மா மா காய்
நம்மைப் படைத்த தெய்வங்கள்
தன்னை உருக்கி பிள்ளைகளை
காக்கும் இயல்பு கொண்டவர்கள்
உன்போல் அவரை எண்ணிடணும்
உரிமை கொண்டு போற்றிடணும்
சின்னச் சின்ன வலிகூட
இல்லா தவரைக் காத்திடணும் 01
அன்னையும் தந்தையும் நம்மைப் படைத்த (உருவாக்கிய) தெய்வங்கள். பிள்ளைகளை காத்து வளர்ப்பதற்காக தன்னையே உருக்கிக் கொண்டவர்கள். உன்னைப் போலவே அவரையும் நினைத்தல் வேண்டும். வயதான காலத்தில் அவர்கள் மீது உரிமைகொண்டு, சின்ன வலிகூட தெரியாமல் அவர்களைக் காத்திட வேண்டும்.
அன்னை யாரென் றறியாத
உயிர்கள் கூட இருப்பதுண்டு
அன்னை இன்றி உயிரினங்கள்
தானாய் பிறக்க வழியில்லை
மனித உயிரும் பிறஉயிரும்
மண்ணில் தோன்றி யமாமுனியும்
அன்னைப் பாதம் தொழவேண்டும்
அவளின் அருளைப் பெறவேண்டும். 02
இந்த நில உலகில், அன்னை யார்? என்று அறியாதவர்கள் கூட இருப்பதுண்டு. ஆனால், அன்னை இல்லாமல் யாரும் தானாய் பிறந்திருக்க மாட்டார்கள். மனிதர்களோ? பிற உயிரினங்களோ? முனிவர்களாய்ச் சென்றவர்களோ? யாராக இருந்தாலும் அன்னையின் பாதத்தைத் தொழவேண்டும். அன்னையின் அன்பைப் பெறவேண்டும்.
தந்தை உழைப்பிற் கீடாக
எதையும் சொல்ல முடியாது
தந்தை என்போர் பிள்ளைக்காய்
மலையைக் கூட தாங்கிடுவார்
சிந்தை முழுதும் பிள்ளைகளின்
வளர்ச்சி நோக்கி பயணிப்பார்
தந்தை தோற்றம் முள்பழமே
பழமாய் உள்ளம் இருந்திடுமே 03
தந்தையின் உழைப்புக்கு ஈடாக வேறு எதையும் சொல்ல முடியாது. தந்தை என்பவர் பிள்ளைகளுக்காக மலை போன்ற வலியைக் கூட தாங்கிக் கொள்வார். அவரின் சிந்தனைகள் முழுவதும் பிள்ளைகளின் வளர்ச்சி நோக்கியே இருக்கும். கோபத்தைக் காட்டுபவராகவும் பார்ப்பதற்கும் பலாப் பழம்போன்று கரடுமுரடாக இருந்தாலும் அவரின் உள்ளம் பலா பழம் போன்று இனிமையானது.
தாயால் வந்த நம்மொழியை
தரணி முழுதும் பரப்பிடுவோம்
வேயா குடிசை பலன்தருமோ
பேசி அதனை வளர்த்திடுவோம்
தேயும் நிலவும் ஒருநாளில்
முழுமை யாக வளர்ந்துவிடும்
ஓயா நமது செய்கையினால்
மொழியும் வளர்ந்து சிறந்திடுமே 04
தாய் தந்த நம் மொழியை உலகம் முழுதும் பரவச் செய்வோம். வீட்டின் மேல் கூரை வேயப்படவில்லை என்றால் அந்தக் குடிசையால் எந்தப் பயனும் இல்லை. அதுபோல பிறரிடம் நம்மொழியைப் பேசாமல் மொழியும் வளர்வதில்லை. தேய்கின்ற நிலவு கூட ஒருநாள் முழுமை அடையும். அதுபோல மொழி வளர்வதற்கான நம்முடைய ஓயாத செய்கையினால் நமது மொழியும் வளர்ந்து செழிப்படையும்.
கண்ணில் தெரியா மின்சாரம்
கையை வைத்தால் தாக்கிவிடும்
கண்ணில் கல்லாய் தோன்றுகின்ற
கடவுள் சிலையும் அதுவாகும்
கண்ணால் காதால் வாயாலே
கண்டு கேட்டுப் புகழ்வோமே
எண்ணம் செயலாய் நாமிருந்து
தொழுது தினமும் பணிவோமே 05
மின்சாரம் கண்களுக்குத் தெரியாது என்றாலும் தொட்டவுடன் தாக்கத்தை ஏற்படுத்தும். கோவில் கருவறையில் உள்ள கடவுள் சிலையும் அப்படித்தான் பார்ப்பதற்குக் கல்லாக தெரிந்தாலும் அதன் சக்தி அளவற்றது. அத்தெய்வத்தை கண்ணால் காண்போம். காதால் கேட்போம். வாயால் புகழ்வோம். சிந்தனையும் செயலையும் இறைவன்பால் வைத்து தினமும் பணிந்து வணங்கிடுவோம்.
வெளிச்சம் இல்லா கருவிழிகள்
பொருளைக் காண உதவிடுமோ?
விளையா நிலத்தில் விதைத்தூவ
விளைச்சல் தந்து செழித்திடுமோ?
பிள்ளை மீது அக்கரைகள்
கொள்ளா பெற்றோர் இருக்கையிலே
பிள்ளை வாழ்வு சிறந்திடுமோ?
மதிப்பு செல்வம் வந்திடுமோ? 06
வெளிச்சம் இல்லாத இடத்தில் கருவிழிகளால் பொருட்களைக் காண இயலாது. விளையாத நிலத்தில் நல்ல விதைகளையே விதைத்தாலும் விளைச்சல் தந்து செழிக்காது. அதுபோல பிள்ளைகள் மீது பெற்றவருக்கு அக்கரை இல்லாத வரையில் அவர் பிள்ளைகளின் வாழ்க்கை சிறப்பத்தில்லை. மதிப்பு மரியாதை செல்வம் எதுவும் கிடைப்பத்தில்லை.
காற்று வீசும் திசைநோக்கி
மெல்ல மெல்ல பறந்தாலும்
காற்றின் வேகம் மிகக்கடந்து
பயணம் எளிதாய் அமைந்திடுமே.
காற்றை எதிர்த்து கடும்பயணம்
செய்தால் வெற்றி கிடைக்காது.
காற்றாய் இருப்போர் பணிவுகொண்டு
வெற்றிக் கனியைப் பறித்திடுவீர் 07
காற்று வீசும் திசையில் கடினமில்லாமல் பறந்தாலும் காற்றைவிட இருமடங்கு வேகத்தில் சென்று இலக்கை அடையலாம். காற்றை எதிர்த்து கடுமையாகப் போராடினாலும் வெற்றி நமக்குக் கிடைக்காது. காற்றுபோல இருக்கும் அதிகாரத்தில் இருப்பவரிடம் பணிந்து தன் செயல்களை முடித்துக் கொள்ள வேண்டும்.
கண்கள் இலாத எறும்புஅதன்
கால மெல்லாம் உழைக்கிறதுகண்கள் இருந்தும் நாமெல்லாம்
சோம்ப லோடு வாழ்கின்றோம்
கண்க ளோடு ஐம்பொறிகள்
அழகாய் படைத்தான் நம்மிறைவன்
கண்டு கேட்டு வாழ்வுதனை
களிப்பாய் வாழ்ந்து கழிப்போமே 08
கண்ணில்லாத எறும்புகள் அதன் வாழ்நாள் முழுவதும் உழைத்து வாழ்கிறது. கண்கள் இருந்தும் நாம் எல்லாம் சோம்பலோடு வாழ்கின்றோம். இறைவன் நமக்கு, மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகிய ஐந்து பொறிகளையும் குறையில்லாமல் படைத்திருக்கிறான். தொடுதல், சுவைத்தல், பார்த்தல், நுகர்தல், கேட்டல் என வாழ்க்கையை இன்பமாய் வாழ்ந்து வாழ்நாளைக் கழிப்போம்.
வேப்பம் பூவின் தேன்துளிகள்
கண்க ளுக்குத் தெரியாது;
வேப்பம் பூவாய் அறிவுரைகள்
ஏற்றால் துன்பம் இருக்காது;
பாம்பின் நஞ்சை இறக்கிவிடும்
நோயைப் போக்கி துடிப்பூட்டும்
வேம்பை நட்டு புவியெங்கும்
வெப்பம் தணித்து வாழ்வோமே 09
வேப்பம் பூவில் உள்ள தேன் துளிகள் கண்களுக்குத் தெரியாது. அதுபோல, பெரியவர்கள் சொல்லும் அறிவுரைகள் கசப்பாக இருந்தாலும் அதனை ஏற்றுக் கொண்டால் துன்பம் இருக்காது. வேப்பமரத்தின் இலைகள், பாம்பின் நஞ்சினைக் கூடப் போக்கும் தன்மை உடையது. அந்த வேப்ப மரத்தினை பூமி எங்கும் நட்டு வெப்பத்தினைப் போக்கி வாழ்வோம்.
நட்பைப் புரிந்து கொண்டவர்க்கு
நாளும் குறைகள் கிடையாது
நட்பாய் பழகும் பகைவருக்கு
நட்பின் அருமை தெரியாது
நட்பே உலக மானிடரை
நயமாய் கட்டி ஒன்றிணைக்கும்
நட்பு கொள்ளா மனிதர்கள்
நிலத்தில் இருக்க வாய்ப்பில்லை. 10
சின்னச் சின்ன ஆசைகளை
குறைத்து வாழ்வில் முன்னேறு
தன்னை உயர்த்த வேண்டுமெனில்
திறமை முழுதும் வெளிக்காட்டு
தனிமை விரும்பிப் போகாமல்
உறவில் மூழ்கி துணைதேடு
உன்னும் சோறு எதுவென்று
அறிந்து உண்டால் நலம்தருமே 11
நகரும் உயிர்கள் யாவையுமே
விரும்பி கூடி தனதினத்தை
தகுந்த முறையில் பாதுகாத்து
கருவை உயிராய் ஈன்றெடுக்கும்
நகரா உயிராய் இருப்பவைகள்
பூத்து ஈர்த்து விதையாக்கி
நகரும் ஒன்றின் வழியாக
விதைத்து விருத்தி செய்கிறதே. 12
அன்பி ருக்கும் இடத்தினிலே
உள்ளம் கொண்டு சேர்க்கின்றோம்
அன்பாய் நாமும் இருந்திடவே
யாரும் எண்ணம் கொண்டதில்லை
அன்பு ஒன்றே நோய்தீர்க்கும்
அன்பு ஒன்றே உயிர்வளர்க்கும்
அன்பு ஒன்றே பலம்சேர்க்கும்
அன்பாய் இருக்கப் பழகிடுவோம் 13
அன்பில் லாத குடும்பத்தில்
அமைதி என்றும் இருப்பதில்லை
அன்பைத் தேடி குழந்தைகளும்
ஆற்று நீராய் ஓடிடுமே
அன்பு ஒன்றே உறவுகளை
அணைத்து கட்டி ஒன்றினைக்கும்
அன்பாய் நாளும் பழகிடுவோம்
அருமை உணர்ந்து செயல்படுவோம் 14
கடவுள் என்பது நம்பிக்கை
எங்கும்
கடவுள் என்பது கொழுகொம்பு
பற்றி வாழ்க்கை கடந்திடலாம்
கடவுள் என்பது போதிமரம்
வாழ்க்கை பாடம் கற்றுதரும்
கடவுள் என்பது கருணைஉளம்
இரக்கம் கொண்டு காத்திடுமே 15
விளம் மா தேமா
அடுக்களைப் பெண்கள் எல்லாம்
அரியணை ஏறி விட்டார்
துடிப்புடன் எல்லாத் திக்கும்
துணிந்தவர் வென்று வந்தார்
தடைகளும் அவர்க்கு இல்லை
தடுத்திட எவரு மில்லை
விடைகொடு வானம் ஏறி
விண்மலர் பறித்துச் சூட 16
பிறர்மனம் நோகா வண்ணம்
பேசிநீ பழக வேண்டும்
பிறர்செயல் குறைசொல் லாமல்
உன்செயல் திருத்த வேண்டும்
பெற்றவர் சொல்லைக் கோட்டு
பெருமைகள் சேர்க்க வேண்டும்
கற்றிடும் கல்வி உந்தன்
வாழ்வினை உயர்த்த வேண்டும் 17
உடல்தசை இழைத்த பெண்ணும்
மலைபொருள் கரைந்த பின்னும்
உறவுகள் வெறுத்த பின்னும்
பலவித சோகம் வந்து
இருவரை துவைத்த பின்னும்
இளமையின் காதல் போல
முதுமையில் இருத்தல் நன்றே 18
மரம்செடி கொடிகள் எல்லாம்
கனியுடன் விதையை வைத்து
பரம்பரைப் பெருக்கம் செய்ய
பிறர்உணக் கொடுத்து நிற்கும்
வரமென மரங்கள் நட்டால்
பெருமழை வாசல் தட்டும்
பரம்பரை வாழ்வ தற்கு
கடமையாய்ச் செய்து வாழ்வோம் 19
கனியுடன் விதையை வைத்து
பரம்பரைப் பெருக்கம் செய்ய
பிறர்உணக் கொடுத்து நிற்கும்
வரமென மரங்கள் நட்டால்
பெருமழை வாசல் தட்டும்
பரம்பரை வாழ்வ தற்கு
கடமையாய்ச் செய்து வாழ்வோம் 19
விளம் மா காய்
காலையில் எழுந்து கல்வியினை
கற்றிட நினைவில் நின்றிடுமே
மாலையில் ஓடி விளையாடு
உடல்மனம் உறுதி ஆக்கிடுமே
சாலையில் நடந்து செல்கையிலே
விதிமுறைப் படியே நடந்திடுவாய்
பாலென ஒழுக்க மாயிருந்து
யாவரும் போற்ற வாழ்ந்திடுவாய் 20
மா மா மா
பண்டம் மாற்று முறையை
மீண்டும் கொண்டு வந்தால்
அண்டம் முழுதும் உள்ள
உழவன் கைகள் ஓங்கும்
மண்ணைக் கீரி விதைகள்
தூவும் அவனின் செயல்கள்
மண்ணின் உயிரைக் காத்தும்
உலகின் பசியைப் போக்கும் 21
மா மா மா மா மா மா விளம்
சோறு போடும் நிலத்தை விற்று
சோறு வாங்கி உண்கின்றீர்
சோறு போடும் மக்கட் கூட்டம்
உள்ளம் நொந்து வேகுதடா
சோறு தண்ணீர் வளம்கு றைய்ய
எதனை உண்டு வாழுவீரோ?
சோறு போடும் தொழிலைச் செய்து
நிலமை மீண்டும் மாற்றிடுவீர் 22
அன்னை தந்தை சொல்லை நீயும்
வேதம் என்று எண்ணிடு
அன்னை தந்தை வழிந டந்து
வாழ்வில் ஏற்றம் கண்டிடு
உன்னைக் காக்க உனைவ ளர்க்க
வாழ்வில் பாடு படுகிறார்
உனது வாழ்வில் உயர்வு காண
கடவுள் வேண்டி நிற்கிறார் 23
சுயந ளங்கள் சிறிது மின்றி
பெற்றெ டுத்து வளர்க்கிறார்
பயன்கொ டுக்கும் என்று சொல்லி
கல்வி கற்க வைக்கிறார்
தயவு இன்றி நீயும் வாழ
வழிகள் செய்து கொடுக்கிறார்
வயத டைந்த பின்னும் உனக்கு
தோள்கொ டுத்து நிற்கிறார் 24
மா மா மா மா
நட்பாய் உறவாய் பழக வேண்டும்
கொண்ட செயலில் உறுதி வேண்டும்
கொடுத்த வாக்கை காக்க வேண்டும்
பண்டை மரபு பேண வேண்டும்
பள்ளி சென்று கற்க வேண்டும்
பண்பா டறிந்து பழக வேண்டும்
பாவச் செயலை ஒதுக்க வேண்டும் 25
பணமே குறிக்கோள் என்றி ருந்தால்
உறவும் நட்பும் பிரிந்து ஓடும்
பணமே வாழ்க்கை என்ப தல்ல
பணமும் வாழ்வின் அங்க மாகும்
பணத்தைத் தேடி ஓடி டாமல்
அதுஉன் கரத்தில் வரவே உழைப்பீர்
பணிவும் கனிவும் இருந்தால் போதும்
குறைவில் லாத வாழ்வு அமையும் 26
பெண்கள் பணிந்தால் உறவு வளரும்
ஆண்கள் பணிந்தால் குடும்பம் உயரும்
கண்கள் இருண்டால் காட்சி மறையும்
கடமை மறந்தால் பலன்கள் குறையும்
எண்ணம் சிறந்தால் செல்வம் பெருகும்
வான வில்லாய் வாழ்க்கை ஒளிரும் 27
மா மா மா மா மா மா மா
கல்வி கற்றால் எல்லாம் மாறும்
என்று சொன்னார் பெரியோர்
கல்வி கற்றோம் பட்டம் பெற்றோம்
மாற்றம் நிகழ வில்லை.
கல்வி யாலே பட்டம் பெற்றோம்அறிவு பெற்றோம் இல்லை
கல்வி அறத்தை ஊட்ட வேண்டும்
நடத்தை அதுபோல் வேண்டும் 28
உடலை கெடுத்து வீணாக்கும்
தேவை மீறி இருக்கும் பணமோ
தனிமை யாக்கி விட்டுவிடும்
சேவை செய்யும் எண்ணம் இருந்தால்
தெய்வம் உன்னை பாராட்டும்
தேவை என்று உறவை சேர்த்தால்
இன்பம் உன்னை சீராட்டும் 29
பணத்தை நம்பி ஓடும் மனிதா
பரித வித்து நிற்பாயே
குணத்தைக் கொண்டு உலகில் வாழ்ந்தால்
குதூக லன்கள் பெறுவாயே
மணத்தால் வண்டு மலரை நாடி
பயணம் செய்து இன்புறுதே
எண்ணம் செயலும் நன்மை தந்தால்
எண்ணம் செயலும் நன்மை தந்தால்
எல்லாம் உன்னில் அடங்கிடுமே 30
விளம் மா காய் மா மா காய்
வாய்மொழி பேசும் மனிதஇனம்
கேட்டுத் தாகம் தணிக்க்கிறது
வாய்மொழி பேசா உயிரினங்கள்
தண்ணீர் தேடி பருகினவே
வாய்மொழி இல்லா மரம்செடிகள்
தாகம் தீர வழியுண்டோ?
தாய்மனம் கொண்டு அவைகாக்க
வாடும் முன்னே நீரிடுங்கள் 31
ஆர்வத் தோடு கல்வி கற்கும்
மாணவர்கள் இன்று இல்லை
தேர்வில் தேர்ச்சி பெற்று பட்டம்
மாணவரால பயனில்லை
ஊரார் போற்ற பாடம் கற்போர்
பேருக்காக பட்டம் வாங்கி
பெருமை தேட நினைக்கின்றார் 32
ஆலம் வித்து உயிர்சு மந்து
ஆசை யோடு அதைவ ளர்த்து
வேலை கொண்டு காப்பது போல்
வேலை கொண்டு காப்பது போல்
காத்து பெற்று எடுக்கின்றார்
பால் என்னும் ரத்தம் தந்து
உன்னை ஒட்டி வளர்க்கின்றார்
தோல் உடம்பை காப்பது போல்
நீயும் காக்க வேண்டுமடா33
பேணி காக்க வேணுமடா
பெண்கள் இல்லை என்றுசொன்னால்
வாழ்வில் இன்பம் இல்லையடா
மண்ணில் உயிர்கள் அன்புடனே
வாழ காரணம் அவர்தானே
எண்ணி காக்க வேணுமடா
எண்ணம் செயலும் துணைகொளடா 34
வெளியில் தெரிய வாய்ப்பு இல்லை
குடும்பம் தாண்டி வெளியில் உள்ளோர்
அக்கரை பச்சை யாகக் காண்பர்
நடப்பதெல்லாம் உறவைத் தாண்டி
நடப்பதெல்லாம் உறவைத் தாண்டி
பிறரிடம் மொழிதல் அழகு இல்லை
குடும்பச் சூழல் அறிந்த நாமே
தடைகள் தாண்டி வெல்ல வேண்டும். 35
உள்ளம் உண்மை யாக இருந்தால்
உருக்கும் துன்பம் நிகழாது
உள்ளத் தூய்மை உடலின் தூய்மை
நோய்கள் உன்னை நெருங்காது
பிள்ளை குணமும் பேதை நெஞ்சம்
என்றும் கலங்கி இருக்காது
பிள்ளை யாக துன்ப மறப்போம்
நாளும் மகிழ்ந்து வாழ்வோமே. 36
அடுக்கு மாடி வீடுகள் கட்டி
அடுக்க டுக்காய் கடனை சுமந்து
துடுப்பில் லாத படகு போல
கவலைக் கடலில் மிதந்து விடாதே
இடையில் உள்ளோர் சொல்லை ஏற்று
தனது நிலையை மறந்து விடாதே
அடுப்பும் இருக்க இடமும் போதும்
ஆனந்த வாழ்க்கை வாழ்ந்தி டலாமே 37
மனைவி ஓரிடம் கணவன் ஓரிடம்
குடும்பம் நடத்தினர் இருவரும் தனித்தனியே
தினம்தினம் படும்துன்பம் தொலைபேசி வழிசொல்லி
ஆறுதல் அடைகின்ற அன்பான குடும்பம்
மனைவி குடும்பத்தைத் திட்டமிட்டு நடத்துகிறாள்
கணவன் சம்பளத்தை உண்ணாமல் அனுப்புகிறான்
அன்புகொண்ட உள்ளத்தில் வஞ்சனைகள் ஏதுமில்லை
இளமைகள் தோற்றன அறுபதாம் திருமணம் 38
பள்ளிக்கு அனுப்பும் பிள்ளை
பாடங்கள் படித்து அறியா
பிள்ளைக்கு சொல்வ தில்லை
பெற்றோரும் தனது வலியை
இளமைக்கு அடிமை யாகி
நட்புக்கள் பாதை செல்வர்.
வளம்குறைந்து போன பின்னே
மனம்வருந்தி பயன் என்ன? 39
உணவுஉடை தந்துவிட்டு தவறுக்கு துணைபோவார்
கற்றுதரும் ஆசான்கள் ஒழுக்கமின்மை கண்டித்தால்
பிள்ளைக்கு சாதகமாய் பள்ளிவாசல் வந்துநிற்பார்.
சுற்றியுள்ள சூழ்நிலைகள் சுழலுக்குள் இழுத்துவிட
சுற்றியுள்ள சூழ்நிலைகள் சுழலுக்குள் இழுத்துவிட
சுழலுக்குள் மாட்டியவர் மீண்டுவர நினைப்பதில்லை
பெற்றவர்கள் இடமிருந்து செல்வங்களைக் கரைசேர்க்க
ஆசான்கள் படும்பாடு சொல்லிமாள முடியாதே 40
பறவை விலங்கு முதலாய் உயிர்கள்
பறவை விலங்கு ஊர்ந்து செல்லும்
யாவும் உணவைத் தேடி உண்ணும்
பசித்தால் உணவைத் தேடி உண்ணும்
பறக்கும் நடக்கும் செயலை யாவும்
விட்டு நாளும் இருந்த தில்லை