நீர்நிலைகள் சிறியதாக வளர்ந்தாய் போற்றி
நினைத்ததையே நடத்திவைக்கும் நித்யா போற்றி
ஊர்வணங்கும் ஓர்உருவாய் ஆனாய் போற்றி
உறவுக்குள் உறவாகி இருந்தாய் போற்றி
நீர்வாழும் உயிர்த்தோற்றம் கொண்டாய் போற்றி
நான்முகனின் வேண்டுதல்கள் ஏற்றாய் போற்றி
நாரணனே என்துணையாய் இருப்பாய் போற்றி
நஞ்சுண்ட சிவன்மகனின் மாமா போற்றி 32
பிரளயத்தில் உயிரினங்கள் காத்தாய் போற்றி
பூகண்கள் கொண்டவனே புனிதா போற்றி
பரிணாம வளர்ச்சிகாட்டி பிறந்தாய் போற்றி
பாற்கடலில் மேருமலை சுமந்தாய் போற்றி
தருமங்கள் நிலைநாட்ட உதித்தாய் போற்றி
தலைதேவன் மீன்உடலாய் உதித்தாய் போற்றி
பரிவோடு யாவரையும் காப்பாய் போற்றி
பாவங்கள் தீர்ப்பவனே பரமா போற்றி 33
கூர்மமாகி தரையேறி வந்தாய் போற்றி
கமண்டலத்து நீர்உலவி மிதந்தாய் போற்றி
நீர்நிலத்து உயிரினமே கடமம் போற்றி
நதிநீரைக் கடந்துசென்ற மகவே போற்றி
கூரியதந் தம்கொண்ட உயிரே போற்றி
கொடுக்கின்ற அவதாரம் ஆமை போற்றி
கூர்மையான பற்கள்கொண் டஏனம் போற்றி
கோசலையின் புதல்வனாகப் பிறந்தாய் போற்றி 34
ஆமைஉடல் கொண்டமிழ்தம் தந்தாய் போற்றி
அமுதகல சம்தாங்கி வந்தாய் போற்றி
ஆமையாகி தேவரின்னல் தீர்த்தாய் போற்றி
அழிக்காத அவதாரம் கூர்மம் போற்றி
பூமியிலே நான்குகாலில் நடந்தாய் போற்றி
பூவெடுத்து துதித்தயானை மீட்டாய் போற்றி
பூமகளின் மனம்கவர்ந்த புனிதா போற்றி
பூமியினை நுனிகொம்பில் சுமந்தாய் போற்றி 35
தன்வந்தி ரியாகிநோய்கள் தீர்த்தாய் போற்றி
திமிங்கலமாய் படகுகாத்த துணிவே போற்றி
துன்பம்கண் டுபோக்குகின்ற குணமே போற்றி
தொடைமீது வைத்துடல் கிழித்தாய் போற்றி
மனிதகுணம் மிருககுணம் பெற்றாய் போற்றி
முதலையின்வாய் யானைமீட்ட மூலா போற்றி
மனிதஉடல் சிங்கமுகம் கொண்டாய் போற்றி
மந்ரமலை சுமந்தவனே மாலே போற்றி 36
ஆண்பன்றி வடிவமாகி வந்தாய் போற்றி
அறியாமை இருள்போக்கிக் காத்தாய் போற்றி
பெண்வடிவை ஏற்றமிழ்தம் தந்தாய் போற்றி
பாற்கடலில் தோன்றியவள் மணந்தாய் போற்றி
தூணுக்குள் ஒளிந்திருந்த தேவா போற்றி
தேவனுடல் பன்றிதலை கொண்டாய் போற்றி
தூண்பிளந்து பிள்ளைகாத்த தயவே போற்றி
தேவனாக மீனாகப் பிறந்தாய் போற்றி 37
விரல்நகமே ஆயுதமாய் கொண்டாய் போற்றி
வாசலிலே குடியிருந்து காப்பாய் போற்றி
கிருதமாலா ஆற்றில்சி றுமீனாய் வந்தாய்
குடல்மாலை கொண்டவரே குருவே போற்றி
இரணியாட்சன் அழித்துபூமி மீட்டாய் போற்றி
இருட்டுநிறம் கொண்டவனே இனியா போற்றி
இரவுக்குள் அன்னைமாறச் செய்தாய் போற்றி
இன்முகத்தில் காட்சிதரும் இறைவா போற்றி 38
குருசுக்ரன் கண்குருடு செய்தாய் போற்றி
குள்ளமுனி யாகவந்த குந்தா போற்றி
சர்வலோக நாயகனே சம்பு போற்றி
சங்குசக்ர தாரியான சயனா போற்றி
அருகம்புல் ஆயுதமாய் கொண்டாய் போற்றி
அந்தனனாய் குடைதாங்கி வந்தாய் போற்றி
திருவோண திருநாளின் சிறப்பே போற்றி
தாழம்பூ குடையுடைனே வந்தாய் போற்றி 39
கூர்மமாகி மலைதாங்கி இருந்தாய் போற்றி
தங்கைசேலை தந்துமானம் காத்தாய் போற்றி
தேவலோக பசுமீட்ட தேவா போற்றி
திங்களொடு செம்பருதி விழியோன் போற்றி
தசரதனின் உயிரான உயிரே போற்றி
அந்திநேரம் உனக்குகந்த காலம் போற்றி
அவதூறு செய்தவரை அழிப்பாய் போற்றி 40
மோட்சம்தந் திரணியனைக் காத்தாய் போற்றி
மூன்றடிமண் கேட்டுலகை அளந்தாய் போற்றி
ஓட்டுக்குள் ஒளியும்த லைகொண்டாய்ப் போற்றி
ஓரடியில் பூமியினை அளந்தாய் போற்றி
கோடாரி கைக்கொண்ட துணிவே போற்றி
கூப்பிட்டக் குரலுக்கு வருவாய் போற்றி
கோடைமழை யாகவந்து காப்பாய் போற்றி
காமதேனு கவர்ந்தவன் அழித்தாய் போற்றி 41
ஈரடியில் வானத்தை அளந்தாய் போற்றி
இன்பதுன்பம் கலந்தெனக்குத் தருவாய் போற்றி
ஊர்ந்துசெல்லும் ஓர்உயிராய் வந்தாய் போற்றி
உறவுகளை தந்தென்னைக் காப்பாய் போற்றி
நீர்த்துவாரம் அடைத்தவன்கண் அழித்தாய் போற்றி
நிலைத்தபுகழ் வந்தடையச் செய்வாய் போற்றி
நீருக்குள் ஒளிந்துகொண்டு இருந்தாய் போற்றி
நின்பாதம் அடைந்தஎன்னைக் காப்பாய் போற்றி 42
மீன்வணங்கும் மாந்தர்கள் காப்பாய் போற்றி
மணல்வீடு கட்டிவைக்க சிதைத்தாய் போற்றி
மூன்றடிமண் தானமாகக் கேட்டாய் போற்றி
மூவுலகும் காக்கின்ற மூலா போற்றி
மான்விழியாள் மாலைசூட ஏற்றாய் போற்றி
மூவடியை தலைவைத்து மாய்த்தாய் போற்றி
நான்முகனின் தந்தையான நாதா போற்றி
நால்வர்க்கு மூத்தவனே ராமா போற்றி 43
இரகுகுல வம்சத்து தோன்றல் போற்றி
இட்சுவாகு வம்சத்தில் உதித்தாய் போற்றி
இருசுடரை உன்விழியாய்க் கொண்டாய் போற்றி
இலட்சுமனன் சோதரனே இறைவா போற்றி
பரசுகையில் ஏந்திநிற்கும் பகவன் போற்றி
பரவையிலே பாம்பணையில் இருப்பாய் போற்றி
உரமிகுந்த திண்தோள்கள் உடையாய் போற்றி
ஊருசெய்யும் அசுரர்கள் அழித்தாய் போற்றி 44
சத்யவிர தன்கைநீரில் வந்தாய் போற்றி
செங்கமல மலர்விரும்பி ஏற்றாய் போற்றி
சித்தமெல்லாம் நீயாக இருந்தாய் போற்றி
சிரம்தாழ்த்தி வணங்குகின்றேன் உன்னைப் போற்றி
எத்திசையும் புகழ்மணக்கச் செய்வாய் போற்றி
இனியசெயல் செய்திடவே வைப்பாய் போற்றி
சித்திரையில் பௌர்ணமியாய் வருவாய் போற்றி
சிறப்புடனே வாழ்வதற்கு அருள்வாய் போற்றி 45
விண்ணளந்து தேவரினம் காத்தாய் போற்றி
வசிஷ்டமுனி குலகுருவாய் ஏற்றாய் போற்றி
மண்ணுலகில் அவராதம் கொண்டாய் போற்றி
மாகாபலியின் யாகசாலை வந்தாய் போற்றி
விண்ணவர்கள் குறைபோக்கும் விமலா போற்றி
வாய்அமுதம் போலவந்து சுவைப்பாய் போற்றி
எண்ணியதை நிறைவேற்றித் தருவாய் போற்றி
என்னுடலைக் காக்கின்ற மருந்தே போற்றி 46