Sunday, November 9, 2025

உன்னோடு கைகள் கோர்த்து

உன்னோடு கைகள் கோர்த்து
உன்னோடு உள்ளம் சேர்த்து
உன்னோடு ஆடி பாட வேண்டும் வேண்டும்
பெண்ணேநான் என்னுள் வைத்து
இமை மூடிட உன்னை காத்து
பொக்கிஷமாய் நெஞ்சில் வைத்து காப்பேன் காப்பேன். - உன்னோடு 

வாழ்க்கையில் பல சுகங்கள்
கண்டோமே நாமே
வரவுகளும் செலவுகளும்
கொண்டோமே நாமே
எப்போதும் ஒன்றாக
எப்போதும் கொண்டாட
உன் உள்ளம் வேண்டும் வேண்டும் . - உன்னோடு 

ஆகாச ஊஞ்சல் கட்டி
அதன் மேலே உன்னை இட்டு
தாலாட்டு பாடுவேன் நானே நானே
பூமஞ்சம் மார்பில் தாங்க
புதுத்தென்றல் உன்னை தீண்ட
சுகமாக வைத்திருப்பேன் நானே நானே . - உன்னோடு