Thursday, November 13, 2025

தமிழ் வளர்க்கலாம்

தமிழ் வளர்க்கலாம் - நாம
தமிழ் வளர்க்கலாம்
எங்களோடு வாங்க - நாம
தமிழ் வளர்க்கலாம்
அனைத்து உலக சங்கம் - இது
பொங்குதமிழ்ச் சங்கம்
ஊர் ஊரா சுற்றி - நாங்க
தமிழ் வளர்த்து வாரோம்.

தமிழ் வளர்க்கலாம் - நாம
தமிழ் வளர்க்கலாம்
எங்களோடு வாங்க - நாம
தமிழ் வளர்க்கலாம்

அகம்புறமாய் உள்ள
தொகையோடு பாட்டு
வாழ்நெறியைக் காட்டும்
கீழ்க்கணக்கு நூல்கள்
அரசமுறை சொல்லும்
காப்பியங்கள் பத்து
தெய்வம்தொழ வைக்கும்
பலசமயக் கொள்கை
ஆய்ந்துநூல்கள் செய்ய
எங்களோடு வாரிர்

தமிழ் வளர்க்கலாம் - நாம
தமிழ் வளர்க்கலாம்
எங்களோடு வாங்க - நாம
தமிழ் வளர்க்கலாம்

இறைஅரசன் போற்றும்
பள்ளுஉலா நூல்கள்
புறமிருந்து வந்த
அயல்நாட்டு நூல்கள்
புதுமரபில் வந்த
அச்சுகொண்ட நூல்கள்
தரணியெங்கும் இருந்து
இணைந்திருக்கும் நாங்க
இணையத்தோடு இணைந்து
தமிழ்காப்போம் வாரீர்

தமிழ் வளர்க்கலாம் - நாம
தமிழ் வளர்க்கலாம்
எங்களோடு வாங்க - நாம
தமிழ் வளர்க்கலாம்