இன்றைய
உணவுமுறை மக்களைச்
சீரழிக்கிறதே
செம்மைப்படுத்துகிறதே
அனைத்துலகப் பொங்குதமிழ்ச்
சங்கம் நடத்தும் சிறப்புப் பட்டிமன்ற நிகழ்வுக்கு நடுவராக இருந்து நல்லதொரு தீர்ப்பைக்
கூற இருக்கும் அனைத்துலகப் பொங்குதமிழ்ச் சங்கம் மற்றும் பண்ணுருட்டி செந்தமிழ்ச் சங்கங்களின்
தலைவர் மதிப்புறு முனைவர் பாவலர் சுந்தரபழனியப்பன் ஐயா அவர்களுக்கும்,
பட்டிமன்ற விவாதத்தில்
என் கருத்துக்கு வலுசேர்க்கும் எங்கள் அணியினருக்கும்,
மறுத்து வாதாடுகின்ற
எங்கள் எதிர் அணியினருக்கும்,
பட்டிமன்ற நிகழ்வைக்
கேட்டு, எங்களைக் கைத்தட்டி உற்சாகமூட்டக் காத்துக் கொண்டிருக்கும் என் அன்பு உறவுகளுக்கும்,
இதனை இணையத்தின் வாயிலாகவும் தொலைக்காட்சியின் வாயிலாகவு்ம கண்டு கேட்டு இரசித்துக்
கொண்டிருக்கும் அன்பு உள்ளங்களுக்கும் முதற்கண் என் வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நடுவர்
அவர்களே
உணவு இல்லை என்றால்
உலகத்தில் எந்த உயிரினமும் வாழா முடியாது.
கிடைத்ததை உண்டு வாழும்
உயிரினங்களுக்கு மத்தியில் தேடி உண்டு வாழ்பவன் மனிதன்.
குறிப்பாக இன்றைய மனிதன்
நாச் சுவைக்கு அடிமையாகி விட்டான்.
வாழ்வதற்காக உண்ட மனிதன்.
இன்றைக்கு உண்பதற்காக வாழ்கிறான்.
நடுவர்
அவர்களே
இன்றைய
மனிதன் உண்ணும் முறையில்தான் பிரச்சனை இருக்கிறதே தவிர,
உண்ணும்
உணவில் எந்தப் பிரச்சனையும் இல்லை
பசித்த பின்பு உண்ண
வேண்டும். அப்போதுதான் உணவு செறிக்கப்பட்டு உடலுக்குத் தேவையான சத்துக்கள் நம் உடலுக்குக்
கிடைக்கும்.
நடுவர்
அவர்களே
ஒரு பாத்திரத்தில்
காளையில மிச்சமான சாப்பாட்ட போட்டு வைக்கிறிங்க. அதே பாத்திரத்துல மதிய உணவையும் போடறிங்க,
அதே பாத்திரத்துல இரவில் செய்த உணவையும் போட்டு வைக்கிறிங்க.
ஒரு அரைமணி நேரம் கழித்துப்
பார்த்தால் அந்த பாத்திரத்தில் இருக்கு உணவு எப்படி இருக்கும்?
அதைச் சாப்பிட முடியுமா?
கெட்டுப் போயிவிடும்?
அதைக் குப்பையிலதான் கொண்டவேணும்.
அதேபோலத்தான்
நடுவர் அவர்களே
காலை சாப்பாடு செரிப்பதற்கு
முன்பாக மதிய உணவையும் மதிய உணவு செறிப்பதற்கு முன்பாக இரவு சாப்பாட்டையும் நம் வயித்துல
போட்டு வயிற்றைக் குப்பைத்தொட்டியாகி வைத்திருக்கிறோம்.
குப்பையில்
போடுவதை எல்லாம் ஃபுட் பையில் போடுகிறோம்
நடுவர்
அவர்களே
நாம எப்படி சாப்பிடவேண்டும்
என்று சொல்லி தரேன் பாருங்க.
அரை வயிறு உணவு உண்ண
வேண்டும்
அரைமணி நேரம் கழித்து
கால் வயிறு தண்ணீர் பருக வேண்டும்
கால்வயிறு வெற்றிடம்
இதுபோல உண்பவருக்கு
எந்த உணவை உண்டாலும் அந்த உணவு நல்ல உணவாகவே இருந்து உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துகளைத்
தரும்.
நடுவர்
அவர்களே
உங்க வீட்ல கிரைண்டர்
இருக்கா?
மிக்சி இருக்கா? சரி
கிரைண்டர்ல அரிசி,
தண்ணி எல்லாத்தையும் போட்டு ஆன் பன்னுங்க.
அப்போ என்ன ஆகும் மாவு
அரைக்கப்படுமா?
அதேபோல
மிக்சியில பொட்டுக்கடலை,
தேங்காய், மிளகாய், தண்ணி எல்லாத்தையும் ஒன்னா போட்டு ஆன் பன்னுங்க
சட்னி அரைபடுமா? அரைபடாது
இதுபோலதான்
நம் வயிறும்.
சாப்பாடு தண்ணி வெற்றிடம்
இல்லாத வயிறு இப்படி இருந்தா செறிமானக் கோளாறு ஏற்பட்டு வயிற்று வலி உண்டாகும்.
ஆக
பசி வந்தால்தான் சாப்பிட வேண்டும்.
உடல்
உழைப்பு குறைவு
இன்றைய மனிதனுக்கு
உடல் உழைப்பு குறைவு. ஆகவே அவன் அளவோடு உண்ண வேண்டும்.
நடுவர்
அவர்களே
இன்றைக்கும் நாம உயிர்சத்து
அதிகம் உள்ள உணவான, வெண்ணெய், நெய், பால்,
தயிர், முட்டை, மீன் போன்ற உணவுகள் இன்றைக்கும் உண்டுகொண்டுதான் இருக்கோம்.
இன்றைக்கும் உடலுக்குச்
சக்தி தரும் உணவான, அரிசி வகைகள், கேழ்வரகு,
கம்பு, சாமை, வரகு, சோளம், கோதுமை, ஜவ்வரிசி,
கிழங்கு வகைகள் என அனைத்தையும் சாப்பிடடுக்கொண்டுதான் இருக்கிறோம்.
சோற்றுக்கு இணையாக,
குழம்பு, கூட்டு, பொறியல், மசியல், துவட்டல்,
நெய், அப்பளம், ரசம், தயிர் (அ) மோர், ஊறுகாய்ன்னு இத்தனை வகை சாப்பாட்டையும் இன்னைக்குச்
சாப்பிட்டுட்டுதானே இருக்கோம்,
இல்லை
என்று எதிர் அணியினர் சொல்ல முடியுமா?
ஒரு மனிதன் அளவான உணவு,
அதற்கேற்ற உழைப்பு, இணையா ஓய்வு, எட்டு மணி
நேர உறக்கம் இவற்றைக் கடைபிடித்தாள் வளமான உடலையும் நோய் நொடி இல்லாத வாழ்க்கையையும்
வாழமுடியும் எனச் சொல்லி, இன்றைய உணவுமுறை மக்களைச் செம்மைப்படுத்துகிறதே என்று கூறி
விடைபெறுகிறேன் நன்றி வணக்கம்.