Tuesday, July 29, 2025

இரட்டணை மாரியம்மன் பாடல் - 01


ஓடிவரும் மாரியே  ஆடிவரும் தேவியே
எங்ககுலம் காக்கின்ற சக்திமாரி
தொண்டிநதி ஓரமாய் கொலுவிருக்கும் அன்னையே
இரட்டணையின் கோவில்கொண்ட சக்திமாரி 

புத்தாக இருந்தவளே முத்துமாரி
புதுப்பொலிவாய் எழுந்தவளே சக்திமாரி
ஊரெல்லாம் காக்கின்ற முத்துமாரி
உலகையாளும் இளையவளே சக்திமாரி 
(ஓடிவரும் மாரியே)

சித்தமெல்லாம் உன்னைவைத்தோம் முத்துமாரி
சிங்கார ரூபினியே சக்திமாரி
வேண்டும் வரம் தருபவளே முத்துமாரி
வினைதீர்க்கும் நாயகியே சக்திமாரி 
(ஓடிவரும் மாரியே)

அண்டமெல்லாம் காக்கின்ற முத்துமாரி
அன்பருக்கு துணையிருப்பாள் சக்திமாரி
ஊர்செழிக்க செய்திடுவாள் முத்துமாரி
உரிமையோடு வேண்டுகிறோம் சக்திமாரி
(ஓடிவரும் மாரியே)