Wednesday, September 25, 2024

இரட்டணை நாராயணகவியின் சுய விவரம்

இரட்டணை நாராயணகவி (Rettanai Narayana Kavi), என்கிற முனைவர் க. அரிகிருஷ்ணன் ஆசிரியர், ஆய்வாளர், கவிஞர், எழுத்தாளர், பேச்சாளர், நூலாசிரியர், பட்டிமன்ற பேச்சாளர், பட்டிமன்ற நடுவர், உரையாசிரியர், இலக்கியப் படைப்பாளர் என்ற பன்முகங்களைக் கொண்டவர். யாப்பிலக்கண ஆராய்ச்சியில் பா இனங்கள் குறித்து ஆய்வு செய்து தன் முடிவுகளைத் தந்துள்ளார். பாவினங்களை முழுமையாக கற்றுணர்ந்த காரணத்தாள் சிற்றிலக்கியத்தின் பால் ஆர்வம் கொண்டு பல்வேறு சிற்றிலக்கியங்களைப் படைத்து வருகிறார்.

பிறப்பு

இரட்டணை நாராயணகவி எனும் புனைப்பெயர் கொண்ட முனைவர் க அரிகிருஷ்ணன் இந்தியா, தமிழ்நாடு, விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் வட்டம், இரட்டணை கிராமத்தில் கணேசன்-பார்வதி இணையருக்கு (24.08.1976) அன்று ஒரே மகனாக பிறந்தவர். இவர் மனைவியின் பெயர் அ.இராணிமுத்து, குழந்தைகள் பெயர் அ. இலட்சுமி நாராயணன்(மகன்), அ. கவிபாரதி(மகள்) என்பதாகும்.

பெற்ற கல்வி

மயிலம் ஸ்ரீமத் சிவஞான பாலய சுவாமிகள் தமிழ் கல்லூரியில் 1996-1999 ஆம் கல்வி ஆண்டில் இளங்கலை (B.Lit) பட்டமும், வேலூர் அரசுக் கல்வியியல் கல்லூரியில் 1999-2000 ஆம் கல்வி ஆண்டில் இளங்கலைக் கல்வியியல் (B.Ed) பட்டமும், சென்னைப் பல்கலைக் கழக தமிழ் இலக்கியத்துறையில் 2000-2002 ஆம் கல்வி ஆண்டில் முதுகலை (M.A) மற்றும் 2002-2003 ஆம் கல்வி ஆண்டில் வெண்பாவின் இனங்கள் என்னும் தலைப்பில் ஆய்வியல் நிறைஞர் (M.Phil) பட்டங்களும் பெற்றார். மீண்டும் 2014 ஆம் கல்வி ஆண்டில் மயிலம் ஸ்ரீமத் சிவஞான பாலய சுவாமிகள் தமிழ், கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் “தமிழ்ப் பாவினங்களின் தோற்றமும் வளர்ச்சியும்” என்னும் தலைப்பில் முனைவர் பட்டமும் (Phd) பெற்றுள்ளார்.

பெற்ற விருதுகள்

இவர் தமிழ் மீது ஆர்வம் கொண்டு பல்வேறு அமைபுகளில் இணைந்து தமிழ்ப்பணி ஆற்றியதில், 

  1. ஆகச்சிறந்த ஆளுமை
  2. ஆசிரியர் செம்மல்
  3. ஆசிரியர் பற்றாளர்
  4. ஆய்வுச் செம்மல்
  5. இராச கவி
  6. இலக்கிய ஆய்வுச் செம்மல்
  7. இலக்கிய இமயம்
  8. .வே.சாகவிச்செம்மல்
  9. உழைப்பால் உயர்ந்தோர்
  10. எழுச்சிக் கவிஞர்
  11. கர்மவீரர் காமராசர்
  12. கலித்தொகைக் கவிஞர்
  13. கவிச்சிகரம்
  14. கவிச்சுடரொளி
  15. கவிமணி இலக்கிய விருது
  16. கவியரசர் கவிச்செம்மல்
  17. காப்பிய மாந்தர்கள்
  18. சிற்றிலக்கியச் சிற்பி
  19. சிற்றிலக்கியச் செம்மல்
  20. குழந்தைக் கவிஞர்
  21. குறள் ஆய்வுச் செம்மல்
  22. குறள் வளர்ச் செல்வர்
  23. குறிஞ்சி கவி
  24. சகுந்தலா அம்மாள் நினைவு விருது
  25. சமூக சிந்தனையாளர்
  26. சித்திரைக்கவி
  27. சிறந்த மக்கள் சேவகர்
  28. செந்தமிழ் செம்மல்
  29. செந்தமிழ் பற்றாளர்
  30. செந்தமிழ்ச் செல்வர்
  31. செம்மொழிச் செம்மல்
  32. தமிழ்மொழிச் செம்மல்
  33. திருக்குறள் உரைச்செம்மல்
  34. திருக்குறள் நெறிச்செம்மல்
  35. தேசப்பற்றாளர்
  36. நம்மாழ்வார்
  37. நல்லாசிரியர் மாமணி
  38. நாமக்கல் கவிஞர் உளமகிழ் விருது
  39. பசுமைத் தென்றல்
  40. பாரதி கவிச்செம்மல்
  41. பாரதி காவலர்
  42. பாரதி பணிப்பாவலர்
  43. பாவலர் சுந்தரபழனியப்பன் பற்றாளர்
  44. பாவவர் சுந்தரபழனியப்பன்
  45. பைந்தமிழ் பாரதி
  46. பொங்குதமிழ் கவிச் செம்மல்
  47. பொங்குதமிழ் பாவாணர்
  48. மகாகவி
  49. முத்தமிழ் அறிஞர் விருது
  50. யாப்பின் குழவி
  51. ரோஜாவின் ராஜா
  52. ஜீவகாருண்ய நெறிச்சுடர்
  53. ஹைக்கூ செம்மல்

முதலாக சுமார் 53 விருதுகளைப் பெற்றுத் தமிழ்த்தொண்டு ஆற்றி வருகிறார். மேலும் இவர் சிற்றிலக்கியப் படைப்பின் மீது ஆர்வம் கொண்டு பல நூல்களைப் படைத்துள்ளார்.

ஆக்கிய நூல்கள்

01. திரௌபதி அம்மான் பிள்ளைத் தமிழ்
02. இரட்டணைக் கலம்பகம்
03. வேங்கடவன் காப்புமாலை
04. அழகிய வரதராசன் திருக்குறுந்தாண்டகம்
05. மணிவண்ணன் திரு அங்கமாலை
06. ஐம்படை விருத்தம்
07. திருமால் ஒருபா ஒருபது
08. திருமால் இருபா இருபது
09. திரௌபதியம்மன் நவமணிமாலை
10. வாழ்நெறி பதிற்றந்தாதி
11. ஊர் வெண்பா
12. திரௌபதியம்மன் திரு அட்டமங்கலம்
13. திரு அவதார நாமமாலை
14. திருமால் போற்றி மாலை
15. யாகசேனி புகழ்ச்சிமாலை
16. திரௌபதி உற்பவமாலை
17. யாகசேனி பெருமகிழ்ச்சி மாலை
18. மயிலம் முருகன் இரட்டைமணிமாலை
19. திருவேங்கடவன் மும்மணிமாலை
20. வெண்ணியம்மன் நான்மணிமாலை
21. நல்வழி வருக்கமாலை
22. வசந்தமாலை
23. திருமால் போற்றித் திருநெடுந்தாண்டகம்
24. திருவரங்கத் திருப்பதிகம்
25. திரௌபதி அம்மான் திருநயனப்பத்து
26. இல்லற வள்ளை
27. இல்லற வள்ளை
28. இராம யாண்டுநிலை
29. வெண்ணியம்மன் திருஊசல்
30. நாமக்கல் ஆஞ்சநேயர் அலங்காரப் பஞ்சகம்
31.  செந்தூர் முருகன் செந்தமிழ்மாலை
32. முத்தமிழ் பல்சந்தமாலை
33. குமரக்குழமகன்

என இதுவரை 33 சிற்றிலக்கியங்கள் இவரால் யாக்கப்பட்டுள்ளன. மேலும் தமிழ்ப் பாவினங்களின் தோற்றமும் வளர்ச்சியும் என்ற ஆராய்ச்சி நூல், பாவினச் செய்யுட்கோவை யாப்பு சான்றிலக்கிய நூல் முதலானவற்றை ஆக்கியுள்ளார். 

படைப்பில் உள்ளவை

01. வேதவதி தாரகை மாலை
02. உழவர் ஆற்றுப்படை
03. வாழ்வியல் நூற்றந்தாதி

தொகுப்பாசிரியராக இருந்து வெளியிட்ட நூல்கள்

1. காப்பிய மாந்தர்கள் தொகுதி 1
2. காப்பிய மாந்தர்கள் தொகுதி 2
3. பாவலர் சுந்தரபழனியப்பன் படைப்புலகம்
4. பாரதியார் நூறு பாவலர் நூறு
5. மாண்புடைய மகளிர்
6. பாரதி(தீ)
7. கவிமாலை
8. கவிமலர்கள்
9. பன்முகப் பார்வையில் கவிஞரேறு வாணிதாசன்
10. மீண்டும் பிறந்து வா! பாரதியே!!!
11. விடுதலை என்பது.
12. ஹைக்கூ கவிதைகள்
13. ஆய்வியல் அழகியல்..
14. இந்திய இலக்கியங்களில் தகவல் தொடர்பு
15. திருக்குறள் ஒரு குறள் ஓர் உரை
16. இலக்கிய வரலாறு
17. சுந்தரபழனியப்பன் படைப்புகளில் மானுடவியல் சிந்தனைகள்
18. செம்மொழி வளர்க்கும் பொங்குதமிழ்ச் சங்கம்
19. பன்முகப் பார்வையில் நாமக்கல் வெ. இராமலிங்கம் பிள்ளை
20. கலைஞர் 100
21. பன்னோக்குப் பார்வையில் கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை
22. தாய்மொழி (2024 கவிஞர்கள் (ம) 2024 கவிதைகளின் தொகுப்பு )
23. பன்முகப் பார்வையில் பாவலர் சுந்தரபழனியப்பன்
24. பன்னோக்குப் பார்வையில் சிற்றிலக்கியங்கள்
25. வீரதமிழரசி வேலுநாச்சியர்
26. நாண் மங்கல நாயகர் இராமசாமி அடிகளார்

முதலான நூல்கள் தொகுப்பாசிரியராக இருந்து வெளியிட்டுள்ளார்.

இணைய தளம் இயக்குதல்

இவை தவிர, தமிழ்க்கடல் (www.thamizhkadal.com) என்ற இணைய தளத்தை நடத்தி, போட்டித் தேர்வுகளுக்கான தரவுகளை கொடுத்து வருகிறார். மேலும் தமிழ்கடல் டெக் THAMIZHKADAL TECH என்ற வலையொளியையும் நடத்தி வருகிறார். தற்போது இரட்டணை அரசு மேல்நிலைப் பள்ளியில் பட்டதாரி தமிழாசிரியராகப் பணியாற்றி வருகிறார்.

இங்ஙனம்

அ. இராணிமுத்து
இயக்குநர்,
தமிழ்க்கடல் பதிப்பகம்