Thursday, November 13, 2025

கதை சொல்லப் போறேன்

கதை சொல்லப் போறேன்
கதை சொல்லப் போறேன்
எல்லோரும் வாங்க
கதை கேட்கலாம்

பிள்ளைகள் வெள்ளை
காகிதம் போல
பெற்றவர் தீட்டும்
ஓவியம் காட்டும்


கதை சொல்லப் போறேன்
கதை சொல்லப் போறேன்
எல்லோரும் வாங்க
கதை கேட்கலாம்


நம்மோடு கனவு
அவர்களுக்கில்லை
அவரோட கனவை
நாம்தேட வேண்டும்
சொன்னதைச் சொல்லும்
கிளிப்பிள்ளை அவர்கள்
நல்லது சொல்லி
வளர்த்திட வேண்டும்


கதை சொல்லப் போறேன்
கதை சொல்லப் போறேன்
எல்லோரும் வாங்க
கதை கேட்கலாம்


கல்வியே நல்ல
பாதையை காட்டும்
எவ்வழி யாயினும்
கற்றிட வேண்டும்.
நல்லவர் சொன்ன
நல்வழி கேட்டு
பாதையை மாற்று
சிறந்திடும் வாழ்வு