Tuesday, July 29, 2025

இரட்டணை மாரியம்மன் பாடல் - 02


இரட்டணையில் கொளுவிருக்கும் சக்தி மாரியே - உன்னை
கண்ணார கண்டிடவே ஓடி வந்தோமே
கைகளிலே குங்குமத்தை ஏந்தி நின்றவளே - எங்கள்
குறைகளெல்லாம் தீர்த்திடவே நாடி வந்தோமே

பயிர்செழிக்க வரும்மழைபோல் எங்கள் வாழ்க்கையை - அருள்
பார்வைதந்து காத்திடடி சக்தி மாரியே
அன்புபாசம் கருணைஉள்ளம் கொண்டி ருப்பவளே - உந்தன்
கடைக்கண்ணில் அருள்பார்வை தந்து நிற்பாயே

(இரட்டணையில் கொளுவிருக்கும்)

பாம்புகுடை கொண்டவளே சிங்க வாகினி - எங்கள்
பாவமெல்லாம் போக்கிடடி சக்தி மாரியே
வேம்பினுள்ளே இருப்பவளே குங்கு மக்காரி - நாங்கள்
வேண்டிவரம் கேட்டுநின்றோம் உன்னை தேவியே

(இரட்டணையில் கொளுவிருக்கும்)

பானைவயிறு கணபதியின் அன்னை நீயடி - சிவன்
பார்வதியின் மருஉருவாய் வந்த தாயடி
வெள்ளிசெவ்வாய் தேதியிலே உந்தன் சேவடி - உனை
விருப்புடனே காணவந்தேன் பிள்ளை நானடி

(இரட்டணையில் கொளுவிருக்கும்)