவேர்ஸ் வாங்கிக் கொடுங்க அப்படின்னு அந்தப் பெண் கேட்டுருக்காள்.

இன்னிக்கு அப்படி இருக்குங்க காலம்.

நடுவர் அவர்களே

அம்மா வீட்டுக்குப் போன மனைவியும்

சர்வீசுக்குப் போன பைக்கும் 4 நாள் நம்ம கண்ரோல்லேயே இருக்காது.

விட்டுக் கொடுப்பவர் ஆண்களே

பொருளாதாரம்

உத்தியோகம் புருச லட்சனம் ன்னு சொல்லுவாங்க. ஆனால் அது இன்னிக்கு மாறிப்போச்சி.

அதுக்காக பொண்ணு பார்க்க வரும்போதே என்னை எங்க அப்பா அம்மா கஷ்டப்பட்டுப் படிக்க வச்சாங்க அதனால என் சம்பலத்தை முழுசா என் அப்பா அம்மாவுக்குத்தான் கொடுப்பேன் அதுக்குச் சம்மதம்னா நான் கல்யாணம் பன்னிகிறேன்னு சொன்ன என்னங்க அர்த்தம்.

அப்போ கல்யாணம்  பன்னிகிட்டு அவன் என்னங்க பன்னுவான்.

நடுவர் அவர்களே

 

எங்க வீட்டு பக்கத்துல ஒரு அம்மா இருக்காங்க. அவங்க வீட்டுக்காரர் 10000 ரூபாய் கொடுத்து மளிகை சாமான் வாங்கிக்கச் சொன்னார்.

இந்த அம்மாவும் வாங்கிகிட்டு வந்தது.

சாயங்காலம் அவர் வந்து என்னம்மா மளிகை எல்லாம் வாங்கிட்டியா. எவ்வளவு ஆச்சி. அப்படின்னு கேட்டாரு.

ஆமா அப்படியே நீங்க கொடுத்திங்களே 10000 ரூபாய். அது பத்தாம என்னோட 250 ரூபாய போட்டு வாங்கிகிட்டு வந்தேன். அப்படீன்னாங்க.

ஐயோ அவவ்வளவு விலை ஏறிபோச்சி அப்படீன்னு அவரு வேலைய பாக்க போயிட்டாரு.

இருந்தாலும் சந்தேகமா இந்த அம்மா எழுதி வச்சிருந்தத எடுத்து பார்த்தவருக்கு ஒரே அதிர்ச்சி.

அந்தம்மா

 

அரிசி 25 கி

ரைஸ் 25 கி

சக்கரை 500

சுகர் 500

பொ. கடலை 2 கிலோ

பொட்டுக்கடலை 2 கிலோ

து. பருப்பு 2 கிலோ

துவரம் பருப்பு 2 கிலோ

 

அப்படீன்னு எல்லாம் ரெண்டு ரெண்டா கணக்கு எழுதி வச்சிருக்கு. இதுல ஒன்ற தன்னோட வீட்டுக்கும்  இன்னொன்ன அம்மா வீட்டுக்கு அனுப்பிட்டு இருக்கு.

 

இப்படி இருந்து குடும்பம் எப்படி ஐயா வளர்ச்சி அடையும்.

 

 

இதுமட்டுமில்லிங்க.

பெண் பார்ப்பதை எல்லாம் வங்க வேண்டும் என நினைப்பாள்.

ஆண் தேவை என்றாலும் இப்போது வேண்டாம் என நினைப்பான்.

இதனால்தான் சொல்கிறேன் குடும்ப வளர்ச்சிக்கு பெரிதும் உதவுவது ஆண்களே ஆண்களே ஆண்களே எனக் கூறி வாய்ப்புக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.


ரோஜாப்பூ மாலையிலே…
ஒரு முல்லைப்பூ சேர்கிறதே…
ரோஜாப்பூ மாலையிலே…
ஒரு முல்லைப்பூ சேர்கிறதே…

இந்த மைனாக்கள் கூட்டத்திலே…
ஒரு சின்ன புறா கூடுதே…
எங்கள் நெஞ்சமெல்லாம் வாழ்த்துதே…

"சலசல சலசல" இரட்டைக் கிளவி
"தகதக தகதக" இரட்டைக் கிளவி
உண்டல்லோ? தமிழில் உண்டல்லோ?
பிரித்து வைத்தல் நியாயம் இல்லை
பிரித்துப் பார்த்தால் பொருளும் இல்லை
இரண்டல்லோ? இரண்டும் ஒன்றல்லோ?