Sunday, November 9, 2025

பட்டாம்பூச்சியின் சிறகடிப்பில்

பட்டாம் பூச்சியின் சிறகடிப்பில்
உடனாய் வந்த துணையும் நீயே
உன்னை என்னுள் சேகரித்து
மலையை ஏறும் வீரன்நான்
நம்மில் வந்த இரு உறவு
இறைவன் தந்த புது வரவு.


பட்டாம் பூச்சியின் சிறகடிப்பில்
உடனாய் வந்த துணையும் நீயே
உன்னை என்னுள் சேகரித்து
மலையை ஏறும் வீரன்நான்


தாயோ உறவை சுமந்துதர
தந்தை முதுகில் தாங்கியெழ
இரண்டும் விழியும் பொருளாகி
உறவில் இணைந்து சங்கமிக்கும்
முன்னைய வரத்தின் பலனாக
இறைவன் தந்த வரமாக
எங்கள் சொந்தம் ஆகினவே
கனவை சுமந்து நடந்தனவே


பட்டாம் பூச்சியின் சிறகடிப்பில்
உடனாய் வந்த துணையும் நீயே
உன்னை என்னுள் சேகரித்து
மலையை ஏறும் வீரன்நான்


வண்ணச் சிறகுகள் துணைக் கொண்டு
வானம் சென்று கனிபறிக்க
இரண்டும் ஒன்றாய் பறந்தனவே
இலக்கை நோக்கி நகர்ந்தனவே
வெற்றிக் கனியும் ஒருநாளில்
கைகள் வந்து சேர்ந்திடுமே
அன்று உள்ளம் குளிர்ந்து இருக்கும் 
இறைவன் ஆசி நிறைந்திருக்கும்

பட்டாம் பூச்சியின் சிறகடிப்பில்
உடனாய் வந்த துணையும் நீயே
உன்னை என்னுள் சேகரித்து
மலையை ஏறும் வீரன்நான்